Saturday, June 30, 2012

கம்ப இராமாயணம்

கம்பர் ,இராவனணன் போர்க் களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறுமிடத்து, அவனை வெறும் ஒரு சாதாரண தோல்வி அடைந்த வீரனாகக் காட்ட வில்லை. நல்ல ஒரு ஞானம் பெற்ற சிவபக்தன் அடங்குதல் போலவும், அவனது வீரம் செறிந்த கைகள், தோள்கள் அடங்கிக் கிடக்கின்றன என்றே பகர்கிறார்.






வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க 
மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க 
மயல்அடங்க ஆற்றல் தேயத் 
தம்அடங்கு
 முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.





வீரமும், சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம் இழந்திருந்தது. இன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

No comments:

Post a Comment