Monday, March 26, 2012
அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்
அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்: புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய்பிளந்து புல்கொடிப் பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் ? மின்கொள்...

திவ்யபிரபந்தம்
புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய்பிளந்து புல்கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் ? மின்கொள் நேமியாய் !
புள்ளின் மெய்ப்பகைக்கடல் கிடத்தல் காதலித்ததே .
.......திருமழிசை ஆழ்வார்
மின்னும் சுதர்சனத்தை கையில் பிடித்திருப்பவனே !
அன்னப் பறவையாய் உருமாறி சதுர் வேதங்களை உபதேசித்தவனே!
கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தாய்.
கருடனை வாகனமாக கொண்டதல்லாமல் கொடியிலும் பாராட்டி வைத்திருக்கிறாய் ,அத்தகைய விநதை புத்திரனுக்குப் பகையானஆதிசேஷன் பாம்பின் மீது
மட்டும் விருப்பமாய் பள்ளி கொண்டிருப்பதின் காரணம் என்ன ?

Sunday, March 25, 2012
அனுபவ முத்திரைகள்: பரிபாடல்,
அனுபவ முத்திரைகள்: பரிபாடல்,: .....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றி...
பரிபாடல்,
.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
... நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றய நிலனும் நீயே
அதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்.....
.......பரிபாடல், நல்லெழுதியார் பாட்டு.
அடுபோர் அண்ணலே! முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்
ஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே!
ஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே!
ஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்
காற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்
நின்னிடத்தில் உளவாயின.

Saturday, March 24, 2012
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: துப்புடை ஆயர்கள்தம் சொல்வழுவாது ஒருகால் துய கருங்குழல் நல்தோகை மயிலனைய நப்பினை த திறமாய் நல்விடைஏழ் அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே தப...
பெரியாழ்வார்
துப்புடை ஆயர்கள்தம் சொல்வழுவாது ஒருகால்
துய கருங்குழல் நல்தோகை மயிலனைய
நப்பினை த திறமாய் நல்விடைஏழ் அவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
... தனியொரு தேர்க் கடவித் தாயோடு கூட்டிய என்
அப்பா ! எனக்கொருகால் ஆடுக செங்கீரை ,
ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே .
...............பெரியாழ்வார் திருவாய்மொழி
ஒரு காலத்தில் வலிமையான யாதவர்கள் சொல்லைத் தவறாமல் ஏற்று
நடந்து சுத்தமான கரிய கூந்தலையும் ,தோகை மயில் போன்ற அழகும் கொண்ட நப்பின்னையை மணக்க,
ஏழு கொடிய எருதுகளையும் அடக்கிய வலிமையுடைய யாதவத் தலைவனே!
வரிசையாய்ப் பிறந்த பிள்ளைகள் மடிய , ரதத்தில் வைகுண்டத்துக்கு அர்ஜுனனைக்
கூட்டிச்சென்று பிள்ளைகளை மீட்டு , பெற்ற தாயோடு சேர்த்த என் அப்பனே!
ஆயர்களுக்காக போரிடுபவனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடவேண்டும்

Thursday, March 22, 2012
அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்
அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்: வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிர் பிளவள வேணும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன் வெயிற்க் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல...
கந்தரலங்காரம்
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிர் பிளவள வேணும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெயிற்க் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல் போல்
கையிற் பொருளுமுதவாது காணுங்கடை வழிக்கே
............ கந்தரலங்காரம் ..அருணகிரிநாதர்
...
நம் நிழல் என்றும் நம்முடனே இருந்தாலும் அவை வெய்யிலில்
நாம் ஒதுங்க இடம் தருவதில்லை. இந்த உண்மை இப்படியிருக்க
நாம் சேர்க்கும் செல்வம் உடல், உயிரை விட்டு நமது ஆன்மா
பிரிந்து செல்லும்போது துணைவரும் நிலை அவற்றிற்கு இல்லை.
ஆதலினால் , ஒளியுடைய கூர்வேல் படையுடைய முருகவேல்
கடவுளைப் போற்றி எஞ்ஞான்றும் வணங்கும் ஏழைப் பக்தர்களுக்கு
நாம் உண்ணும் உணவின் பாதி அளவினுக்காவது அளிக்க வேண்டும்

கோதைதனபாலன்
சித்தர் பாடல்
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே- கெட்ட
பொய்ம் மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே.
........கடுவெளிச் சித்தர்
நல்லவர் உறவை தள்ளுதல் கூடாது.
நாலெட்டு ஆக முப்பத்திரண்டு அறங்களில்
ஒன்றினையும் தள்ளாது அனைத்தும் செய்திடல் வேண்டும்.
பிறர்க்கு தீங்கு தரும் செயல்கள் செய்தல் ஆகாது.
ஒருவருக்கொருவர் பகை போடுமளவு கோள் சொல்லும்
செய்கை எப்பொழுதும் கூடாது.

