ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இருகாலும் கொண்டு அங்குஇங்கு எழுதினாற்போல் இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற இன்ப வெள்ளத்தின்மேல் பிள்ளையும் பெய்துபெய்து
தருகார்க்கடல் வண்ணன் காமர்தாதை தளர்நடை நடவானோ !
கோதைதனபாலன். ....பெரியாழ்வார்
உள்ளங்கால் ஒன்றில் சங்கு ரேகையும், இன்னொன்றில் சக்கர ரேகையும்
கொண்டு அவை முத்திரைகளாக கால் பதித்த இடங்களில் பதிய, கடலொத்த கண்ணனே ! நீ நடக்கும் அழகு கண்டு மனம் இன்புற்று, மேலும்மேலும் இன்புறும் வண்ணம்
மன்மதன் மகன் போன்ற வடிவெல்லாம் அழகுறப் பெற்று நீ தளர் நடை போடுவாயோ !
No comments:
Post a Comment