Friday, September 21, 2012

அனுபவ முத்திரைகள்: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...

அனுபவ முத்திரைகள்:

கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொ...
: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்...


கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமா
கக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள்
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.
 தொடர்ச்சி.... கன்னிமார்கள் தெய்வங்கள் ஏழு 
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் ,கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இரு சுடர்களுடனே வானிலே திரிபவரான முனிவர்க்கும் அமரர்க்கும் இடர் கெடுமாறு அருளுகின்ற இணையற்ற நின் பாதங்களைத் தொழ
ுதேம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்..

என்ற வரிகள் அவை.


ஒவ்வொரு சக்திக்கும் பெயரும் எழுத்தும் மக்கள் அமைத்தனர்.இச்சக்திகள் இசை பாடுவதையும் இவ்விசையிநின்றே உலகம் படைக்கப்படுகிறதென்றும் கண்டனர்.இவ்வாறு யைவனோடு ஒன்றியே நிற்கும் சக்தியை 'ஆ,ஈ,ஊ,ஏ.ஐ,ஓ,ஔ'என்று ஏழு குறியீடுகளாக அமைத்து இவை எழிசையைக் குறிப்பதாக கருதியதுமன்றி,ஏழு சக்திகளையும் ஏழு கன்னிகைக ளாகவும் திருக்கோயில்களில் சிலை அமைத்து வணங்கினர்.இம்மரபிநின்றே வானத்தில் தோன்றும் விண்மீன் தொகுதிக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயர் வந்ததோ எனவும் கருத இடமுண்டாகிறது.உலகத்தில் எங்கும் ஏழு கிழமைகள்தாம் என்பதையும் இங்கு ஒப்பிடலாம்.பின்னர் 'சரி,ரி,க,ம,ப, த,நி'என்ற ஏழு சுவரங்களும் அமைந்தன.
 Pg Ramanan. ..நன்றி.

http://www.harappa.com/script/parpola12.html .....இதில் இது சார்ந்த வரலாற்றுக் கூற்று உள்ளது.

கோதைதனபாலன்
 
அதில் நான் கண்ட விபரம்,மற்றும் நான் அ றிந்தது சொல்கிறேன்.6+1 அருந்ததி என்பது பின்னாளில் ஆரிய கலப்பால் வந்த கதை.முன்னாளில் பரிபாடலில் வரும் அறுவர் என்பது கார்த்திகைப் பெண்களைக் குறிப்பது. செவ்வேள் முருகன் பிறப்பு வளர்ப்பு பாடுகையில் இவ்விளக்கம் வரும்.

முன்னதுக்கு ,சிலப்பதிகாரத்தில் ,'அ றுவருக்கும் இளைய நங்கை...' என்று பயின்று வர இவள் அருந்ததி என அறியலாம். மற்றும் அவர்களினூடே புராணம் சொல்லும் ஆண்தெய்வங்கள் ஏற்றி சப்தமாதர் ஆயிற்று..உருவங்களும் அமையலாயிற்று. ஆனால் நாட்டுப் புறங்களில் போற்றிய கொற்றவையை மட்டும் மாற்ற இயலவில்லை. எனவே அது வன துர்கை என்று வழங்கப் பட்டு நாட்டுப் புறங்களில் நாடு கல் ஊன்றி வணங்கும் வழிபாடே இன்றுவரை நீடிக்கிறது.
 தொடர்ச்சி....   நட்சத்திரம் பற்றி பேசுகையில் சப்தரிஷி மண்டலம் அல்லது கார்த்திகைப் பெண்டிர் நட்சத்திரக் கூட்டம் என்றும் சொல்லுவர். அந்நாளில் துருவ நட்சத்திரம், விடி வெள்ளி இவை அறியப்பட்டிருந்தது.எழும் கன்னிமார் என்று இந்த blog.com..ல் திராவிட முத்திரையோடு அறியப் படுமானால் ஒரு சங்கதியை பகிர்ந்து கொள்கிறேன். பண்டைய ஜோதிட நூலில் ஏழு கிரகங்களே பேசப்பட்டன. ராகு,கேது என்பது இல்லை. பின்னாளில் இந்த இரண்டிற்கும் பிரத்யேக வல்லமையான அமைப்பு தந்து நவ கோள்களாக வர்ணிக்கப் பட்டாலும் இவை இரண்டும் கோள்கள் ஆகா. ஏழு கிரகங்களே உண்மை. மற்றும் 27 நட்சத்திர வரிசை மாறி இருந்தது. கார்த்திகை தொடக்கமே அவை சொல்லப்பட்டு பரணி இறுதியாக வைக்கப்பட்டது. இதை துருவ நாடி பேசும்.சத்யசாரியார் எழுதியது. பின்னாளில் இந்த முறையும் மாற்றி வைக்கப் பட்டுள்ளது.அசுபதி தொடங்கும் நிலை ரேவதி இறுதியாக இன்றளவும்நடை முறையில் உள்ளது.கோதைதனபாலன் 