Wednesday, March 21, 2012
அனுபவ முத்திரைகள்: திருமால்
அனுபவ முத்திரைகள்: திருமால்: .....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும் ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றி...
திருமால்
.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றய நிலனும் நீயே
அதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்......
.......பரிபாடல், நல்லெழுதியார் பாட்டு.
அடுபோர் அண்ணலே! முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்
ஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே!
ஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே!
ஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்
காற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்
நின்னிடத்தில் உளவாயின.
முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றய நிலனும் நீயே
அதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்......
.......பரிபாடல், நல்லெழுதியார் பாட்டு.
அடுபோர் அண்ணலே! முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்
ஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே!
ஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே!
ஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்
காற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்
நின்னிடத்தில் உளவாயின.
அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்
அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளர் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனனைத்துங் காளா மண...
திருமந்திரம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளர் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனனைத்துங் காளா மணிவிளக்கே
.........திருமந்திரம்....
வளமையான எண்ணம் உள்ளவர்க்கு சதையினால் ஆன உடல் கோயில் போன்றது;
வாய் அதன் கோபுர வாசலாகும்; நன் முறையில் செயலாக்கம் கொள்ளும் ஐம்பொறிகளும்
சுடர் விட்டெரியும் தீபங்களாகும்.
தன்னுள் குடியிருக்கும் ஆன்மாவை தெள்ளத்தெளிந்த சித்தமுடையவர்கள்,
சிவலிங்கமாக்கி பார்ப்பார்.

Sunday, March 18, 2012
பரிபாடல்
ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்
பூண் அணி சுவைஇய வாரணி நித்திய
நித்தில மதாணி அத்தகு மதிமறுச்
செய்யோன் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
வைவான் மருப்பிற் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று
ஒடியா உள்ளொமொடு உருத்தொருங்கு உடன் இயைந்து
இடியெதிர் சுழறும் காலுறழ்பு எழுந்தவர்
... கொடியறுபு இறுபு செவிசெவிடு படுபு
முடிகள் அதிரப் படிநிலை தளர
நனி முரல் வளை முடியழி பிழபு....

....பரிபாடல்.....கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப்பாலை யாழ்
நின் திருமார்பில் உள்ள ஆபரணங்கள் இந்திர வில்லை ஒத்தது .அவற்றின் இடையே உள்ள
நித்தில மதாணியோ சந்திரனை ஒத்தது. அந்தச் சந்திரனுக்குரிய மருவைப்போல திருமகள்
வீற்றிருக்கின்றாள். நீ ஆதி வராகமான காலத்தில் வெள்ளத்துள் மூழ்கியெடுத்த திருமகளை
கொம்பிடைக் கொண்டு தழுவதனாலே புள்ளி அளவேனும் அந்த நிலம் வெள்ளத்தால்
வருந்தவில்லை என்ற புகழோடு அத்திரு மார்பு விளங்குகிறது. எதிர்த்து வந்த அவுணர்கள்
கலங்க இடியோசை போல நின் சங்கு முழங்குகிறது.
அனுபவ முத்திரைகள்: திவ்வியபிரபந்தம்
அனுபவ முத்திரைகள்: திவ்வியபிரபந்தம்: ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த இருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து பெருகா நின்ற...
திவ்வியபிரபந்தம்
ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்மேல் பிள்ளையும் பெய்துபெய்து
தருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடை நடவானோ !
கோதைதனபாலன். ....பெரியாழ்வார்
உள்ளங்கால் ஒன்றில் சங்கு ரேகையும், இன்னொன்றில் சக்கர ரேகையும்
கொண்டு அவை முத்திரைகளாக கால் பதித்த இடங்களில் பதிய, கடலொத்த கண்ணனே ! நீ நடக்கும் அழகு கண்டு மனம் இன்புற்று, மேலும்மேலும் இன்புறும் வண்ணம்
மன்மதன் மகன் போன்ற வடிவெல்லாம் அழகுறப் பெற்று நீ தளர் நடை போடுவாயோ !
Saturday, March 17, 2012
அனுபவ முத்திரைகள்: பரிபாடல்
அனுபவ முத்திரைகள்: பரிபாடல்: நின் குணம் எதிர் கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுநீ நெஞ்சத்து சினம் நீடினோரும் சேரா வறத்து ச...
பரிபாடல்
நின் குணம் எதிர் கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை
மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறுநீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா வறத்து சீரி லோரும்
அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்
நின்னிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே
........பரிபாடல் [செவ்வேள்......முருகக்கடவுள்]
உருள்கின்ற மலர்கொத்தையுடைய கடம்பமலர் மாலையணிந்தவனே !
உன் குணங்கள் பாராட்டது எதிர்மறைஉணர்வு கொள்வோரும், சரிவர
புரியாமல் அருந்தவம் போற்றி இருப்பவரையும் வணங்காது இருப்போரும் ,
செருக்கு மிகுந்து சினமே பெருமையாக நெஞ்சில் வளர்ப்போரும், ,
அறம் இல்லாத காரியங்கள் செய்பவரும், இன்றிருப்பதே உண்மை
என்றெண்ணி உலக இன்பங்களை துய்ப்பதில் நாட்டம் கொண்டு மறுபிறவி இல்லை என்று மதிகெட்டு பேசுவோரும் உன் நிழல் அடைய மாட்டார்கள். அடைய நினைப்போரில்
நாங்கள் நின்று உன்னை யாசிப்பது யாதெனில்
'பொருளும், பொன்னும். போகமும் வேண்டாம், மாறாக நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும் கொள்ளும் நிலை ஒன்றே என்றும் போதும்.' என்பதாகும்.
கோதைதனபாலன்.

