Saturday, June 30, 2012

அனுபவ முத்திரைகள்: கம்ப இராமாயணம்

அனுபவ முத்திரைகள்: கம்ப இராமாயணம்: கம்பர் ,இராவனணன் போர்க் களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறுமிடத்து, அவனை வெறும் ஒரு சாதாரண தோல்வி அடைந்த வீரனாகக் காட்ட வில்...

கம்ப இராமாயணம்

கம்பர் ,இராவனணன் போர்க் களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறுமிடத்து, அவனை வெறும் ஒரு சாதாரண தோல்வி அடைந்த வீரனாகக் காட்ட வில்லை. நல்ல ஒரு ஞானம் பெற்ற சிவபக்தன் அடங்குதல் போலவும், அவனது வீரம் செறிந்த கைகள், தோள்கள் அடங்கிக் கிடக்கின்றன என்றே பகர்கிறார்.






வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க 
மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க 
மயல்அடங்க ஆற்றல் தேயத் 
தம்அடங்கு
 முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.





வீரமும், சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம் இழந்திருந்தது. இன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

அனுபவ முத்திரைகள்: கோயில் வழிபாடு.

அனுபவ முத்திரைகள்: கோயில் வழிபாடு.: கோயில் வழிபாடு. கோவில் முழுவதும் கண்டேன் - உயர்  கோபுரம் ஏறிக் கண்டேன்  தேவாதி தேவனையான் - தோழி  தேடியும் கண்டிலேனே. சிற்பச் சிலை கண்டேன்...

கோயில் வழிபாடு.

கோயில் வழிபாடு.




கோவில் முழுவதும் கண்டேன் - உயர் 

கோபுரம் ஏறிக் கண்டேன் 
தேவாதி தேவனையான் - தோழி 
தேடியும் கண்டிலேனே.
சிற்பச் சிலை கண்டேன் - நல்ல 
சித்திர வேளை கண்டேன் 
அற்புத மூர்த்தியினைத் - தோழி 
அங்கு எங்கும் கண்டிலேனே.
தூபம் இடுதல் கண்டேன் - தீபம் 
சுற்றி எடுத்தல் கண்டேன் 
ஆபத்தில் காப்பவனைத் - தோழி
அங்கேயான் கண்டிலேனே.
கண்ணுக்கு இனிய கண்டு - மனத்தைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே - தோழி
பயன் ஒன்று இல்லை அடி
உள்ளத்தின் உள்ளான் அடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோவில்
உள்ளேயும் காண்பாய் அடி .




.......கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Friday, June 29, 2012

அனுபவ முத்திரைகள்: ....திருமழிசை ஆழ்வார்

அனுபவ முத்திரைகள்: ....திருமழிசை ஆழ்வார்: வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும்  வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ்  வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ  ...

....திருமழிசை ஆழ்வார்


வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும் 
வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ் 
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ 
வெற்பெடுத்து மாகாத்த மேகவண்ணன் அல்லையே! 

....திருமழிசை ஆழ்வார் 

எம்பெருமானே! நீ மந்தர மலையால் ஆழ்கடலைக்
கடைந்து அதைக் கலக்கியவன். அதோடு விட்டாயா! மலைகளைப் போட்டு கடலில் அணையும் கட்டினாய்!
கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு மலைகள் அரணாய்
இருந்தன. அவற்றை வானரப் படைகளோடு சென்று ப்லான்கையின் கட்டுக்களை அழித்தாய்! கோவர்த்தன மலையை ,குடையாகப் பிடித்து ,ஆயர்குலத்தினரையும்,
ஆநிரைகளையும் காத்த மேகவண்ணன் ஆயிற்றே!

.. திருமால் அருள் புரியும் பாங்கை மலைகளை அவர் கையாண்ட விதங்களைச் சொல்லியே ஆழ்வார் நயமாகப் புலப் படுத்தியுள்ளார்.

Wednesday, June 27, 2012

அனுபவ முத்திரைகள்: Temple Discovered in Indonesia

அனுபவ முத்திரைகள்: Temple Discovered in Indonesia: தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் பதினொன்று,பனிரெண்டாம் நூற்றாண்டின் போதே சோழர்களின் ஆட்சியில் கடல் கடந்து இரண்டாயிரம...

