Saturday, March 17, 2012

திவ்வியபிரபந்தம்


கண்ணனை மாயன் றன்னை
கடல்கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தனை
அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணிநன்கு உறைகின் றானை
...
ஞாலம்உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே


.........நம்மாழ்வார்

விந்தைகள் பல காட்டும் மாயக்கண்ணனை, திருப்பாற்கடலைக்
கடைந்து அமிழ்தெடுத்தவனை, அழியாநிலையாய் ஆதிசேஷன் மீது சயனித்து இருப்பவனை,பிரளயம் காலத்தே உலகம் முழுவதையும்
உள்வாங்கி பின்னர் படைக்கும் காலத்து வெளிவிடுபவனாகிய நெடுமாலை எப்படியெல்லாமும் ஏற்றி பாடலாம் எனும் வகை தெரிகிலேன்..என் செய்வேன். காரணம் காணும் பொருள் யாவிலும்,எந்த உயிரிலும் உட்புகுந்து செயல்படுகிறவன் அவனே அல்லவா.. ..!

கோதைதனபாலன் 

No comments:

Post a Comment