Tuesday, April 10, 2012

பரிபாடல்......


கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!
பிறந்த ஞான்றே நின்னை உட்கிக்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே!
இரு பிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து
...
ஒரு பெயர் அந்தணர் அமர்ந் தோயே!
அன்னை ஆகலின்அமர்ந்தியா நின்னைத்
துன்னி துன்னி வழிபடு வதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.

......பரிபாடல்......கேசவனார் பாட்டு
பிரிந்த தலைவர் வந்து சேர்ந்த பின்பு நீங்காமல் இருக்கும் பொருட்டு
மகளிர் யாழை வாசித்து பாடும் பாட்டை விரும்புவனே! திரு அவதாரம் செய்தவுடனே
இந்திரன் முதலியோர் அஞ்சிய சிறப்புடையோய் ! இரண்டு பிறப்பையும் அப்பிறப்பால் வந்த
இரண்டுபெயரையும் , அன்பு பொருந்திய நெஞ்சத்தையும் உடைய அந்தணர்களின் அறத்தை
விரும்புவோய்!
அத்தன்மைகளை உடையாய் ஆதலின் நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்தி, பொருந்த வழிபாடு செய்கின்றோம் .
அவ்விதம் செய்வதன் பயனாக பின்னும், பின்னும் நின் புகழினும் மேலான பலவாக அவ்வழிபாடுகள்
ஆகும்படி அருள்புரிவாயே!

No comments:

Post a Comment