பதினெட்டுபடிக் கருப்பு பிறப்பு.
(அழகர் கோயில் காவல் தெய்வம் ! வர்ணிப்பு பாடலில் .)
சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க
சந்தனக் கருப்ப னொன்னு சங்கிலி கருப்பன் இரண்டு
காளாங்கிக் கருப்பன் மூணு
உச்சிக் கருப்பன் நாலு ஊமைக் கருப்பன் அஞ்சு
உருளு தேரடிக் கருப்பன் ஆறு
ஆறு கருப்பனுக்கு ஏழாவதாக பெரிய கருப்பன் எசமானாகஏழு கருப்பனும் பிறக்க
அந்திமாடன் சந்திமாடன் ஆகாயமாடன் சுடலைமாடன்
லாடனென்ற சந்நியாசி ஆக மாடன் வகையி லைந்தும்
மாடன் வகையி லைந்தும் அஞ்சும் ஏழும் பன்னிரண்டு
சங்கன் சமயன் பனிரெண்டும் இரண்டும் பதினாலு
சப்பாணி சோனை சமர்த்தர்கள் காவல் ஆகப்
பதினாலு ரெண்டும் பதினாறு
வீரபத்திர னென்னும் அக்னி வீரன் அடங்காத இருளன்
வீரன் வகையில் இவர்கள் இணைப்பு பதினெட்டு
அந்தப் பராசக்தியின் துர்க்கை என்ற ஒன்பது பிறவியிலே
மூணு பிறவி
ஏ அம்மா! ஆத்தாள் பரமேஸ்வரி படிவாசல் சக்தி
வல்லிப ராபரி- அவள்
பேச்சி யென்றும் இருளாயி யென்றும் ராக்காயி எனவும்
ஆக இவர் பிறவி மூணு வகை
பதினெட்டு மூணுங் கணக்கு பந்தி இருபத்தி யொன்னு
அஞ்சிரண்டு ஏழு இவர்களுடன் பந்தி அடங்க இருபத்தி யொன்னு
இருபத்தோர் பந்தி அருபதோர் சேனைதளம்
அடக்கி அரசால அய்யன் குருநாதன்
கம்பிகளைத் தானே வாகுடனே கட்டிக் கரைகாத்துவரப்
பிறந்த மக்களெல்லாம் கூட்டி மலையாள நாடு மந்திர
மகாராசன் கோட்டை வந்து தங்கி இருக்கையிலே
பிறந்தாய் மலையாளக் கருப்பன் பேருகொண்டாய் கீழ்நாடு
வளர்ந்தாய் மலையாளம் கருப்பன் வந்துதித்தால் கீழ்நாடு
சிறந்தாய் மலையாளம் கருப்பனுட சேனைத்தளம் சிறப்படஞ்ச கீழ்நாடு
பிறந்தாய் மலையாளம் கருப்பன் துலங்குவது கீழ்நாடு....
.........அழகர் வர்ணிப்புப் பாடல்
இந்த ஆடி மாதத்தில் அழகர் கோயிலில் கள்ளழகர் தன் கருவறைக்குச் செல்கிறார். இது சமயம் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்புக்கு சந்தனக் காப்பு வைபவம் நடந்தரங்கேறும்.

very nice information.
ReplyDelete