Thursday, March 22, 2012

சித்தர் பாடல்

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித் தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே- கெட்ட
பொய்ம் மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே
.

........கடுவெளிச் சித்தர்


நல்லவர் உறவை தள்ளுதல் கூடாது.
நாலெட்டு ஆக முப்பத்திரண்டு அறங்களில்
ஒன்றினையும் தள்ளாது அனைத்தும் செய்திடல் வேண்டும்.
பிறர்க்கு தீங்கு தரும் செயல்கள் செய்தல் ஆகாது.
ஒருவருக்கொருவர் பகை போடுமளவு கோள் சொல்லும்
செய்கை எப்பொழுதும் கூடாது
.

No comments:

Post a Comment