Photo: கன்னிமார் தெய்வங்கள் ஏழு பேர். இன்று வழக்குச் சொல்லாக சப்த மாதர் எனப்படுவர். கடந்த வாரம் ஒரு கிராமத்து கரந்தமலை ஐயனார் கோயிலில் இவர்களுக்கான சிலை வடிவம் கண்டேன். அதுவரை மறந்து போயிருந்த எனக்கு கருவூருக்கு அருகில் பொன்னர் சங்கர் வாழ்ந்த இடமாகக் கருதப் படும் வீரப்பூர் என்ற இடத்தில் பழமையின் அடையாளச் சின்னங்களாய் பார்த்த கன்னிமார் தெய்வங்கள் என்ற பெயரில் நடுகற்கள் ஊன்றப்பட்டு அதற்கு வழிபாடு நடந்ததை அறிந்து கொண்ட நினைவு மனதில் அலைமோதியது. பின்னர் யதார்த்த சூழ் நிலையாக நூலத்தில் ஒரு புத்தகம் எடுக்க அதில் இருந்த தகவலை இங்கு பகிர்கின்றேன்.
தமிழ் இலக்கியச் செய்திகளை ஆராய்ந்து பார்க்கும் போது, பெண்தெய்வ வழிபாடே ஆதி அந்தமுமாய் வழக்கத்தில் இருந்து வருவதை அறியமுடிகிறது. இவற்றை மூன்று வகையாய் நெறிப்படுத்தலாம். ஆரம்பம் அவர்களை கன்னிமார் ஸ்தானத்தில் வைத்து நடுகற்கள் ஊன்றி கொற்றவை என்ற பெயரில் சக்திதனைக் கூட்டி நம் சங்ககாலம் முந்தைய காலம் தொட்டே வணங்கி வரும் வழிபாடு. இரண்டாவது அதை தாய் ஸ்தானத்திற்கு வைத்து காளி அம்சமாய் வணங்கி வருதல். இது ஆரியக் கலப்பு ஏற்பட்டு ,சமய நல்லிணக்க காலக் கட்டத்தில் ஆரம்பித்து வழிவருதலாகும்.இந்தத் தாய் வழி பாட்டுக்குப் பிறகே இன்னும் சற்று எண்ண உணர்வுகள் மேலிட பத்தினி தெய்வ வழிபாடு தோன்றிற்று.
பழந்தமிழரின் வழிபாடு என்றுமே இயற்கையை அடிப்படையாகக் கொண்டு வருதலாம். அதன் படிக்கு தெய்வத்தின் பெயர்கள், காடுகிழாள், காடு கெழு செல்வி, கொற்றவை , காளி என்றவாறு பல அமைந்துள்ளன. ஏழு கற்கள் ஊன்றப் பட்டு வணங்குதல் இதன் முறைமை. இரண்டாவது நிலையில்,ஆண் தெய்வங்களுடன் இணைக்கப் பட்டு வழிபடும் முறைமை. சிவதுர்கை, விஷ்ணு துர்க்கை என்பதெல்லாம் இதில் அடங்கும். இது பற்றி சிலப்பதிகாரம் முதல் அறிப்படுகிறது. பின் பத்தினி தெய்வமாய் வழிபடும் முறையை அவ்விலக்கியம் தொட்டே அறியலாம். தோழி ஒருத்தி கண்ணகிக்கு இவ்வழிபாடு முறையை ஏற்கும் படி அறிவுறுத்த சமண மதத்தை சார்ந்தவளாகிய அவள் அதை தவிர்த்து விடுவாள். இந்த சமயத்தில்தான் சப்த கன்னிகள் என்பதும், சற்று திரிதலுடன் சப்த மாந்தர்கள் 
என்றும் சொல்லப் படுதலாயிற்று. இவற்றின் பெயர்கள் முறையே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி. பண்டைத் தமிழரிடையே கன்னிமாருக்கு ,உயர்பலி, ரத்தப்பலி கொடுக்கும் பழக்கம் கொடூர முறையில் இருக்க , நாடு விடுதலை பெற்றதும் உயிர் வதை சட்டத் தடுப்பில் வெகுவாக மறைந்து, இன்று சற்று அங்கொன்னும் இங்கொன்னுமாய்க் காணப்படுகிறது. படித்தவர்கள் பெருகி வரும் இந்நாளில் இந்தப் பலியிடும் முறை முழுவதும் மறையலாம்.

Wednesday, September 19, 2012

அனுபவ முத்திரைகள்: பிள்ளையார்

அனுபவ முத்திரைகள்: பிள்ளையார்: பிள்ளையார் ! இந்தப் பிள்ளை யார் ? மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத...

பிள்ளையார்



பிள்ளையார் ! இந்தப் பிள்ளை யார் ? மனமே நீ சுவையாக அசை போடுகிறாயே. இந்த மராட்டிய இறக்குமதி தெய்வத்திற்கு வயது வரம்பில்லாமல் பக்தி செலுத்தும் ஞான பூமிதான் இந்த பாரதம். திருவிழாவோ, பண்டிகையோ சொல்லி நாம் புதுசு அடைவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்தப் பிள்ளையாண்டனுக்குத்தான் எத்தனை எத்தனை விதமான படையல்கள்; அலங்காரங்கள்; இனிய வரலாறுகள்; அருமையான பாடல்கள்! ஒவ்வொரு விருப்பத்திற்கும் உண்டான தெய்வங்கள் பல உண
்டு; ஆனால் விருப்பப்படியெல்லாம் அழைக்கப்படுபவன் இவன் ஒருவனே. அருளும் விதமோ ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். இவனுக்கென்று கோயில் கேட்கமாட்டான். கட்டும் கோயில்களில் எல்லாம் ஒரு சிறு பங்கு வாங்கிக் கொள்வான். ஆத்தோரம் கண்டால் விடமாட்டான்; அங்கேயே ஒரு அரசமரமோ,ஆலமரமோ கண்டு யோகமூர்தியாய் உட்கார்ந்து விடுவான். தினம் ஒரு குடம் தண்ணீர் ஊற்றச்சொல்லியே மனம் குளிர்வான்,வேண்டும் வரம் தருவான். அதோடு விடுவானா, மலையைக் குடைந்தும், அதன் உச்சி மீதும் அமர்ந்து கொள்ளும் உச்சிப் பிள்ளையார் இவன். இவனை சைவமோ,வைணவமோ முழு உரிமை கொண்டாடாதபடி பாதுகாத்துக் கொள்வதில் தந்திரகாரன்; சமர்த்தன். சிவத்தலங்களில் நெற்றிப் பட்டையோடு எப்பொழுதும் காட்சி அளிப்பவன் அழகர் கோயிலில் நெற்றியில் ராமத்துடன் காட்சி அளிப்பான். குறைகளை இவனிடம் சொல்லப் போனால் தனது பார்வையாலே நம் குறைகளை ஒரூ கணம் மறந்து விடச் செய்யும் உன்னத தெய்வம் இவன்! பெரும் வயிறு கொண்ட இந்த யானை முகத்தோனுக்கு ஒரு சின்ன எலி வாகனமாம். வேடிக்கையான கலியுக விந்தை தெய்வம் இவனே. தொட்டது துலங்க பிடித்து வைக்கும் மஞ்சள் பிடிப்பிலும் எழுந்தருளி காட்சி தருபவன், அருள் புரிபவன் இவன் ஒருவனே ! இந்த ஞான சித்து விளையாட்டு கொண்ட தெய்வத்தை இந்த நன்னாளில் நாம் இனிதே உள்ளம் குளிர்ந்தே வணங்குவோம்.


கோதைதனபாலன் சுய அனுபவம்: 



இன்று ஊரே கோலாகலமாய் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி விழாவில்
ஞான மூர்த்தி பிள்ளையாரின் சித்து விளையாட்டு ஒன்று, என் வாழ்வின் ஒரு மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்து விட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் பெரிய , தவறாது மந்திரம் சொல்லி, விரதம் கடைப்பிடிக்கும் பக்தை அல்ல. சாதாரணமாய் சிறு வயதில் வெள்ளிக் கிழமையானால் பிள்ளையார் கோயிலுக்கு அம்மாவின் கட்டளைப் படி விளக்கிற்கு எண்ணெய் ஊற்றி வந்திருக்
கிறேன். பிள்ளையார் சுழி போட்டு எதையும் எழுதத் தொடங்குவேன். மற்றபடி ஒரு தெய்வத்தின் மீது பயத்துடன் கூடிய ஒரு பக்திக்கு மேல் பெரிதான காரியங்கள் நான் செய்ததில்லை. இப்படியிருக்கையில் சில வருடங்களுக்கு முன்னால் அருகிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு ஏதாவது என்னால் ஆனது செய்யலாம் என்ற எண்ணத்தோடு, ஆசை மேலிட கோயிலுக்குச் சென்றேன். அர்ச்சகரிடம் பணிவாக என் விருப்பத்தை சொல்லலானேன். ‘கோயிலில் எல்லாம் வேண்டுவன வைத்திருப்பீர்கள்; இருந்தாலும் நானும் ஒன்று பிள்ளையாருக்கு வாங்கி வைக்க ஆசைப் படுகிறேன். பூஜை சாமானம் ஏதும் குறிப்பிட்டது வேண்டுமா’ என்று கேட்க, அவர், ‘வேண்டாம் அவையெல்லாம் இருக்கிறது.’ ‘சரி, அப்போ அலங்காரத்துக்கான வெள்ளியிலான பொருள் வேண்டுமா ‘ அவையும் வேண்டுமளவு உள்ளது.’ ‘கண்கள், தந்தம் இந்த உறுப்புகளுக்கான வெள்ளி
அணிகலன் வாங்கித் தரலாமா/’... ‘எல்லாமே இருக்கிறது.’ என்றார். நாங்கள் குழம்பி விட்டோம். ‘சரி என்னதான், ஏதாவது சொல்லுங்கள் முடிந்ததைச் செய்கிறோம்;, என்று கேட்க அவர் சொன்னது என்னையும் என்னுடன் வந்தவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் சொன்னது, ‘விக்கிரகத்திற்கு சாற்ற துணி இல்லை, திரையும் இல்லை; அவற்றை வேண்டுமானால் வாங்கிக் கொடுங்கள்’ மனதிற்குள் சிரிப்பு மேலிட்டாலும் மனமகிழ்ந்து அவரிடமே அளவு கேட்டு ,மறுநாள் இரண்டையும் வாங்கிக் கொடுத்து வந்தோம். தையல் கூலியும் நாங்களே தருவதாகவும் சொல்லி பொறுப்பை அவரிடமே விட்டு விட்டு பிள்ளையாரை வணங்கி வந்தோம். பின்னர் அந்த வார இறுதியில் ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன் ,கோயிலுக்குச் சென்று உள்ளே ஒரு வலம் வரும்போது எங்கள் நெஞ்சம் விம்மியது. அது ஒரு வகை பரவசத்தால். ஆமாம், அன்று அங்கிருந்த பிள்ளையார் மட்டுமல்ல, ஆஞ்சநேயரும் ,முருகரும், துர்க்கையும் நாங்கள் தந்திருந்த துணியினால் ஆன அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். ஒரு தெய்வத்திற்கென்று நினைத்துச் செய்ய, ஏனைய பரிவார தெய்வங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றிருந்த காட்சி, பிள்ளையாரின் திருவிளையாடல்தானே!
அவனது ஞானத்தின் பெருமையை அவன் , அன்று எங்களை உணர வைத்தான்.
  





















