Thursday, March 22, 2012

கந்தரலங்காரம்

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிர் பிளவள வேணும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெயிற்க் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல் போல்
கையிற் பொருளுமுதவாது காணுங்கடை வழிக்கே
............ கந்தரலங்காரம் ..அருணகிரிநாதர்

...
நம் நிழல் என்றும் நம்முடனே இருந்தாலும் அவை வெய்யிலில்
நாம் ஒதுங்க இடம் தருவதில்லை. இந்த உண்மை இப்படியிருக்க
நாம் சேர்க்கும் செல்வம் உடல், உயிரை விட்டு நமது ஆன்மா
பிரிந்து செல்லும்போது துணைவரும் நிலை அவற்றிற்கு இல்லை.
ஆதலினால் , ஒளியுடைய கூர்வேல் படையுடைய முருகவேல்
கடவுளைப் போற்றி எஞ்ஞான்றும் வணங்கும் ஏழைப் பக்தர்களுக்கு
நாம் உண்ணும் உணவின் பாதி அளவினுக்காவது அளிக்க வேண்டும்
 
 
கோதைதனபாலன்  

No comments:

Post a Comment