Monday, April 30, 2012
அனுபவ முத்திரைகள்: திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்
அனுபவ முத்திரைகள்: திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்: தலைக்கணம் துகள்குழம்பு சாதிசோதி தோற்றமாய் நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும்,நீடிரும் கலைக் கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக் கொண...
திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்
தலைக்கணம் துகள்குழம்பு சாதிசோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும்,நீடிரும்
கலைக் கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக் கொணா
மலைக்கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்றன் மாட்சியே!
... ....திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்
மேலான தேவர்கள், கீழான தாவரங்கள் ,பாவமும் புண்ணியமும் கலந்து
பிறக்கும் மனிதர்கள்,விலங்குகள் ஆகியவற்றிடையே பேரொளியாய் அவதரித்து ,
உன் மீது பட்ட காற்று தாவரங்கள் மீதும் பட்டு அவற்றின் பாபங்கள் நீங்கினாலும்,
அழிவற்றையாக விரிந்துள்ள வேத வேதாந்தகங்களை அதன் கருத்தைப் புரிந்து
கொண்டு சப்தமாகப் பாடி, துதிக்க இயலாதவை. மலைத் தொடர் போன்ற உன் சரித்திரங்கள்
உணர்த்தும் பெருமைக்கு நிகர் அப்பெருமையே ஆகும்.

Friday, April 27, 2012
அனுபவ முத்திரைகள்: திருமங்கையாழ்வார்
அனுபவ முத்திரைகள்: திருமங்கையாழ்வார்: பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினன் பெரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமாம...
அனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று...
அனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று...: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா ! கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே! வள்ளால் ! உன்னை எங்ஙனம்...
உள்ளே நின்று...: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா ! கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே! வள்ளால் ! உன்னை எங்ஙனம்...
புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா !
கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே!
வள்ளால் ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே !
... .............. பெரிய திருமொழி .... திருமங்கையாழ்வார்
'கொக்கின் வடிவாக வந்த பகாசுரனுடைய வாயை
கிழித்த புனிதமானவனே! ' என்று நான் உன்னை அழைத்த போழ்தே
என் நெஞ்சத்துள் புகுந்து குடிகொண்டு எனக்கு உன் மீதிருந்த
ஏக்க உணர்வுகளைத் தவிர்த்தவனே, ஒப்பற்ற கள்வனே!
உப்புநீருடைய கடலில் இனிக்கும் கரும்பாய் சயனித்திருப்பவனே!
வள்ளல் போல் அடியாருக்கு அருளை வாரி வழங்குபவனே!
இப்படிப் பட்ட உன்னை நான் எந்நாளும் மறக்க மாட்டேன்

திருமங்கையாழ்வார்
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினன்
பெரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சே!
.......... திருமங்கையாழ்வார் ...பெரிய திருமொழி.
பூமி,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்கின்ற ஐம்பெரும் பூதங்களாய் இருப்பவனும் ,
சகஸ்ர நாமங்களால் ஆராதிக்கப் படுபவனும், கரும அடிப்படையில் பிரப்பற்றவனுமான எம்பெருமான்
அருள் பெருகுமிடம் ,விண்ணிலிருந்து மழை நீரும் பணியும் சொறிவதற்கு ஏதுவாகக் கார் மேகங்கள்
சூழ்ந்திருக்கும் எழிலான திருவேங்கடத்தை நெஞ்சமே நீ சென்று அடைவாயாக
Wednesday, April 25, 2012
அனுபவ முத்திரைகள்: திருவாசகம்.
அனுபவ முத்திரைகள்: திருவாசகம்.: கேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான் கிளையில்லான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே தாயினுக்குத் தவிசிட்டு நாய...
திருவாசகம்.
கேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான்
கிளையில்லான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
தாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தெனவெல்லாங் காட்டிப் பின்னும்
கேளா தெனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே
.................திருவாசகம்.
கிளையில்லான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
தாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தெனவெல்லாங் காட்டிப் பின்னும்
கேளா தெனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே
.................திருவாசகம்.
அனுபவ முத்திரைகள்: ..திருவாசகம்
அனுபவ முத்திரைகள்: ..திருவாசகம்: யானே பொய்யென் னெஞ்சும் பொய்யென் அன்பும் பொய் யானால் வினையே னழுதா லுன்னைப் பெறலாமே தேனே யமுதே கரும்பின் றெளிவே தித்திக்கு மானே யருளா ய...
..திருவாசகம்
யானே பொய்யென் னெஞ்சும்
பொய்யென் அன்பும் பொய்
யானால் வினையே னழுதா
லுன்னைப் பெறலாமே
தேனே யமுதே கரும்பின்
றெளிவே தித்திக்கு மானே யருளா யடியே
னுனை வந்துறு மாறே.
.....திருச்சிற்றம்பலம் ..திருவாசகம்
நான் என்றிருப்பதும் பொய்யாகப் போனாலும்,
நினைவுகள் எழும் எனது நெஞ்சும் பொய்யாகப் போனாலும்,
நான் காட்டும் அன்பும் பொய்யாகப் போனாலும்,
எந்த நேரமும் கதி நீயே என்று உன்னை மனம் உருகித் தொழுது
நின்றால் நீ எனக்குக் கிடைப்பாய். எனவே தேன் போன்ற இனிமையுடையவனே!
அமிழ்தானவனே! கரும்பின் தேம்பாலாய் சுவை குறையாது தெளிவாய் இருப்பவனே!
மானின் மென்மை குணம் கொண்டவனே! நான் உன்னிடம் உன் தாளடி சேர அருள்வாயே!
அனுபவ முத்திரைகள்: திருமால் வாழ்த்து ...பரிபாடல்
அனுபவ முத்திரைகள்: திருமால் வாழ்த்து ...பரிபாடல்: கடு நவை அணங்கும் கடுப்பு நல்கலும் கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை இல்வழி இவையே போற்றார் ஆயினும் போற்றுநர் உயிரினு...
திருமால் வாழ்த்து ...பரிபாடல்
கடு நவை அணங்கும் கடுப்பு நல்கலும்
கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை இல்வழி இவையே
போற்றார் ஆயினும் போற்றுநர் உயிரினும்
மாற்றேம் ஆற்றல் இலையே நினக்கு
மாற்றோ ரும்இலர் கேளிரும் இலரெனும்
வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே
....திருமால் வாழ்த்து ...பரிபாடல்
கடுவன் இளவெயினர் பாட்டு
பெட்டாகனார் இசை
பண்ணுப் பாலை யாழ்
கோபமும் அருளும்,பட்ச பாதமும் நடுவு நிலையும்
ஆகிய இவற்றை மறமும் அறமும் உடையார்பால்
முறையே உடையை, இல்லாரிடத்து இல்லாய். அன்றிப்
பகைவர் உயிரை நீக்குதலும் நட்போர் உயிரைப் பாதுகாத்தலும்
ஆகிய தொழிலை உடையை அல்லை. ஏனெனில் நினக்குப் பகைவரும் நட்போரும் இல்லை.
உயிர்களது இயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோகத் தோன்றுவன அல்லாது நின் இயல்பால் அவை இருப்பவை அல்ல.

