Monday, April 30, 2012

திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்



தலைக்கணம் துகள்குழம்பு சாதிசோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும்,நீடிரும்
கலைக் கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக் கொணா
மலைக்கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்றன் மாட்சியே!



... ....திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்




மேலான தேவர்கள், கீழான தாவரங்கள் ,பாவமும் புண்ணியமும் கலந்து
பிறக்கும் மனிதர்கள்,விலங்குகள் ஆகியவற்றிடையே பேரொளியாய் அவதரித்து ,
உன் மீது பட்ட காற்று தாவரங்கள் மீதும் பட்டு அவற்றின் பாபங்கள் நீங்கினாலும்,
அழிவற்றையாக விரிந்துள்ள வேத வேதாந்தகங்களை அதன் கருத்தைப் புரிந்து
கொண்டு சப்தமாகப் பாடி, துதிக்க இயலாதவை. மலைத் தொடர் போன்ற உன் சரித்திரங்கள்
உணர்த்தும் பெருமைக்கு நிகர் அப்பெருமையே ஆகும்.

No comments:

Post a Comment