Friday, March 16, 2012

மாணிக்கவாசகர்

அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ
எண்தோள் முககண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே

.........மாணிக்கவாசகர்
...
உடலும் உயிரும் இறைவன் சிந்தனைக்கே என்றுணர்ந்து அவனை
நம் பக்தியில் திளைக்க வைத்து அவனும் நம்மை ஆட்கொண்ட பிறகு நமக்கு ஏற்படும் இன்பதுன்பங்களுக்கு அவனே பொறுப்பன்றி நாமில்லை. இது மழலை பருவம் தன் பெற்றவரின் அடைக்கலத்திற்கு ஒப்பாகும்.

No comments:

Post a Comment