அனுபவ முத்திரைகள்: திருவாசகம்
அனுபவ முத்திரைகள்: திருவாசகம்: நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுள்ளோர் பிரானே ஒருத்தனே யுன்னை யோலமிட் டலறி உலகெல்லாந் தேடியும் காணேன் திருத்தமாம் பொய்கைத் தி...
திருவாசகம்
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுள்ளோர் பிரானே
ஒருத்தனே யுன்னை யோலமிட் டலறி
உலகெல்லாந் தேடியும் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிர்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே யென்றரு ளாயே !
....திருவாசகம் ..அருட்பத்து
நித்தியமானவனே! அகண்ட வெளியானே! திருநீறணிந்த
நெற்றிக் கண்ணையுடையவனே! வானில் உள்ளோர் எல்லாம் தொழும்
எம்பிரானே! நீ ஒருவனே எனக்கு என்று விரும்பி உலகெல்லாம் உன்னைத் தேடி காணாது நிற்கிறேன்.
புண்ணிய நீர் தரும் பொய்கை உள்ள திருப்பெருந்துறையில் செம்மையான மலர் சூடி
மங்கலமாய் விளங்கும் அருட்தெய்வமே! அடியேன் உன் ஆதரவு தேடி அழைக்கின்றேன்,
விரைந்து வந்து அருள்புரிவாயே

Monday, April 16, 2012
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார் திருமொழி
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார் திருமொழி: அண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ,அசுரர் இராக்கதரை இன்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழு...
பெரியாழ்வார் திருமொழி
அண்டக் கோலத்துக்கு அதிபதியாகி ,அசுரர் இராக்கதரை
இன்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே .
... .....பெரியாழ்வார் திருமொழி
பிரமாண்ட உலகத்துக் கெல்லாம் தலைவனாகி அரக்கர் கூட்டத்தை கூண்டோடு ஒழித்த இருஷிகேசனுடைய
அடியார்களே! நீங்கள் பலனை விரும்பித் துதிக்கும் உங்கள் பழைய குணங்களை விட்டு ,பகவானின் திருவடிகள் ஒன்றையே நினைந்து வணங்கி,
அவனது பல நாமங்களைச் சொல்லி பல்லாண்டு பாடி மங்களாசனம் செய்யுங்கள்.

Friday, April 13, 2012
... ... ...........திருமழிசை ஆழ்வார்
சுருக்குவாரை யின்றியே சுருங்கினாய்,சுருங்கியும்
பெருக்குவாரை யின்றியே பெருக்கமெய்து பெற்றியோய்!
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவனென்று
இருக்குவாய் முனிக்கணங்கள் ஏத்தயானும் ஏத்தினேன்
... ... ...........திருமழிசை ஆழ்வார்
உன்னை யாரும் சுருங்க வைக்காமலே குள்ளமாய் அவதரித்தாய்.
.உன்னை யாரும் விரிக்க வைக்காமலே திரிவிக்கிரமனாய் பெருகி
வளர்ந்தாய். சுருங்கவும் பெருகவும் செய்வது உன் ஆற்றல்.கர்வத்துடன்
செயல்பட்ட மகாபலி,கம்சன்,இராவணன் போன்றவர்களின் தீய குணங்களை
அழித்த தேவாதிதேவனே !...இப்படி வேதங்களும் ரிஷிகளும் துதிப்பது போல்
நானும் துதிக்கிறேன்.

