Friday, April 27, 2012

திருமங்கையாழ்வார்

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினன்
பெரும் ஆயிரம் பேச நின்ற  பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர 
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சே!
.......... திருமங்கையாழ்வார் ...பெரிய திருமொழி.
பூமி,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்கின்ற ஐம்பெரும் பூதங்களாய் இருப்பவனும் ,
சகஸ்ர நாமங்களால் ஆராதிக்கப் படுபவனும், கரும அடிப்படையில் பிரப்பற்றவனுமான எம்பெருமான்
 அருள் பெருகுமிடம் ,விண்ணிலிருந்து மழை நீரும் பணியும் சொறிவதற்கு ஏதுவாகக் கார் மேகங்கள்
 சூழ்ந்திருக்கும் எழிலான திருவேங்கடத்தை நெஞ்சமே நீ சென்று அடைவாயாக

No comments:

Post a Comment