தமிழனுக்கு மதம் யாது! அது ஏது !
மதங்கள் எங்கும் பரவிக் கிடக்கும் இவ்வுலகத்தில் ,சற்று பின்னோக்கி பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும். ஆதிகாலத்தில் மனிதர்கள் எந்த இடத்திலும், சூரியன்,சந்திரன், மழை, தீ ,நீர் என்று இயற்கையைக் கண்டே அஞ்சியும், பின்பு அவற்றைப் போற்றியும் வந்தனர். இது நம் சங்ககாலப் பாடல்களிலும் நாம் பெரிதும் அறியப் பெறுவோம். எந்த ஒரு சங்கதியையும் அப்பாடல்கள் இயற்கையோடு ஒப்பிப் பேசத் தவறியதில்லை. அதே நேரத்தில் மலைக்குரிய கடவுளாய் செவ்வேள் முருகனையும், அவனுக்காக கார் காலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுதலையும் அழகாகச் சொல்லியுள்ளனர். இப்பாடல்களில் இயற்கை சற்று விரிந்தே காணப படுகிறது. பின்னர் மருதம்,முல்லை நிலப் பகுதியை திருமாலைப் பாடியிருக்கின்றனர். இதில் ஓரிரு புராணக் கதைகள் மூன்றாம் மனிதர் சொல்லக் கேட்டது போல் காணக் கிடைக்கின்றன. அடுத்து பாலை நிலப் பகுதிக்குரிய பாடல்களைக் கண்டால் காளியின் வழிபாடும், ரத்தப் பலி காணும் தன்மையும் அறியப் படுகிறது. இது நெய்தலுக்கும் சேர்ந்து வரும். மழை வேண்டி பாடும் பாடல் திருமாலைச் சொல்லியே வருதலைப் பிற்காலப் பாடல்களில் காணலாம். ஆக இன்றுள்ள கணக்கிற்கு இயற்கையிலேயே முருகனை தமிழர்கள் தெய்வமாகக் கொண்டாடியுள்ளனர். பின்னரே வைணவம்,சைவம் என்ற பேச்சு எழும்பியுள்ளது.
ஆரியம் தொட்டு பல அயலார் நாட்டில் ஊடுருவ.,காலச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. இயற்கையோடு யாரும் மனமொத்து வாழ பிரச்சனையில்லாது போனது. வர்ண பேதங்கள் ,வேதங்கள் உருவில் வடிவெடுக்க அவை புத்த மதம், சமண மதம் என்று ,கொள்கை ரீதியில் பல சித்தாந்தங்களை மக்களிடம் சேர்த்தது. தமிழன் ஊழ் வினைப் பயன் என்று
சொல்லி வாழ்ந்திருக்குங்காலை, இம்மதக் கொள்கைகளால் பாவ, புண்ணியங்கள் பற்றிப் பேசிப் பழகனானான். இன்றளவும் அதில் நம்பிக்கை உடையவனாகிறான். இதற்கு அவன் இன்ன மதத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மனிதம் என்ற தன்மையை உணர்ந்து நடத்தலே போதும். பகுத்தறிவு கொண்டு இதைப் பார்த்தாலும், அவனுக்கு நம்மாழ்வார் சொல்லியது போல் வாழ்வில் ஒரு பற்றுக்கோல் தேவைப் படுகிறது.அந்தப் பற்றுக்கோல் நமது மனசாட்சியே என்று நன்கு தெளிந்தவன், ஒரு நல்ல நாத்திகனாகிறான். மற்றவரை குறை சொல்லும் மாயை அவனிடம் இருக்காது. ஆனால் புரிந்து கொண்டு அறம் சம்பந்த காரியங்கள் செய்வான். வெகு சிலரே இது போல் தங்களை வெளிக்காட்டாது நன் முறையான செயல் பாட்டுடன் இருக்கின்றனர். மற்றவர் அவரவருக்குப் புரிந்த, பிடித்த பற்றுக் கோலைப் பற்றும் பொழுது பல மதங்கள் பிறக்கின்றன. இது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒன்றை விடவும் ஒன்றுதான் சிறந்தது என நிலை நாட்ட முற்படும்போது பலவாறாக பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்நிலையில் தமிழனுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் திருக்குறள், நாலடியார், ஓளவை மூதுரை போன்ற நல்ல நீதி நூல்கள். இவற்றை படித்து சிந்தித்து வாழும் நம் மனதில் துவேஷம் யாரிடமும் வருவதில்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றல்லவா பாடி வருகிறோம்.
இவை எல்லாவற்றிற்கும் இடையே தனிப் பாதை கொண்டு நம்மிடையே வந்தது மெய்ஞ்ஞான உணர்வு. பல சித்தர்கள் அருளிச் சென்றது. உடல் நிலையாமை, மறுபிறவி. இதற்கு விஞ்ஞானதிடம் இன்னும் விளக்கம் இல்லை. வள்ளலார் முதலில் முருகனைப் பாடினார்;அகண்ட வெளியை,அதில் நடக்கும் அற்புதங்களைச் சிவமாகச் சொல்லி..அது நமக்குள்ளே இருக்கும் ஒளியே! எனக் காட்டி , ‘அருட் பெருஞ்சோதி ,தனிப் பெருங்கருணை என்றும் சொல்லி வைத்து ,,அதன் அரிச்சுவடியாய் அன்னதான தர்மத்தை நிலை நிறுத்துகிறார். இது போன்ற தத்துவங்களே நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன.;செயல் படுத்துகின்றன.
இம்மாற்றங்களின் விளைவே பலர் விரதமிருந்து ,சபரி மலை, பழனி மலை என்று யாத்திரை கொள்கின்றனர். சாய் பாபா, சீரடி பாபா வழி செல்கின்றனர். இவர்கள் முன்னம் வேறு யாரும் இவனுக்கு பொருந்தார்கள். அன்னை தெரேசா சொல்வது போல் நம் தாய் தந்தையர் அளித்த கொள்கையிலே விடாப் பிடியாய் இருந்து, அடுத்தவரை, ,அடுத்த உயிரை இம்சிக்காது இறை உணர்வு கொண்டு நிற்றலே சாலச் சிறந்தது. இதில் இன்னும் தங்கள் முன்னோரை மட்டுமே வழிபட்டு வருவோரும் உண்டு. அதன் பரிணாம வளர்ச்சியே குலதெய்வ வழிபாடு. இது ஒரு வகையில் நம் நன்றியறிதலை வெளிப்படுத்துவதாகும். இவ்வளவும் மனதில் கொண்டு வாழும் தமிழன் விபரம் தெரிந்தவனே. மூட நம்பிக்கை போன்று சில சங்கதிகள் இருந்தாலும் அதில் அவனுக்கு பிடித்த தெய்வ நம்பிக்கையை etr கொண்டு வாழ்கிறான். இன்றும் இயற்கையை இயற்கையாகவே வணங்குவான். இவனுக்கு என்று எந்த மதம்? நல்ல கொள்கையுள்ள எந்த பாதையும் இவனுக்கு வசமாகும்.

No comments:
Post a Comment