Sunday, July 29, 2012

அனுபவ முத்திரைகள்: பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.(அழகர் கோயில் கா...

அனுபவ முத்திரைகள்:
பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.

(அழகர் கோயில் கா...
: பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு. (அழகர் கோயில் காவல் தெய்வம் ! வர்ணிப்பு பாடலில் .) சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க ...

பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.

(அழகர் கோயில் காவல் தெய்வம் ! வர்ணிப்பு பாடலில் .)

சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க
சந்தனக் கருப்ப னொன்னு சங்கிலி கருப்பன் இரண்டு
காளாங்கிக் கருப்பன் மூணு
உச்சிக் கருப்பன் நாலு ஊமைக் கருப்பன் அஞ்சு
உருளு தேரடிக் கருப்பன் ஆறு
ஆறு கருப்பனுக்கு ஏழாவதாக பெரிய கருப்பன் எசமானாகஏழு கருப்பனும் பிறக்க



அந்திமாடன் சந்திமாடன் ஆகாயமாடன் சுடலைமாடன்
லாடனென்ற சந்நியாசி ஆக மாடன் வகையி லைந்தும்
மாடன் வகையி லைந்தும் அஞ்சும் ஏழும் பன்னிரண்டு
சங்கன் சமயன் பனிரெண்டும் இரண்டும் பதினாலு
சப்பாணி சோனை சமர்த்தர்கள் காவல் ஆகப்
பதினாலு ரெண்டும் பதினாறு
வீரபத்திர னென்னும் அக்னி வீரன் அடங்காத இருளன்
வீரன் வகையில் இவர்கள் இணைப்பு பதினெட்டு
அந்தப் பராசக்தியின் துர்க்கை என்ற ஒன்பது பிறவியிலே
மூணு பிறவி
ஏ அம்மா! ஆத்தாள் பரமேஸ்வரி படிவாசல் சக்தி
வல்லிப ராபரி- அவள்
பேச்சி யென்றும் இருளாயி யென்றும் ராக்காயி எனவும்
ஆக இவர் பிறவி மூணு வகை
பதினெட்டு மூணுங் கணக்கு பந்தி இருபத்தி யொன்னு
அஞ்சிரண்டு ஏழு இவர்களுடன் பந்தி அடங்க இருபத்தி யொன்னு
இருபத்தோர் பந்தி அருபதோர் சேனைதளம்
அடக்கி அரசால அய்யன் குருநாதன்
கம்பிகளைத் தானே வாகுடனே கட்டிக் கரைகாத்துவரப்
பிறந்த மக்களெல்லாம் கூட்டி மலையாள நாடு மந்திர
மகாராசன் கோட்டை வந்து தங்கி இருக்கையிலே
பிறந்தாய் மலையாளக் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தால் கீழ்நாடு
சிறந்தாய் மலையாளம் கருப்பனுட சேனைத்தளம் சிறப்படஞ்ச கீழ்நாடு
பிறந்தாய் மலையாளம் கருப்பன் துலங்குவது கீழ்நாடு....
 .........அழகர் வர்ணிப்புப் பாடல்

இந்த ஆடி மாதத்தில் அழகர் கோயிலில் கள்ளழகர் தன் கருவறைக்குச் செல்கிறார். இது சமயம் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்புக்கு சந்தனக் காப்பு வைபவம் நடந்தரங்கேறும்.
 

Saturday, July 28, 2012

With nice memories of last year.


With nice memories of last year.
 
Starring Aravindh Yadav.
A video slideshow by Kothai Dhanabalan, featuring 34 photos from Madurai, Rameswaram, Kanchipuram.

Friday, July 27, 2012

அனுபவ முத்திரைகள்: தமிழனுக்கு மதம் யாது! அது ஏது !மதங்கள் எங்கும்...

அனுபவ முத்திரைகள்:
தமிழனுக்கு மதம் யாது! அது ஏது !


மதங்கள் எங்கும்...
: தமிழனுக்கு மதம் யாது! அது ஏது ! மதங்கள் எங்கும் பரவிக் கிடக்கும் இவ்வுலகத்தில் ,சற்று பின்னோக்கி பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்...

Wednesday, July 11, 2012

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.: தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந் தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்டதண்ட வெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு ம...

கந்தரலங்காரம்.


தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்டதண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட காவலனே



.........கந்தரலங்காரம்.



