Wednesday, July 11, 2012

கந்தரலங்காரம்.


தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்டதண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட காவலனே



.........கந்தரலங்காரம்.



வேகம் நிறைந்தவன் , தண்டாயுதத்தை ஏந்தியவன்.முன்னொரு காலத்தில் மண்ணுலகையும்,விண்ணுலகையும் கவர்ந்தவனுமான .
சூரபத்மன் தங்களை நெருங்குவதைக் கண்டு தேவர்கள் பயந்து ஓட ,அப்போது தான் வேலாயுதத்தை விட்டெறிந்து,தேவர்கள் தங்கள் உலகை விட்டுச் செல்லாதபடிக் காத்த முருகப் பெருமானே!
தங்கள் ஞானக் கண்ணால் பார்த்து ,தமது ஞான நெறியால் உன்னை நெருங்கி ,உனது மெய்ஞ்ஞானம் எனும் தேனை முகர்ந்து பருகுவார்கள் அடியார்கள். அந்த மெயஞ்ஞானத் தேனை உடையதும்,தண்டை அணிந்ததுமான உன் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும்.


No comments:

Post a Comment