Friday, April 13, 2012

... ... ...........திருமழிசை ஆழ்வார்


சுருக்குவாரை யின்றியே சுருங்கினாய்,சுருங்கியும்
பெருக்குவாரை யின்றியே பெருக்கமெய்து பெற்றியோய்!
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவனென்று
இருக்குவாய் முனிக்கணங்கள் ஏத்தயானும் ஏத்தினேன்
...
... ...........திருமழிசை ஆழ்வார்

உன்னை யாரும் சுருங்க வைக்காமலே குள்ளமாய் அவதரித்தாய்.
.உன்னை யாரும் விரிக்க வைக்காமலே திரிவிக்கிரமனாய் பெருகி
வளர்ந்தாய். சுருங்கவும் பெருகவும் செய்வது உன் ஆற்றல்.கர்வத்துடன்
செயல்பட்ட மகாபலி,கம்சன்,இராவணன் போன்றவர்களின் தீய குணங்களை
அழித்த தேவாதிதேவனே !...இப்படி வேதங்களும் ரிஷிகளும் துதிப்பது போல்
நானும் துதிக்கிறேன்.

No comments:

Post a Comment