வேகம் நிறைந்தவன் , தண்டாயுதத்தை ஏந்தியவன்.முன்னொரு காலத்தில் மண்ணுலகையும்,விண்ணுலகையும் கவர்ந்தவனுமான .
சூரபத்மன் தங்களை நெருங்குவதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓட ,அப்போது தான் வேலாயுதத்தை விட்டெறிந்து,தேவர்கள் தங்கள் உலகை விட்டுச் செல்லாதபடிக் காத்த முருகப் பெருமானே!
தங்கள் ஞானக் கண்ணால் பார்த்து ,தமது ஞான நெறியால் உன்னை நெருங்கி ,உனது மெய்ஞ்ஞானம் எனும் தேனை முகர்ந்து பருகுவார்கள் அடியார்கள். அந்த மெயஞ்ஞானத் தேனை உடையதும்,தண்டை அணிந்ததுமான உன் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.


Saturday, July 7, 2012

அனுபவ முத்திரைகள்: தினசரி தியானம்

அனுபவ முத்திரைகள்: தினசரி தியானம்: தினசரி தியானம் இறைவா உன்னையே நினைந்திருந்து ,உன்னை நான் அடைவேனாக! படைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம் புதுப்புது வடிவங்களை ...

தினசரி தியானம்


தினசரி தியானம்


இறைவா உன்னையே நினைந்திருந்து ,உன்னை நான் அடைவேனாக!

படைப்புத் தொழில் அதிபதியான பிரும்மா தினம் தினம் புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத் தானே புதிய உருவமாய் மாற்றிக கொள்கிறது. மனிதன் தன்னை மேல
ோனாக உருவாக்கிக் கொள்ள இயலும். அவன் ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படி அமைக்கிறது .


உன்னைநினைந் துன்நிறைவின்
உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்
அடைக்காதே பராபரமே !



.........தாயுமானவர்.
 

Saturday, June 30, 2012

அனுபவ முத்திரைகள்: கம்ப இராமாயணம்

அனுபவ முத்திரைகள்: கம்ப இராமாயணம்: கம்பர் ,இராவனணன் போர்க் களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறுமிடத்து, அவனை வெறும் ஒரு சாதாரண தோல்வி அடைந்த வீரனாகக் காட்ட வில்...

கம்ப இராமாயணம்

கம்பர் ,இராவனணன் போர்க் களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியைக் கூறுமிடத்து, அவனை வெறும் ஒரு சாதாரண தோல்வி அடைந்த வீரனாகக் காட்ட வில்லை. நல்ல ஒரு ஞானம் பெற்ற சிவபக்தன் அடங்குதல் போலவும், அவனது வீரம் செறிந்த கைகள், தோள்கள் அடங்கிக் கிடக்கின்றன என்றே பகர்கிறார்.






வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க 
மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க 
மயல்அடங்க ஆற்றல் தேயத் 
தம்அடங்கு
 முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.





வீரமும், சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம் இழந்திருந்தது. இன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

அனுபவ முத்திரைகள்: கோயில் வழிபாடு.

அனுபவ முத்திரைகள்: கோயில் வழிபாடு.: கோயில் வழிபாடு. கோவில் முழுவதும் கண்டேன் - உயர்  கோபுரம் ஏறிக் கண்டேன்  தேவாதி தேவனையான் - தோழி  தேடியும் கண்டிலேனே. சிற்பச் சிலை கண்டேன்...

கோயில் வழிபாடு.

கோயில் வழிபாடு.




கோவில் முழுவதும் கண்டேன் - உயர் 

கோபுரம் ஏறிக் கண்டேன் 
தேவாதி தேவனையான் - தோழி 
தேடியும் கண்டிலேனே.
சிற்பச் சிலை கண்டேன் - நல்ல 
சித்திர வேளை கண்டேன் 
அற்புத மூர்த்தியினைத் - தோழி 
அங்கு எங்கும் கண்டிலேனே.
தூபம் இடுதல் கண்டேன் - தீபம் 
சுற்றி எடுத்தல் கண்டேன் 
ஆபத்தில் காப்பவனைத் - தோழி
அங்கேயான் கண்டிலேனே.
கண்ணுக்கு இனிய கண்டு - மனத்தைக்
காட்டில் அலைய விட்டுப்
பண்ணிடும் பூசை யாலே - தோழி
பயன் ஒன்று இல்லை அடி
உள்ளத்தின் உள்ளான் அடி - அது நீ
உணர வேண்டும் அடி
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோவில்
உள்ளேயும் காண்பாய் அடி .




.......கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Friday, June 29, 2012

அனுபவ முத்திரைகள்: ....திருமழிசை ஆழ்வார்

அனுபவ முத்திரைகள்: ....திருமழிசை ஆழ்வார்: வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும்  வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ்  வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ  ...

....திருமழிசை ஆழ்வார்


வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய் ,அதன்றியும் 
வெற்பெடுத்து வேலைநீர் வரன்புகட்டி ,வேலைசூழ் 
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழிந்த நீ 
வெற்பெடுத்து மாகாத்த மேகவண்ணன் அல்லையே! 

....திருமழிசை ஆழ்வார் 

எம்பெருமானே! நீ மந்தர மலையால் ஆழ்கடலைக்
கடைந்து அதைக் கலக்கியவன். அதோடு விட்டாயா! மலைகளைப் போட்டு கடலில் அணையும் கட்டினாய்!
கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு மலைகள் அரணாய்
இருந்தன. அவற்றை வானரப் படைகளோடு சென்று ப்லான்கையின் கட்டுக்களை அழித்தாய்! கோவர்த்தன மலையை ,குடையாகப் பிடித்து ,ஆயர்குலத்தினரையும்,
ஆநிரைகளையும் காத்த மேகவண்ணன் ஆயிற்றே!

