யானே பொய்யென் னெஞ்சும்
பொய்யென் அன்பும் பொய்
யானால் வினையே னழுதா
லுன்னைப் பெறலாமே
தேனே யமுதே கரும்பின்
றெளிவே தித்திக்கு மானே யருளா யடியே
னுனை வந்துறு மாறே.
.....திருச்சிற்றம்பலம் ..திருவாசகம்
நான் என்றிருப்பதும் பொய்யாகப் போனாலும்,
நினைவுகள் எழும் எனது நெஞ்சும் பொய்யாகப் போனாலும்,
நான் காட்டும் அன்பும் பொய்யாகப் போனாலும்,
எந்த நேரமும் கதி நீயே என்று உன்னை மனம் உருகித் தொழுது
நின்றால் நீ எனக்குக் கிடைப்பாய். எனவே தேன் போன்ற இனிமையுடையவனே!
அமிழ்தானவனே! கரும்பின் தேம்பாலாய் சுவை குறையாது தெளிவாய் இருப்பவனே!
மானின் மென்மை குணம் கொண்டவனே! நான் உன்னிடம் உன் தாளடி சேர அருள்வாயே!
No comments:
Post a Comment