ஆன்மீகம் என்பது நாம் புரிந்து கொள்ள முடியாத பெரிய விஷயம் அல்ல. யதார்த்த வாழ்வில் மனதார இறைவனை அவன் மகிமையை நினைத்து விட்டாலே போதும் தானாகவே வந்து நமக்கு பலவற்றையும் புரிய வைப்பான்.பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு நேர்ந்த அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்து முத்திரையென தங்கள் நினைவில் பதிக்க விழைகிறேன். இருமாத கடுமையான சிகிச்சைக்குப் பிறகு ஒவ்வொரு மாலை வேளையிலும் தோழியருடன் காலாற நடை பயிலும் பழக்கம் ஏற்பட்டது. அவ்வாறிருக்கையில் ஒருநாள் வழியில் பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிடுவோம். பொதுவாக என்னிடம் பிரார்த்தனை வழிமுறை பழக்கங்கள் எதுவும் என்னிடம் இருந்ததில்லை. அன்றொரு நாள் பெண்மணிகள் பலரும் ஒரு டைரி வைத்துக்கொண்டு அதில் எழுதப்பட்ட பாடல்களை வெகு நேர்த்தியாகவும் பக்திச்சுவையுடனும் பாடக்கண்டேன். பின்னர் ஒரு ஈர்ப்புடன் அந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டேன்.என் மனதில் ஒருநாள் இப்பாடல்களை எல்லாம் தொகுத்து கையடக்கப் பிரதிகளாக அச்சு வார்த்துக் கொடுத்தால் என்ன என்று தோன்ற சக தோழியும் என்னுடன் அதில் பகிர்ந்துகொள்ள விழைந்து இருவரும் குறித்த ஒரு பெண்மணியிடம் அர்ச்சகர் மூலமாக டைரியை கேட்டோம். அதற்கு அப்பெண்மணி சொன்னது 'சும்மா பத்து புத்தகம் அடித்துவிட்டு டைரி தருவதாயிருந்தால் கொடுக்க மாட்டேன் ஐம்பது என்றால் சரி ' என்று சொல்ல மனதில் அடியானாலும் சொன்ன விஷயம் சரி என்றுணர்ந்து என் கணவரிடம் அச்சடிக்கும் பொறுப்பை விட எண்ணினேன். அவர் தனக்கு இதுவிஷயம் நுணுக்கமாய் வராது என்று தனக்குத் தெரிந்த பக்தர் ஒருவரிடம் பொறுப்பைவிட அவரிடம் நான் எழுதி வைத்திருந்த பாடல்களை கொடுத்தனுப்பினேன். சென்றவர் அச்சகத்திலிருந்தே தொலைபேசியில் ஐந்நுறு பிரதி என்றால்தான் அடிக்க முடியும் என்று சொல்ல ,ஒத்துக் கொண்டேன்.பிரதிகள் வாங்கும்பொழுது அவற்றிற்கான செலவு தொகை கொடுக்கப்போக அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் .மாறாக,
இருனுற்று ஐம்பது பிரதிகளை பிரியமாக எடுத்துக்கொண்டார். மறுநாள் கோயிலில் அர்ச்சகரிடம் நுறு கொடுத்து கொடுக்கச் செய்ய போதவில்லை.மீதி உள்ளவற்றையும் சகதோழியுடன் சேர்ந்து கொடுக்கச் செய்தோம்.அவர் தம் பங்கு பணம் எவ்வளவுஎன்று கட்டாயப்படுத்த அடித்துக் கொடுத்தவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.அவர் சொன்ன பதில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; பிரமிப்பானது. அச்சகத்தாரே இது நற்காரியமென தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார். நானும் எனது தோழியும் இறைவனது மகிமையை நினைத்து மலைத்ததுதான் மிச்சம். ஆக மனதார ஆசைப்பட்டது ஒன்றுதான் நாங்கள் செய்தது ....மீதமெல்லாம் இறைவன் நடத்தியது. இதுவும் ஆன்மீக உணர்வின் தாக்கம்தானே.
கோதைதனபாலன்
தன்னைத் தோண்டி ஞானம் காண்பதுவும் ஒரு நல்ல அனுபவமே.
நமது எண்ண உயர்வுகளும் கோபுரம் போன்ற உயர்தர தன்மை ஒத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment