Sunday, March 25, 2012

பரிபாடல்,

.....அவை அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்தி யாம் கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றினில் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே
...
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றய நிலனும் நீயே
அதனால் நின் மருங் கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றோடு கனலும்.....



 

.......பரிபாடல், நல்லெழுதியார் பாட்டு.



அடுபோர் அண்ணலே! முன்பு கூறப்பட்ட புலன்கள் ஐந்துள்
ஒன்றாகிய ஓசையால் அறியப்படும் ஆகாயமும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் அறியப்படும் காற்றும் நீயே!
ஓசையாலும் பரிசுத்தத்தாலும் ஒளியாலும் அறியப்படும் தீயும் நீயே!
ஓசை,ஊறு, ஒளி,சுவை ,மணம் என்பவற்றால் உணரப்படும் நிலமும் நீயே!
ஆதலால் மூலப்பகுதியும் அறமும் அநாதியான காலமும் ஆகாயமும்
காற்றும் கனலும் கூடிய இம்மூவேழ் உலகத்து உயிர்கள் எல்லாம்
நின்னிடத்தில் உளவாயின.

No comments:

Post a Comment