Saturday, March 24, 2012

பெரியாழ்வார்


துப்புடை ஆயர்கள்தம் சொல்வழுவாது ஒருகால்
துய கருங்குழல் நல்தோகை மயிலனைய
நப்பினை த திறமாய் நல்விடைஏழ் அவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
...
தனியொரு தேர்க் கடவித் தாயோடு கூட்டிய என்
அப்பா ! எனக்கொருகால் ஆடுக செங்கீரை ,
ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே .


...............பெரியாழ்வார் திருவாய்மொழி


ஒரு காலத்தில் வலிமையான யாதவர்கள் சொல்லைத் தவறாமல் ஏற்று
நடந்து சுத்தமான கரிய கூந்தலையும் ,தோகை மயில் போன்ற அழகும் கொண்ட நப்பின்னையை மணக்க,
ஏழு கொடிய எருதுகளையும் அடக்கிய வலிமையுடைய யாதவத் தலைவனே!
வரிசையாய்ப் பிறந்த பிள்ளைகள் மடிய , ரதத்தில் வைகுண்டத்துக்கு அர்ஜுனனைக்
கூட்டிச்சென்று பிள்ளைகளை மீட்டு , பெற்ற தாயோடு சேர்த்த என் அப்பனே!
ஆயர்களுக்காக போரிடுபவனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடவேண்டும்

No comments:

Post a Comment