.. திருமால் அருள் புரியும் பாங்கை மலைகளை அவர் கையாண்ட விதங்களைச் சொல்லியே ஆழ்வார் நயமாகப் புலப் படுத்தியுள்ளார்.

Wednesday, June 27, 2012

அனுபவ முத்திரைகள்: Temple Discovered in Indonesia

அனுபவ முத்திரைகள்: Temple Discovered in Indonesia: தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் பதினொன்று,பனிரெண்டாம் நூற்றாண்டின் போதே சோழர்களின் ஆட்சியில் கடல் கடந்து இரண்டாயிரம...

Temple Discovered in Indonesia


தமிழ் இலக்கியத்தில் திருப்பாவையும், திருவெம்பாவையும் பதினொன்று,பனிரெண்டாம் நூற்றாண்டின் போதே சோழர்களின் ஆட்சியில் கடல் கடந்து இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சயாம் நாட்டில் பரவின.சோழர்கள் கடாரம் சென்று தங்கள் வெற்றியை நிலை நாட்டிய பிறகு தமிழர்கள் பலர் அங்கே குடியேறினர்.அவர்கள் வழியாகவே இப்பாடல்கள் அங்கு பரவின. சயாம் அரசாங்கத்தாரால் பல நூற்றாண்டுகளாக ஒரு விழா கொண்டாடப் பட்டு வருகிறது., அந்த விழாவின் பெயர் ''த்ரி யெம்பாவ' , த்ரிபாவ;. என்பதன் பொருள் தெரியாமலே!பொருள் தெரியாமல் சொற்கள் சிதைந்து மந்திரம் போல் உச்சரித்து வருகின்றனர்.



1000 years old Hindu Temple Discovered in Indonesia

Tuesday, June 26, 2012

அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்.

அனுபவ முத்திரைகள்: திருமந்திரம்.: பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்து...

திருமந்திரம்.


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலைச் சொரியுமே 




எல்லோரும் வெளியே பார்வையைச் செலுத்துகிறார்கள்.தங்கள் உள்ளே பார்வையைச் செலுத்தி மனதை ஆராய்பவர்கள் சிலரே. அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்..!உள்ளே ஐந்து பசுக்கள் ஐந்து புலன்களாய் விருப்பம் போல் மேய்வதை.மேய்ப்பார் இல்லாமல் வெரி பிடித்து திரியும் மாடுகள் அவை. மேய்ப்பார் இருப்பின் .அவற்றின் வெறி அடங்குமாறுச் செய்தால் அவை கட்டுக்கடங்கி ஞானப் பாலைச் சொரிவன. இதனால் பொல்லாதவையும் நல்லவையாய் மாறக் காணலாம்.





....திருமந்திரம்.

அனுபவ முத்திரைகள்: ....திருமந்திரம்

அனுபவ முத்திரைகள்: ....திருமந்திரம்: படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவதற்கு அத...

....திருமந்திரம்


படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவதற்கு அது ஆமே


....திருமந்திரம் 


''கோயிலில் படமாக உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்குப் போய்ச் சேர்வதில்லை. நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் படமாக உள்ள கடவுளுக்கு அது சென்று சேரும்.

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே சுற்றுத் தூளியுடை வேர்கானிடைக் கன்றின்பின் எற்றுக்...

பெரியாழ்வார்


பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
சுற்றுத் தூளியுடை வேர்கானிடைக் கன்றின்பின்
எற்றுக்கு என்பிள்ளையைப் போக்கினேன் !என்னே பாவமே !

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் 
என்னிளங் கொங்கை அமுதம்ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோகப் புரியே கானில் கன்றின்பின்
என்இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனைநான்
உடையும் கடியன ஊன்றுவெம் பரற்கல் உடை
கடிவெங் கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேன் என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே! பாவமே! 




......பெரியாழ்வார் 



'
மஞ்சள் பூசிப் பெண்களோடு இந்த ஆயர்பாடியில் திரிந்து கொண்டிருந்தான்.அவர்கள் கட்டி மகிழ்ந்து விளையாடிய சிறு,சிறு வீடுகளைக் கலைத்து, சிதைத்து எங்கும் குறும்புகள் செய்து திரிந்து கொண்டிருந்தவனை ,அவ்வாறு செயாதபடிக்கு, வேடவர்கள் வாழும் 
காட்டிற்கு பசுக்களை மேய்க்க அனுப்பி விட்டேனே! எதற்க்காக அப்படிச் செய்தேன்! 'ஐயோ பாவமே' என்று தன்னைத்தானே யசோதை நொந்து கொள்கிறாள். மேலும்,'அவனுக்கு என் மார்பின் பாலைத் தந்து வளர்த்த நான் அவனுடைய பொன்னடி நோக விடியற்காலையிலேயே காட்டிற்கு ,கன்றுகளின் பின்னே ஏன் இளஞ்சிங்கமாகிய கண்ணனை அனுப்பி வைத்தேனே ..!குடையும்,செருப்பும் கொடுக்காமலே பரல் கற்களை யுடைய பொல்லாத காட்டிற்குள் கால அடி நோகுமாறு கன்றுகளின்பின் ஏன் பிள்ளையை அனுப்பி விட்டேனே !கொடுமை செய்தேனே! ஐயோ பாவமே!' என்றவாறு புலம்புவதாக வடித்த பாடல் நம் மனதையும் உருக வைக்கிறது.

