Wednesday, April 25, 2012

திருமால் வாழ்த்து ...பரிபாடல்

கடு நவை அணங்கும் கடுப்பு நல்கலும்
கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை இல்வழி இவையே
போற்றார் ஆயினும் போற்றுநர் உயிரினும்
மாற்றேம் ஆற்றல் இலையே நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலரெனும்
 
வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே

....திருமால் வாழ்த்து ...பரிபாடல்
கடுவன் இளவெயினர் பாட்டு
பெட்டாகனார் இசை
பண்ணுப் பாலை யாழ்


கோபமும் அருளும்,பட்ச பாதமும் நடுவு நிலையும்
ஆகிய இவற்றை மறமும் அறமும் உடையார்பால்
முறையே உடையை, இல்லாரிடத்து இல்லாய். அன்றிப்
பகைவர் உயிரை நீக்குதலும் நட்போர் உயிரைப் பாதுகாத்தலும்
ஆகிய தொழிலை உடையை அல்லை. ஏனெனில் நினக்குப் பகைவரும் நட்போரும் இல்லை.
உயிர்களது இயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோகத் தோன்றுவன அல்லாது நின் இயல்பால் அவை இருப்பவை அல்ல.

No comments:

Post a Comment