நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுள்ளோர் பிரானே
ஒருத்தனே யுன்னை யோலமிட் டலறி
உலகெல்லாந் தேடியும் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிர்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே யடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே யென்றரு ளாயே !
....திருவாசகம் ..அருட்பத்து
நித்தியமானவனே! அகண்ட வெளியானே! திருநீறணிந்த
நெற்றிக் கண்ணையுடையவனே! வானில் உள்ளோர் எல்லாம் தொழும்
எம்பிரானே! நீ ஒருவனே எனக்கு என்று விரும்பி உலகெல்லாம் உன்னைத் தேடி காணாது நிற்கிறேன்.
புண்ணிய நீர் தரும் பொய்கை உள்ள திருப்பெருந்துறையில் செம்மையான மலர் சூடி
மங்கலமாய் விளங்கும் அருட்தெய்வமே! அடியேன் உன் ஆதரவு தேடி அழைக்கின்றேன்,
விரைந்து வந்து அருள்புரிவாயே

No comments:
Post a Comment