Monday, June 25, 2012

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.

அனுபவ முத்திரைகள்: கந்தரலங்காரம்.: தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் க...

அனுபவ முத்திரைகள்: தேவாரப் பதிகம்

அனுபவ முத்திரைகள்: தேவாரப் பதிகம்: மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அ...

தேவாரப் பதிகம்




மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அவன் எனக்கிருக்க இந்த நேரங்கள் என்னை என்ன செய்யும் என்று வளமைபோல் அஞ்சாமையும்,ஊக்கமும் பிரக்குனாறு ஒரு பதிகம் பாடினார். 



வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பும் இரண்டும் உடனே
 ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே



.............தேவாரப் பதிகம்


எங்கள் தலைவன் சிவபெருமான் பெண் ஒரு பாகமாகக் கொண்டவன்.விஷத்தையே உண்டு கண்டங் கருத்தவன்.
கங்கையையும்,பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் குடிபுகுந்தவன்.அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் ,சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன் ,வியாழன்,வெள்ளி,ஆகிய நாள்களும்,ராகு,கேது என்பனவும் ஒரு தீமையும் செய்ய மாட்டா.அவை எல்லாம் நல்லவைகளே.அடியார்களுக்கு மிகவும் நல்லவை.’

கந்தரலங்காரம்.




தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

............கந்தரலங்காரம். 

விசாலமான வெற்றியை உடைய முருகப் பெருமானின் மயிலே !உலகினில் துன்பங்கள் நீங்கும் பொருட்டு உன்னை முருகப் பெருமான் செல்ல விடுவாரானால் வாடா திசையில் உள்ள மேரு மலைக்கு அப்பாலும்,சூரியனுக்கு அப்பாலும்,பொன்மயமான சக்ரவாள மலைக்கு அப்பாலும் ,எட்டு திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய் 











Wednesday, June 20, 2012

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்: நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன் இருநிலத் தோரும் இயை கென ஈ...

பரிபாடல்..செவ்வேள்


நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன்
இருநிலத் தோரும் இயை கென ஈத்தநின்
தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத்து அவளோடு
மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை ..

பரிபாடல்..செவ்வேள்
கடவுள் வாழ்த்து ..நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

'முருகவேளே! தேவலோகத்தில் நீ எழுந்தருளியிருப்பது
போலவே இவ்வுலகத்தும் எழுந்தருளியிருக்கும் விருப்பத்தைக்
கொண்டு அறிவு எல்லையால் அறியப்படாத கடம்பினை மேவித்
தேவர்கள் அடையும் இன்பத்தை மக்களும் அடைக , என்று திருவருள்
புரியும் திருப்பரங்குன்றத்தின் கண்ணே நீ வள்ளி நாச்சியாரை மனம் புரிந்து
அருளியது வானுலகத்தில் தேவ யானையை மணந்ததர்க்கு மாறாக
இவ்வுலகத்தில் புரிந்த செயல் போலும்.

Sunday, June 17, 2012

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....: திருநாவுக்கரசர்.... எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது. 'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே அடக்குவி...

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது.

'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால்ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே ...

திருநாவுக்கரசரை சமணம் தழுவிய மன்னன் , பலவகையிலும் ,குறிப்பாய் கல்லைக் கட்டி கடல் நீர் நடுவே மிதக்கவிட்டு ,சைவத்தை தூற்றிய காலை இவர் பாடும் பாடலிது.    'எகத்தாளமிடுவோரும்   ஆட்டம் போடுவார்; அவரை நீ அடக்கப் புகுந்தாலும் அடங்கி விடுவர்;பாடாதவரும் பாடுவார்; உன்னை விட்டு விரட்டி ஓட வைத்தாலும்  ஓடுவர்; உள்ளம் உருகியே உன்னை நினைந்து  இருக்கவும் வைத்தாலும் இருப்பார். ; 
 பாட வும்  செய்வர்; பணிந்து செய்யும் வேலைகளையும் செய்வர,   உன் நெற்றிக் கண்ணைத் திறக்காத போதும் நீ காட்டும் நெறிதனை கண்டு செல்பவர்.  இப்படியிருக்க நான் உன்னையே நினைந்திருக்க,உன் அருளாலே  என்னைச் சுற்றியுள்ள சுடுநீரும் தண்ணீராம்; கல்லும் நான் ஈடேறும்  தெப்பமாம். 



இதையே கவியரசு தன் திரைப் பாட ல் ஒன்றில் கண்ணனை நினைத்து பாடும் பாடலுக்கு  கையாண்டுள்ளார்என்பது நினைவு கூரத்தக்கது.

Wednesday, June 13, 2012

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி: குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை இலங்குமரர் கோமான...

.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி


குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை
சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இலங்குமரர் கோமான் இடம் .


.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி 


திருவேங்கடமலை தவிர வேறொரு இடமும் அறியாத குறத்தியர் ,
அழகிய வளையல்கள் கைகளில் ஊஞ்சலாட மூங்கில் மரங்களை வளைப்பார்.
அந்த மூங்கில்களோ சந்திர மண்டலமளவு ஊடுருவி ,ராகுவைத் தவிர்த்து
சந்திரனை விடுவிக்கும்.அத்தகு திருவேங்கட மலையே மேலுலகிலுள்ள
சிரஞ்சீவிகளான புருஷோத்தமன் குடியிருக்கும் ஸ்தலமாகும்.

