Showing posts with label திருமால் போற்றி. Show all posts
Showing posts with label திருமால் போற்றி. Show all posts

Sunday, March 25, 2012

பரிபாடல்,

.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
...
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றய நிலனும் நீயே
அதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்.....



 

.......பரிபாடல், நல்லெழுதியார் பாட்டு.



அடுபோர் அண்ணலே! முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்
ஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே!
ஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே!
ஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்
காற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்
நின்னிடத்தில் உளவாயின.

Sunday, March 18, 2012

பரிபாடல்

ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும்
பூண் அணி சுவைஇய வாரணி நித்திய
நித்தில மதாணி அத்தகு மதிமறுச்
செய்யோன் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
வைவான் மருப்பிற் களிறு மணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று
ஒடியா உள்ளொமொடு உருத்தொருங்கு உடன் இயைந்து
இடியெதிர் சுழறும் காலுறழ்பு எழுந்தவர்
...
கொடியறுபு இறுபு செவிசெவிடு படுபு
முடிகள் அதிரப் படிநிலை தளர
நனி முரல் வளை முடியழி பிழபு....



....பரிபாடல்.....கீரந்தையார் பாட்டு
 நன்னாகனார் இசை
பண்ணுப்பாலை யாழ்


 நின் திருமார்பில் உள்ள ஆபரணங்கள் இந்திர வில்லை ஒத்தது .அவற்றின் இடையே உள்ள
நித்தில மதாணியோ சந்திரனை ஒத்தது. அந்தச் சந்திரனுக்குரிய மருவைப்போல திருமகள்
வீற்றிருக்கின்றாள். நீ ஆதி வராகமான காலத்தில் வெள்ளத்துள் மூழ்கியெடுத்த திருமகளை
கொம்பிடைக் கொண்டு தழுவதனாலே புள்ளி அளவேனும் அந்த நிலம் வெள்ளத்தால்
வருந்தவில்லை என்ற புகழோடு அத்திரு மார்பு விளங்குகிறது. எதிர்த்து வந்த அவுணர்கள்
கலங்க இடியோசை போல நின் சங்கு முழங்குகிறது
.
 

· ·