நின் குணம் எதிர் கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை
மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறுநீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா வறத்து சீரி லோரும்
அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்
நின்னிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே
........பரிபாடல் [செவ்வேள்......முருகக்கடவுள்]
உருள்கின்ற மலர்கொத்தையுடைய கடம்பமலர் மாலையணிந்தவனே !
உன் குணங்கள் பாராட்டது எதிர்மறைஉணர்வு கொள்வோரும், சரிவர
புரியாமல் அருந்தவம் போற்றி இருப்பவரையும் வணங்காது இருப்போரும் ,
செருக்கு மிகுந்து சினமே பெருமையாக நெஞ்சில் வளர்ப்போரும், ,
அறம் இல்லாத காரியங்கள் செய்பவரும், இன்றிருப்பதே உண்மை
என்றெண்ணி உலக இன்பங்களை துய்ப்பதில் நாட்டம் கொண்டு மறுபிறவி இல்லை என்று மதிகெட்டு பேசுவோரும் உன் நிழல் அடைய மாட்டார்கள். அடைய நினைப்போரில்
நாங்கள் நின்று உன்னை யாசிப்பது யாதெனில்
'பொருளும், பொன்னும். போகமும் வேண்டாம், மாறாக நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும் கொள்ளும் நிலை ஒன்றே என்றும் போதும்.' என்பதாகும்.
கோதைதனபாலன்.

No comments:
Post a Comment