அனுபவ முத்திரைகள்: திவ்வியபிரபந்தம்: கண்ணனை மாயன் றன்னை கடல்கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சு தனை அனந்தனை அனந்தன் தன்மேல் நண்ணிநன்கு உறைகின் றானை ... ஞாலம்உண்டு உமிழ்ந்த ...
திவ்வியபிரபந்தம்
கண்ணனை மாயன் றன்னை
கடல்கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தனை
அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணிநன்கு உறைகின் றானை
... ஞாலம்உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே
.........நம்மாழ்வார்
விந்தைகள் பல காட்டும் மாயக்கண்ணனை, திருப்பாற்கடலைக்
கடைந்து அமிழ்தெடுத்தவனை, அழியாநிலையாய் ஆதிசேஷன் மீது சயனித்து இருப்பவனை,பிரளயம் காலத்தே உலகம் முழுவதையும்
உள்வாங்கி பின்னர் படைக்கும் காலத்து வெளிவிடுபவனாகிய நெடுமாலை எப்படியெல்லாமும் ஏற்றி பாடலாம் எனும் வகை தெரிகிலேன்..என் செய்வேன். காரணம் காணும் பொருள் யாவிலும்,எந்த உயிரிலும் உட்புகுந்து செயல்படுகிறவன் அவனே அல்லவா.. ..!

Friday, March 16, 2012
மாணிக்கவாசகர்
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ
எண்தோள் முககண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே
.........மாணிக்கவாசகர்
...
உடலும் உயிரும் இறைவன் சிந்தனைக்கே என்றுணர்ந்து அவனை
நம் பக்தியில் திளைக்க வைத்து அவனும் நம்மை ஆட்கொண்ட பிறகு நமக்கு ஏற்படும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பன்றி நாமில்லை. இது மழலை பருவம் தன் பெற்றவரின் அடைக்கலத்திற்கு ஒப்பாகும்.

Monday, March 5, 2012
அனுபவ முத்திரைகள்: திருவருட்பா அகவல்
அனுபவ முத்திரைகள்: திருவருட்பா அகவல்: சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி வையமேல் வைத்த மாசிவ பதியே இன்புறச...
திருவருட்பா அகவல்
சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே ணெண்ணுதோ றெண்ணுதோ
றன்போடென் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெல்லாம் பொருத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
....... இராமலிங்க அடிகளார்.
சிறியேனாகியா யான் இன்புறுகிறேன் என்றோ, இன்புற்றே இருக்க வேண்டுமென்றோ அன்போடு கண்போல் எம்மை காக்கும் அருட்பெருஞ் சிவநிலையே.. !!
செய்த பிழை யாவும் பொறுத்து என்னுள் கருணையையே மழையாக இறங்கச் செய்து ,அது அழகுடன் பெருகி வளரச்
செய்யும் சிவநிலையே.. !!
யான் கொண்டிருக்கும் உள்ளத்தினும் மேலாக, பார்வை அறியும் கண்களினும் மேலாக, ஓம்புகின்ற உயிரினும் மேலாக குளமான எனது உடலில் எங்கணும் நீயே நிரம்பியிருக்கிறாய்
எம்குருவான சிவநிலையே.. !!
கோதைதனபாலன்
Sunday, March 4, 2012
அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா.
அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா.: அந்தநாளும் ஆயர்பாடியின் நன்னாளாய் என்றுமேயானதோ பலராமனும் உன்பவ்யமாய்பொருஞ் சோலைமலை கண்ணுற்றானே கோகுலமே தொடர்வதாய் இன்புறவான்உலகு விட்டொழ...
Subscribe to:
Posts (Atom)