சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே ணெண்ணுதோ றெண்ணுதோ
றன்போடென் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெல்லாம் பொருத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
....... இராமலிங்க அடிகளார்.
சிறியேனாகியா யான் இன்புறுகிறேன் என்றோ, இன்புற்றே இருக்க வேண்டுமென்றோ அன்போடு கண்போல் எம்மை காக்கும் அருட்பெருஞ் சிவநிலையே.. !!
செய்த பிழை யாவும் பொறுத்து என்னுள் கருணையையே மழையாக இறங்கச் செய்து ,அது அழகுடன் பெருகி வளரச்
செய்யும் சிவநிலையே.. !!
யான் கொண்டிருக்கும் உள்ளத்தினும் மேலாக, பார்வை அறியும் கண்களினும் மேலாக, ஓம்புகின்ற உயிரினும் மேலாக குளமான எனது உடலில் எங்கணும் நீயே நிரம்பியிருக்கிறாய்
எம்குருவான சிவநிலையே.. !!
கோதைதனபாலன்
No comments:
Post a Comment