அனுபவ முத்திரைகள்: .....பரிபாடல்
அனுபவ முத்திரைகள்: .....பரிபாடல்: புலவரை அறியாப் புகழோடு பொலிந்து நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத் தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும் புலவர் ஆய்வு உரைத்த புனைநெடுங் குன...
.....பரிபாடல்
புலவரை அறியாப் புகழோடு பொலிந்து
நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும்
புலவர் ஆய்வு உரைத்த புனைநெடுங் குன்றம்
பலவெனின் ஆங்கவே பலவே பலவினும்
...
நிலவரை யாற்றி நிறை பயன் ஒருங்குடன்
நின்றுபெற நிகழும் குன்றவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும்
மலர் அகன் மார்பின் மைபடி குடுமிய
குலவரை சிலவே குலவரை சிலவினும்
சிறந்தது கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்த்
தாங்கு நீள்நிலை ஓங்கிரும் குன்றம்.....
.....பரிபாடல்
.......இளம்பெரும்வழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்
அறிவு எல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்ரவாளம்
முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்து உரைத்தக் குன்றங்களைப் புது வகையால் உரைக்கப் புகுந்தால் பலவாம்.
அப்பலவற்றுள் நிலத்தில் உள்ளோர் பசித் துன்பத்தை நீக்கி நிறை பயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள்
சில. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய
தடாகங்களும், மேகம் படியும் சிகரங்களும் உடைய குலவரைகள் சில சிறந்தன.
அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும்,சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையும்
உடைய மாயோனும்,பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது.

அனுபவ முத்திரைகள்: ......கந்தரலங்காரம்
அனுபவ முத்திரைகள்: ......கந்தரலங்காரம்: காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன நேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித்...
......கந்தரலங்காரம்
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன நேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் துள்ளாடி வாடிப் பதைக்கின்றதே .
......கந்தரலங்காரம்
... தோகைகளுடன் கூடிய மேன்மை மிகுந்த மயிலை
வாகனமாகப் பெற்றவரே ! உதவி ஒரு சிறிதும் இல்லாமல்
தாவிப் படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல ,பாவியாகிய எனது துணையற்ற மனமானது
தளர்ந்து,வாட்டமடைந்து பதிக்கின்றது.எனவே தேவரீர்! உமது
உமது சிறந்த தாமரை போன்ற திருவடிகளுடன் சேர்த்து அடியேனைக் காத்தருள்வீராக.

Tuesday, April 10, 2012
பரிபாடல்......
கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!
பிறந்த ஞான்றே நின்னை உட்கிக்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே!
இரு பிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து
... ஒரு பெயர் அந்தணர் அமர்ந் தோயே!
அன்னை ஆகலின்அமர்ந்தியா நின்னைத்
துன்னி துன்னி வழிபடு வதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.
......பரிபாடல்......கேசவனார் பாட்டு
பிரிந்த தலைவர் வந்து சேர்ந்த பின்பு நீங்காமல் இருக்கும் பொருட்டு
மகளிர் யாழை வாசித்து பாடும் பாட்டை விரும்புவனே! திரு அவதாரம் செய்தவுடனே
இந்திரன் முதலியோர் அஞ்சிய சிறப்புடையோய் ! இரண்டு பிறப்பையும் அப்பிறப்பால் வந்த
இரண்டுபெயரையும் , அன்பு பொருந்திய நெஞ்சத்தையும் உடைய அந்தணர்களின் அறத்தை
விரும்புவோய்!
அத்தன்மைகளை உடையாய் ஆதலின் நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்தி, பொருந்த வழிபாடு செய்கின்றோம் .
அவ்விதம் செய்வதன் பயனாக பின்னும், பின்னும் நின் புகழினும் மேலான பலவாக அவ்வழிபாடுகள்
ஆகும்படி அருள்புரிவாயே!

Sunday, April 8, 2012
அனுபவ முத்திரைகள்: உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொ...
அனுபவ முத்திரைகள்:
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொ...: உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பர...
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொ...: உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பர...
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே
... .........கந்தரலங்காரம்.
பாற்கடலில் மந்திர மலையை மத்தாக நட்டு ,பாம்பரசு புரியும் வாசுகியை
கயிறாக வளைத்து பார்கடலானது பம்பரம் போல் சுழலுமாறு கடைந்த நாராயண மூர்த்தியின்
மருகனே ! பிறந்த இடங்களில் உழல்வதையும்,இறப்பதையும் நீக்கி அடியேனை ,தேவரீர் நும்மோடு
யான் இரண்டறக் கலந்து உன்னால் ஆட்கொள்ளும் நிலைமை எந்நாளோ , அருள் புரிவீர்...

Subscribe to:
Posts (Atom)