Wednesday, May 30, 2012

அனுபவ முத்திரைகள்: .....திருவாசகம் எண்ணப்பதிகம்

அனுபவ முத்திரைகள்: .....திருவாசகம் எண்ணப்பதிகம்: தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமா ரெமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்றன் குறிப்பே குற...

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமா ரெமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
...
போமாற மைமின் பொய்நீக்கிப்
புயங்க னாள்வான் பொன்னடிக்கே
.

.....திருவாசகம் எண்ணப்பதிகம்

தனக்குத் தானே என்றானவன். தானே தனக்கு சுற்றம் என்றானவன்., தனக்கு தானே விதி கொள்பவன் ஆக இவன் மீது பாசம் கொண்டவர்தான் எத்தனை பேர்! எல்லாம் மாயம். அது போகட்டும்; எம் பெருமான் குறிப்பு எதுவோ அதையே தங்கள் வழி நடப்பாய் கொண்ட பழைய அவனது தொண்டர் வழி நம் பாதை அமைத்து, பொய்களை அறவே விட்டொழித்து அனைவரையும் ஆளும் அவன் பொற்பாதம் பற்றியிருப்போம்.
 

Wednesday, May 9, 2012

அனுபவ முத்திரைகள்: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழக...

அனுபவ முத்திரைகள்: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழக...: அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழகுறச் சொல்லி மதுரை நோக்கி வரும் பாங்கு வர்ணிப்பு பாடலில்.... ...கரியமால் அப்பனே ! விண்ட...
அழகர் அழகர்மலை தன் கோட்டைவிட்டு அங்குள்ளவரிடம் அழகுறச் சொல்லி மதுரை நோக்கி வரும் பாங்கு வர்ணிப்பு பாடலில்....

...கரியமால் அப்பனே !
விண்டார்கள் தொண்டரெல்லாம் அழகர் புரிக்கண்ணன் விமலன் அவர்கள் தன்னை
வணங்கிடுவீர் நீங்களெல்லாம் கேந்திரபாலர் ...
முதல் வடக்குக் குடவரையில்
கலக்கமில்லாப் படிவாசல் நெய்வேத்திய பூசை கற்பூர தூபதீபம்
துலக்கமதாய்க் கொடுத்து மூன்று காலைவேளை தொகுதிப்படி முறையாய்
..................... பட்டர் முதல் ஆண்டாரும் நாட்டார்க்குரைக்கப் பணிந்து நமஸ்கரித்து
கட்டணம் தவறாமல் நடக்கிறோமெந்த நாளும் கருவலமே என்றுரைத்து
எல்லோரும் கோவிந்தா என்று பொய்கைகரைபட்டி ஏகினார் பட்டர் முதல்
சென்று திரும்பிவரப்பரமசமிப் பட்டரிடம் செப்புவார் செந்திருமால்
வாமனரே வைகைவலம் நாளைப் பயணம் வைக்கலாம் தென் கூடலுக்கு
நேம விதிப் படியே நான்கு கோட்டை வாசலுக்குள் நேமியும் பன்முறை போய்
உள்கோட்டை வாசலிலே ஆழ்வார் கருடாழ்வார் உடையாழ்வார் காவலுடன்
செல்வதற்குள் மடப்பள்ளி திருப்பரிச்சி முதலாக திருமால் அவர் காவல் என்றார்
கருமண்டபமும் களஞ்சியம் காணிக்கைக் குடவரையுள் கல்படியோன் காவலேன்றார்
திருமாலுடைய தொட்டிபட்டி அயராமணி மண்டபம் சுரங்க முதலாச் சித்தர்கள் காவலேன்றார்
மறுகுமலரணிந்த மாதவன் சொற்படியே வாமணன் கட்டளையில்
வருமலர் இணைமாற்றித் தீர்த்தமதை வழங்குகின்ற மஞ்சனையாள் பேராக்கு
பெருகும் படையோடுள்ளிச் சமர்முடித்து வந்த சித்தர் பிரான் மலையை
காத்து வருவீரெல்லாம் வற்றாமல் தீர்த்தம் கலங்காமல் ஈயெறும்பு
காவலுடன் நானிருப்பேன் ரகுபூபதியே நீங்கள் வைகை நதி போங்களென
ஆவலுடன் செங்கமலன் மஞ்சன நதி ராக்குரைக்க திருமாலும்
தாமோதரக் கண்ணன் தானமலர்த் தண்டியலைத்தான் தூக்கி வாருங்கள் என்றார்
போய்வரேன் என்று சொல்லி சேவகரும் மாறனைமைக்காரரும்
பல்லக்கைத் தூக்கி பட்டர் வலம்புரிச் சங்கூதிடவே
நாட்டார்கள் கொம்பூத செகண்டி நாதம் நாலு திக்கும் நாள் முழங்க
கோர்த்தார்கள் கூடிவர காட்டுப் பிள்ளையாரிடத்தில் கூறிய சேதிகளை
நடந்தார் பெருமாளும் போய்கைக்கரைபட்டி கலவை நதியும் நல்லதென்று கடந்து.................