Tuesday, January 24, 2012

திருமூலர் திருமந்திரம்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை 
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை 
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் 
நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ..... திருமந்திரம் 


உலகத்தில் மனிதனுக்கு சுக ,துக்கங்கள் மாறி மாறி வருவதுவே இயற்கையின் நியதி. ஒன்ற
ில்லாமல் ஒன்று வருவதில்லை. அவ்விதம் வந்தக்கால் நம் மனதை அது சுகமாயினும் சரி,துக்கமாயினும் சரி ஒரே நடுவு நிலைமையான உணர்வில் வைத்து எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்சி இருத்தல் வேண்டும்.அப்படி நின்றவர்க்கு அறிந்திட வேறு ஞானம்ஏதும் இல்லை. என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்க்கு நரகம் இல்லை.இன்பம் வந்தக்கால் அதுவே நிலை என்று இறுமாந்திராமல் துன்பத்தையும் மறவாது சமமாக பாவிக்கத் தெரிந்தவன் தேவருக்கு சமமாகிறான். அந்தப் புனிதமான நடுவு நிலைமை காட்டும் வழியிலே நானும் பரம்பொருளே உன்னை இறைஞ்சி நிற்கிறேன்.

 கோதை தனபாலன்




No comments:

Post a Comment