Friday, June 29, 2012

....திருமழிசை ஆழ்வார்


வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும் 
வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ் 
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ 
வெற்பெடுத்து மாகாத்த மேகவண்ணன் அல்லையே! 

....திருமழிசை ஆழ்வார் 

எம்பெருமானே! நீ மந்தர மலையால் ஆழ்கடலைக்
கடைந்து அதைக் கலக்கியவன். அதோடு விட்டாயா! மலைகளைப் போட்டு கடலில் அணையும் கட்டினாய்!
கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு மலைகள் அரணாய்
இருந்தன. அவற்றை வானரப் படைகளோடு சென்று ப்லான்கையின் கட்டுக்களை அழித்தாய்! கோவர்த்தன மலையை ,குடையாகப் பிடித்து ,ஆயர்குலத்தினரையும்,
ஆநிரைகளையும் காத்த மேகவண்ணன் ஆயிற்றே!

.. திருமால் அருள் புரியும் பாங்கை மலைகளை அவர் கையாண்ட விதங்களைச் சொல்லியே ஆழ்வார் நயமாகப் புலப் படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment