Wednesday, May 9, 2012

அழகர் வர்ணிப்பு பாடல்.

அழகர் வர்ணிப்பு பாடல்.


.........பதினாறுகால் மண்டபம் அந்த பீசர் சவுக்கையில்
பாரளந்தோன் அங்கு வந்து நதிதீரச் செங்கமலன்
அங்கு மானிடர்க்கு காட்சியுமே தானீந்து
அளித்துப் பதவியும் மானிடர்கள் சூழ
...
யானைத் திரள் முன்னடைக்க ஜொலிக்க
குடைகருட்டி சங்கு நாதத்தோடு திருமாலும் வைகையிலே
வண்ணமலர் சொரிய விண்ணில் அரும்பெரிய மாலழகன் திருத்தோளில்
அந்த நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் மாலையினை அணிந்த கார்மேகம்
பவளவர்ணப் புரவிதன்னை வளனதிக்குப் பகவானும் சூழ்ந்திடவே
குவலயத்தோர் கொண்டாட அம்பிகை மீனாள் கும்பிட் டடிபணிய
சிறப்பளிக்க திருவரதன் உள்ளமதில் எண்ணி செப்புவார் தங்கையருக்கு
வைகைநதி மேல்சார்பை அம்பிகைக்கு சீர்வரிசை மாதவனும் அங்கு தந்து
பையறவன் சங்கரர்க்கு வளனதியைப் பாதி பகிர்ந்துமே கீழ்முகமாய்
வடகரையில் புரவிதன்னைச் சூழ்ந்து தென்கரையைத் திரும்பியே மாதவையர்
பால் அபிஷேகம் தர வாங்கியருந்தி பச்சைமால் இச்சையுடன்
நால்வேத வாத்தியங்கள் ரங்கநாதபுரம் திருக்கண் கண்டு நாதனவர் உள் நுழைய
ஐதீகம் மாறாமல் ஷராபு நாயக்கர் கட்டளையில் அனந்தனும் தங்கியிருந்து
இழுத்த கடிவாலமத்தை சுண்டின வேகத்தால் எழுந்ததாம் மாந்தேசி..
குலுக்கிக் குமுரியதாம் முத்துச் செட்டி மண்டபம் கொட்டகைக்குள் பொய் நுழைய
தூத்தினார் பூமலரை எங்கோமான் மேற்ச்சொரிய துடிக்குதாம் மாந்தேசி
அடுத்த திருக்கண்ணுக்குப் போல நினைக்கவே அதிர்வேட்டு போட்டிடவே
எடுத்ததாம் சவாரி தென்னந் தோப்பருகே இடையர் மண்டபத்தை.......
 More

No comments:

Post a Comment