Friday, April 13, 2012

.....பரிபாடல்


புலவரை அறியாப் புகழோடு பொலிந்து
நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும்
புலவர் ஆய்வு உரைத்த புனைநெடுங் குன்றம்
பலவெனின் ஆங்கவே பலவே பலவினும்
...

நிலவரை யாற்றி நிறை பயன் ஒருங்குடன்
நின்றுபெற நிகழும் குன்றவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும்
மலர் அகன் மார்பின் மைபடி குடுமிய
குலவரை சிலவே குலவரை சிலவினும்
சிறந்தது கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்த்
தாங்கு நீள்நிலை ஓங்கிரும் குன்றம்.....
.....பரிபாடல்


.......இளம்பெரும்வழுதியார் பாட்டு

மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்

அறிவு எல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்ரவாளம்
முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்து உரைத்தக் குன்றங்களைப் புது வகையால் உரைக்கப் புகுந்தால் பலவாம்.

அப்பலவற்றுள் நிலத்தில் உள்ளோர் பசித் துன்பத்தை நீக்கி நிறை பயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள்
சில. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய
தடாகங்களும், மேகம் படியும் சிகரங்களும் உடைய குலவரைகள் சில சிறந்தன.

அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும்,சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையும்
உடைய மாயோனும்,பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது.

No comments:

Post a Comment