Tuesday, June 26, 2012

பெரியாழ்வார்


பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேர்கானிடைக் கன்றின்பின்
எற்றுக்கு என்பிள்ளையைப் போக்கினேன் !என்னே பாவமே !

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் 
என்னிளங் கொங்கை அமுதம்ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோகப் புரியே கானில் கன்றின்பின்
என்இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கல் உடை
கடிவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே! பாவமே! 




......பெரியாழ்வார் 



'
மஞ்சள் பூசிப் பெண்களோடு இந்த ஆயர்பாடியில் திரிந்து கொண்டிருந்தான்.அவர்கள் கட்டி மகிழ்ந்து விளையாடிய சிறு,சிறு வீடுகளைக் கலைத்து, சிதைத்து எங்கும் குறும்புகள் செய்து திரிந்து கொண்டிருந்தவனை ,அவ்வாறு செயாதபடிக்கு, வேடவர்கள் வாழும் 
காட்டிற்கு பசுக்களை மேய்க்க அனுப்பி விட்டேனே! எதற்க்காக அப்படிச் செய்தேன்! 'ஐயோ பாவமே' என்று தன்னைத்தானே யசோதை நொந்து கொள்கிறாள். மேலும்,'அவனுக்கு என் மார்பின் பாலைத் தந்து வளர்த்த நான் அவனுடைய பொன்னடி நோக விடியற்காலையிலேயே காட்டிற்கு ,கன்றுகளின் பின்னே ஏன் இளஞ்சிங்கமாகிய கண்ணனை அனுப்பி வைத்தேனே ..!குடையும்,செருப்பும் கொடுக்காமலே பரல் கற்களை யுடைய பொல்லாத காட்டிற்குள் கால அடி நோகுமாறு கன்றுகளின்பின் ஏன் பிள்ளையை அனுப்பி விட்டேனே !கொடுமை செய்தேனே! ஐயோ பாவமே!' என்றவாறு புலம்புவதாக வடித்த பாடல் நம் மனதையும் உருக வைக்கிறது.

No comments:

Post a Comment