Temple Discovered in Indonesia


தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் பதினொன்று,பனிரெண்டாம் நூற்றாண்டின் போதே சோழர்களின் ஆட்சியில் கடல் கடந்து இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம் நாட்டில் பரவின.சோழர்கள் கடாரம் சென்று தங்கள் வெற்றியை நிலை நாட்டிய பிறகு தமிழர்கள் பலர் அங்கே குடியேறினர்.அவர்கள் வழியாகவே இப்பாடல்கள் அங்கு பரவின. சயாம் அரசாங்கத்தாரால் பல நூற்றாண்டுகளாக ஒரு விழா கொண்டாடப் பட்டு வருகிறது., அந்த விழாவின் பெயர் ''த்ரி யெம்பாவ' , த்ரிபாவ;. என்பதன் பொருள் தெரியாமலே!பொருள் தெரியாமல் சொற்கள் சிதைந்து மந்திரம் போல் உச்சரித்து வருகின்றனர்.



1000 years old Hindu Temple Discovered in Indonesia

Tuesday, June 26, 2012

அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்.

அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்.: பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்து...

திருமந்திரம்.


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலைச் சொரியுமே 




எல்லோரும் வெளியே பார்வையைச் செலுத்துகிறார்கள்.தங்கள் உள்ளே பார்வையைச் செலுத்தி மனதை ஆராய்பவர்கள் சிலரே. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்..!உள்ளே ஐந்து பசுக்கள் ஐந்து புலன்களாய் விருப்பம் போல் மேய்வதை.மேய்ப்பார் இல்லாமல் வெரி பிடித்து திரியும் மாடுகள் அவை. மேய்ப்பார் இருப்பின் .அவற்றின் வெறி அடங்குமாறுச் செய்தால் அவை கட்டுக்கடங்கி ஞானப் பாலைச் சொரிவன. இதனால் பொல்லாதவையும் நல்லவையாய் மாறக் காணலாம்.





....திருமந்திரம்.

அனுபவ முத்திரைகள்: ....திருமந்திரம்

அனுபவ முத்திரைகள்: ....திருமந்திரம்: படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு அத...

....திருமந்திரம்


படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவதற்கு அது ஆமே


....திருமந்திரம் 


''கோயிலில் படமாக உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்குப் போய்ச் சேர்வதில்லை. நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் படமாக உள்ள கடவுளுக்கு அது சென்று சேரும்.

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே சுற்றுத் தூளியுடை வேர்கானிடைக் கன்றின்பின் எற்றுக்...

பெரியாழ்வார்


பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேர்கானிடைக் கன்றின்பின்
எற்றுக்கு என்பிள்ளையைப் போக்கினேன் !என்னே பாவமே !

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் 
என்னிளங் கொங்கை அமுதம்ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோகப் புரியே கானில் கன்றின்பின்
என்இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கல் உடை
கடிவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே! பாவமே! 




......பெரியாழ்வார் 



'
மஞ்சள் பூசிப் பெண்களோடு இந்த ஆயர்பாடியில் திரிந்து கொண்டிருந்தான்.அவர்கள் கட்டி மகிழ்ந்து விளையாடிய சிறு,சிறு வீடுகளைக் கலைத்து, சிதைத்து எங்கும் குறும்புகள் செய்து திரிந்து கொண்டிருந்தவனை ,அவ்வாறு செயாதபடிக்கு, வேடவர்கள் வாழும் 
காட்டிற்கு பசுக்களை மேய்க்க அனுப்பி விட்டேனே! எதற்க்காக அப்படிச் செய்தேன்! 'ஐயோ பாவமே' என்று தன்னைத்தானே யசோதை நொந்து கொள்கிறாள். மேலும்,'அவனுக்கு என் மார்பின் பாலைத் தந்து வளர்த்த நான் அவனுடைய பொன்னடி நோக விடியற்காலையிலேயே காட்டிற்கு ,கன்றுகளின் பின்னே ஏன் இளஞ்சிங்கமாகிய கண்ணனை அனுப்பி வைத்தேனே ..!குடையும்,செருப்பும் கொடுக்காமலே பரல் கற்களை யுடைய பொல்லாத காட்டிற்குள் கால அடி நோகுமாறு கன்றுகளின்பின் ஏன் பிள்ளையை அனுப்பி விட்டேனே !கொடுமை செய்தேனே! ஐயோ பாவமே!' என்றவாறு புலம்புவதாக வடித்த பாடல் நம் மனதையும் உருக வைக்கிறது.

Monday, June 25, 2012

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.: தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் க...

அனுபவ முத்திரைகள்: தேவாரப் பதிகம்

அனுபவ முத்திரைகள்: தேவாரப் பதிகம்: மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அ...

தேவாரப் பதிகம்




மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அவன் எனக்கிருக்க இந்த நேரங்கள் என்னை என்ன செய்யும் என்று வளமைபோல் அஞ்சாமையும்,ஊக்கமும் பிரக்குனாறு ஒரு பதிகம் பாடினார். 



வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பும் இரண்டும் உடனே
 ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே



.............தேவாரப் பதிகம்


எங்கள் தலைவன் சிவபெருமான் பெண் ஒரு பாகமாகக் கொண்டவன்.விஷத்தையே உண்டு கண்டங் கருத்தவன்.
கங்கையையும்,பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் குடிபுகுந்தவன்.அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் ,சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன் ,வியாழன்,வெள்ளி,ஆகிய நாள்களும்,ராகு,கேது என்பனவும் ஒரு தீமையும் செய்ய மாட்டா.அவை எல்லாம் நல்லவைகளே.அடியார்களுக்கு மிகவும் நல்லவை.’

கந்தரலங்காரம்.




தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

............கந்தரலங்காரம். 

விசாலமான வெற்றியை உடைய முருகப் பெருமானின் மயிலே !உலகினில் துன்பங்கள் நீங்கும் பொருட்டு உன்னை முருகப் பெருமான் செல்ல விடுவாரானால் வாடா திசையில் உள்ள மேரு மலைக்கு அப்பாலும்,சூரியனுக்கு அப்பாலும்,பொன்மயமான சக்ரவாள மலைக்கு அப்பாலும் ,எட்டு திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய் 











Wednesday, June 20, 2012

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்: நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன் இருநிலத் தோரும் இயை கென ஈ...

பரிபாடல்..செவ்வேள்


நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன்
இருநிலத் தோரும் இயை கென ஈத்தநின்
தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத்து அவளோடு
மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை ..

பரிபாடல்..செவ்வேள்
கடவுள் வாழ்த்து ..நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

'முருகவேளே! தேவலோகத்தில் நீ எழுந்தருளியிருப்பது
போலவே இவ்வுலகத்தும் எழுந்தருளியிருக்கும் விருப்பத்தைக்
கொண்டு அறிவு எல்லையால் அறியப்படாத கடம்பினை மேவித்
தேவர்கள் அடையும் இன்பத்தை மக்களும் அடைக , என்று திருவருள்
புரியும் திருப்பரங்குன்றத்தின் கண்ணே நீ வள்ளி நாச்சியாரை மனம் புரிந்து
அருளியது வானுலகத்தில் தேவ யானையை மணந்ததர்க்கு மாறாக
இவ்வுலகத்தில் புரிந்த செயல் போலும்.

Sunday, June 17, 2012

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....: திருநாவுக்கரசர்.... எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது. 'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே அடக்குவி...

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது.

'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால்ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே ...

திருநாவுக்கரசரை சமணம் தழுவிய மன்னன் , பலவகையிலும் ,குறிப்பாய் கல்லைக் கட்டி கடல் நீர் நடுவே மிதக்கவிட்டு ,சைவத்தை தூற்றிய காலை இவர் பாடும் பாடலிது.    'எகத்தாளமிடுவோரும்   ஆட்டம் போடுவார்; அவரை நீ அடக்கப் புகுந்தாலும் அடங்கி விடுவர்;பாடாதவரும் பாடுவார்; உன்னை விட்டு விரட்டி ஓட வைத்தாலும்  ஓடுவர்; உள்ளம் உருகியே உன்னை நினைந்து  இருக்கவும் வைத்தாலும் இருப்பார். ; 
 பாட வும்  செய்வர்; பணிந்து செய்யும் வேலைகளையும் செய்வர,   உன் நெற்றிக் கண்ணைத் திறக்காத போதும் நீ காட்டும் நெறிதனை கண்டு செல்பவர்.  இப்படியிருக்க நான் உன்னையே நினைந்திருக்க,உன் அருளாலே  என்னைச் சுற்றியுள்ள சுடுநீரும் தண்ணீராம்; கல்லும் நான் ஈடேறும்  தெப்பமாம். 



இதையே கவியரசு தன் திரைப் பாட ல் ஒன்றில் கண்ணனை நினைத்து பாடும் பாடலுக்கு  கையாண்டுள்ளார்என்பது நினைவு கூரத்தக்கது.

Wednesday, June 13, 2012

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி: குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை இலங்குமரர் கோமான...

.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி


குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை
சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இலங்குமரர் கோமான் இடம் .


.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி 


திருவேங்கடமலை தவிர வேறொரு இடமும் அறியாத குறத்தியர் ,
அழகிய வளையல்கள் கைகளில் ஊஞ்சலாட மூங்கில் மரங்களை வளைப்பார்.
அந்த மூங்கில்களோ சந்திர மண்டலமளவு ஊடுருவி ,ராகுவைத் தவிர்த்து
சந்திரனை விடுவிக்கும்.அத்தகு திருவேங்கட மலையே மேலுலகிலுள்ள
சிரஞ்சீவிகளான புருஷோத்தமன் குடியிருக்கும் ஸ்தலமாகும்.