Friday, April 27, 2012

புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா !
கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே!
வள்ளால் ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே !
... .............. பெரிய திருமொழி .... திருமங்கையாழ்வார்
'கொக்கின் வடிவாக வந்த பகாசுரனுடைய வாயை
கிழித்த புனிதமானவனே! ' என்று நான் உன்னை அழைத்த போழ்தே
என் நெஞ்சத்துள் புகுந்து குடிகொண்டு எனக்கு உன் மீதிருந்த
ஏக்க உணர்வுகளைத் தவிர்த்தவனே, ஒப்பற்ற கள்வனே!
உப்புநீருடைய கடலில் இனிக்கும் கரும்பாய் சயனித்திருப்பவனே!
வள்ளல் போல் அடியாருக்கு அருளை வாரி வழங்குபவனே!
இப்படிப் பட்ட உன்னை நான் எந்நாளும் மறக்க மாட்டேன்

2 comments:

  1. 'கடல் மல்லைக் கிடந்த கரும்பே!' - மாமல்லபுரத்துக் கடற்கரையில் நெடுங்கிடையாய் கிடந்திலங்கும் பெருமானைக் குறிக்கிறதோ ?

    ReplyDelete
  2. அற்புதமான அனுபவ முத்திரைகள்

    ReplyDelete