மதுரையில் சைனரோடு வாதிடப் புறப்படுகையில் திருஞானசம்பந்தரிடம் நேரம் சரியில்லை என்று தெரிவிக்கப்பட சிவபெருமான் தன்மைகளை எடுத்துச் சொல்லி ,அவன் எனக்கிருக்க இந்த நேரங்கள் என்னை என்ன செய்யும் என்று வளமைபோல் அஞ்சாமையும்,ஊக்கமும் பிரக்குனாறு ஒரு பதிகம் பாடினார்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பும் இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
.............தேவாரப் பதிகம்
‘’எங்கள் தலைவன் சிவபெருமான் பெண் ஒரு பாகமாகக் கொண்டவன்.விஷத்தையே உண்டு கண்டங் கருத்தவன்.
கங்கையையும்,பிறைச்சந்திரனையும் முடியில் அணிந்து என் உள்ளத்தில் குடிபுகுந்தவன்.அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் ,சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன் ,வியாழன்,வெள்ளி,ஆகிய நாள்களும்,ராகு,கேது என்பனவும் ஒரு தீமையும் செய்ய மாட்டா.அவை எல்லாம் நல்லவைகளே.அடியார்களுக்கு மிகவும் நல்லவை.’
No comments:
Post a Comment