Monday, April 16, 2012

பெரியாழ்வார் திருமொழி


அண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ,அசுரர் இராக்கதரை
இன்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே .

...
.....பெரியாழ்வார் திருமொழி

பிரமாண்ட உலகத்துக் கெல்லாம் தலைவனாகி அரக்கர் கூட்டத்தை கூண்டோடு ஒழித்த இருஷிகேசனுடைய
அடியார்களே! நீங்கள் பலனை விரும்பித் துதிக்கும் உங்கள் பழைய குணங்களை விட்டு ,பகவானின் திருவடிகள் ஒன்றையே நினைந்து வணங்கி,
அவனது பல நாமங்களைச் சொல்லி பல்லாண்டு பாடி மங்களாசனம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment