புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய்பிளந்து புல்கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அதென்கொல் ? மின்கொள் நேமியாய் !
புள்ளின் மெய்ப்பகைக்கடல் கிடத்தல் காதலித்ததே .
.......திருமழிசை ஆழ்வார்
மின்னும் சுதர்சனத்தை கையில் பிடித்திருப்பவனே !
அன்னப் பறவையாய் உருமாறி சதுர் வேதங்களை உபதேசித்தவனே!
கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தாய்.
கருடனை வாகனமாக கொண்டதல்லாமல் கொடியிலும் பாராட்டி வைத்திருக்கிறாய் ,அத்தகைய விநதை புத்திரனுக்குப் பகையானஆதிசேஷன் பாம்பின் மீது
மட்டும் விருப்பமாய் பள்ளி கொண்டிருப்பதின் காரணம் என்ன ?

No comments:
Post a Comment