Saturday, January 14, 2012

உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்

 உத்திரகோசமங்கை 
  திசிதம்பரனார்  
 அலங்காரத்தில் 

உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் காணும் நினைவு மனதில் பல வருடங்கள் புதைந்து கிடந்தது கடந்த வாரம் இதே தினம் சனிக்கிழமை இரவு  நிறைவேறியது.எனது சக தோழியருடன் சிறப்பு ஏற்பாடு முன்னதாக செய்துவிட்டு காரைக்குடி சுற்றியுள்ள கோயில்கள் தரிசனம் முடித்து இரவு 12 மணிக்கு உத்திரகோச மங்கை அடைந்தோம்.இக்கோயில் ராமநாதபுரம் சமீபமாக வலதுபுறம் சுமார் 9 கிமீ தூரத்தில்  வரும் . இது ஒரு தனித்த சிறு கிராமம்,சுற்றிலும் பொட்டல் நிலங்களே அதிகம். இது ராமநாதபுர    சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழிபாடு திருவாவடு துறை ஆதீனம் கையில்.
இது ஆதி சிதம்பரனார் கோயில். ஆகாயம் மகிமை சொல்லும் சிவன் எழுந்தருளியுள்ளார் . இங்குள்ள நடராஜர் சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டது. வருடம் பூராவும் சந்தனக் காப்பில் இருக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரமன்று சுமார் இருபதுக்கும் மேலான அபிஷேகம் நடைபெறும். தயிர், மாவு அபிஷேகம் போது கயிலாயநாதனை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது. மற்றைய நாளிலோ ,மாதத்திலோ இவை கிடையாது. அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்வர். இதைக் காணவே பெருந்திரளான கூட்டம் அலைமோதுகிறது. நாங்கள் இடிபாட்டுடன் சிறப்பினராகவே உள நுழைந்த போதும்  அமர்ந்தநிலையில் அபிஷேகம் பல கண்டபிறகு, சற்று முன்னேறி உள்ளே சந்நிதியில் நின்றவாறே அலங்காரம் ,தீபாரதனை காணுமுன்....சிவ நாமங்கள் பல சொல்லியும் , பலர் சொல்லக்கேட்டும் இருந்த நிலையை எண்ணும்போது,கால்நரம்புகள்,சதைகள்  ரத்தம் சுண்டியதுபோன்ற உணர்வுடன் வலிமை குறைந்த நிலையில், 'தென்னாடுடைய சிவனே போற்றி'என்ற அந்த சிவன் நாமமே நாவில் வென்று நின்றது. எங்கும் எதிரொலித்தது. ஆமாம் பற்றறுத்து வந்து நிற்பவரைத்தானே சிவன் மகிழ்வுடன் ஏற்கிறான்...என்று நாயன்மார்கள் சொல்லி பாடுவது உணர்ந்தேன்..மனம் நெகிழ்ந்தேன்...
 இது சமயமே ராமநாதபுரம் ராணி, வீட்டார் உள்நுழைகின்றனர். இதற்குள் உற்சவருக்கு அபிஷேகமும் ,அலங்காரமும் முடிகிறது. தீபா
ர்த் தனைக்கு முன்னதாக முறையே பசுமாடு அழைத்து வரப்பட்டு அதற்கு வஸ்திரம் .பூமாலை சார்த்தப்பட்டு தீபம் காட்டி ,திரைசீலை சற்று பாதம் மட்டுமே தெரியும் படியாக விலக்கி அதற்கு காட் டப்படுகிறது.பின்னர் இதுபோன்றே வரிசையாக சிறுவன் ஒருவன்,சிறுமி ஒருத்தி,அர்ச்சகரில் ஒருவர் பின்னர் இறுதியாக ராணி அம்மையாருக்கு காட்டப்பட்ட பிறகே தீபாரதனை வெகு சிறப்பாக  காட்டப்பட ஆருத்ரா தரிசனம் முழுமை அடைகிறது.  மரகத நடராஜர் ,பொன்னிற உடலில் புலித்தோ லொத்த உடையை அரைக்கிசைத்து காட்சி தருதல் கண்கொள்ளா காட்சி. 
வெளி மண்டபத்தில் நடராஜர் வெண்மை கோலத்தில் பார்வதி சம்மேளராய்  காட்சியளிக்கிறார்.
மரகதநடராஜர் அலங்காரம் காலை சிலமணி நேரங்களே இருக்கும். பிறகு மறுபடியும் சந்தனக் காப்பிட்டு நடை மூடுவர், மறுபடியும் அடுத்த வருடமே இந்த வழிபாடு .

  

கோதைதனபாலன் 








 

No comments:

Post a Comment