Wednesday, February 29, 2012

பாகவத அம்மானை

 '....பெற்றதாய் தந்தைமுன்னாட் பேர் பெறசெய் மாதவமோ
குற்றமில்லா சந்திர குலமுன்செய் மாதவமோ
 உத்தமனட்பரீக  முன்னா    ளுத்தவன்செய்   மாதவமோ
சித்திரப்பொற் றேர்நடத்த தேர்விஜயன் செய்தவமோ
அன்பின் முலையூட்ட  யசோதை மாதவமோ 
நம்பியை  யனென்றழைக்க    நந்தகோன் செய்தவமோ...'



..........  சங்கரமூர்த்தி கோனார்
  
பாகவதஅம்மானையில் கண்ணன் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தசேதி
வருகிறது. அது போழ்து தாம் கொண்ட உணர்வை இங்கு இவ்வாறாக பிரதிபலிக்கிறார் ...'இவன் பிறந்தது இவனை பெற்றவர் முன்னால்    செய்த ,
பெருந்தவத்தின் பேறோ ,    இவன் பிறந்த சந்திரகுலம்  [ரோகிணிக்குரியவன் சந்திர பகவான் ] முன்னால் செய்த   பெருந்தவப் பயனோ , உத்தமர்கள் இவன் நட்பை ,
வேண்டியிருந்த தவவலிமையோ,   பின்னாளில் இவனை தனக்கு அழகிய தேர்பாகனாக்கிக் கொண்டு பாரதம் முடிக்க 
அர்ஜுனன் செய்த தவப்பயனோ,   தன் பாலை,   கண்ணனே   குழந்தையாகி  
குடித்து  வளருதல் வேண்டும் என்று யசோதை செய்த   தவப்பலனோ ,. நந்தகோபன் வாஞ்சையாய் மகனே என்றழைக்க செய்த  தவப்பேறோ இன்று கண்ணன் பிறந்திட்டான் என்று உவகை கொள்கிறார்.
   
 கோதைதனபாலன் ,    

Monday, February 27, 2012

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல்


ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று  நாமம் படையாதே - மேவியசீர் 
வித்தாரமுங்  கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.


......பட்டினத்தார்


இந்த உடலிலிருந்து ஒருநாள் ஆவி பிரிவது தெரிந்தும்
உடலை சீராட்டி,பாராட்டி உறக்கம் கொண்டு புதுப்புது வாழ்வு
  காண யத்தனிப்பது போல் நம் உள்ளத்தூய்மையும்,   பாவிஎன்று    ஒருவரும் இகழாத வண்ணம் கொள்ளவேண்டும்.  எனவே பேதலிக்கும் என் நெஞ்சமே ! பாவங்களை கழுவிட ஒவ்வொரு பிறவி என்று போகும் முன்னம் ,இப்பொழுதே  
 ஒரு மாயந்தவன் போன்று   நீ இருந்து 
பாவியாக இராது   உள்ளத்தூய்மை கொண்டு ஞானவழி நில் ! அதுவே பரமனை அடையும் வழி.


கோதைதனபாலன் 

Sunday, February 26, 2012

அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்

அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்: ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவரில்லை பாரில்நின் பாதம்அல்லால் பற்றிலேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே யென்கண்ணனே கதறுகின்றேன் ஆ...

திவ்யபிரபந்தம்


ஊரிலேன் காணியில்லை  உறவுமற்  றொருவரில்லை
பாரில்நின்   பாதம்அல்லால்   பற்றிலேன்   பரமமூர்த்தி
காரொளி   வண்ணனே  யென்கண்ணனே  கதறுகின்றேன்
ஆருளார்  களைகண்  அம்மாஅரங்கமா நகருளானே !



...................தொண்டரடிப்பொடியாழ்வார்

ஊரில் எனக்கென்று காணி எதையும் விரும்பவில்லை;
எந்த உறவுகளையும்  நாடி உறவு கெள்ளும் எண்ணம் இல்லை;
இந்த உலகில் உன் திருமலரடியே தஞ்சம் அல்லாது வேறு எதையும்
நாடும் நெஞ்சம் எனக்கில்லை. ஆகவே, கார்மேகம்  போன்றவனே !
என் கண்ணனே !   அழகு கண்கள் உடையவனே ! திருவரங்கம் நகரில் உறைபவனே !  உன்னையன்றி  எனக்குயாருமில்லையம்மா,
நெஞ்சம்கதற  அழைக்கிறேன்...வந்தாட்கொள்ளும்.


..............என்று மெய்யுருகி பாடுகிறார்.


   



கோதைதனபாலன்.

Friday, February 24, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: மண்ணும் விண்ணுமாலிருஞ் சோலையமர் அழகனே மண்ணிய செல்வமொடு படியளக்கும் மண்டபபடியோனே சித்திரை முழுமதியாய் வைகைவடகரை எழுவோனே ...

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: மண்ணும் விண்ணுமாலிருஞ் சோலையமர் அழகனே மண்ணிய செல்வமொடு படியளக்கும் மண்டபபடியோனே சித்திரை முழுமதியாய் வைகைவடகரை எழுவோனே ...

கண்ணனுக்கு ஒரு வெண்பா

மண்ணும்    விண்ணுமாலிருஞ்    சோலையமர்  அழகனே
மண்ணிய  செல்வமொடு  படியளக்கும்  மண்டபபடியோனே  
சித்திரை  முழுமதியாய்   வைகைவடகரை  எழுவோனே   
எதிர்சேவைக்கே   உன்முன்னம்  உருகிநின்றேனே   !




 கள்ளழகர் பெருமாள்
 அழகர்கோயில் மதுரை
கோதைதனபாலன் 

Tuesday, February 21, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: திருமலைதேன் பொங்குமலர் அள்ளி வரும்மணம் நின்நாமம் இருகரைவளர் வேயொத்த குழலூதும்நாதம் நின்நாமம் கருந்திரள்மேக மின்னலமீட்ட...

கண்ணனுக்கு ஒரு வெண்பா

திருமலைதேன் பொங்குமலர் அள்ளி வரும்மணம் நின்நாமம்
இருகரைவளர் வேயொத்த குழலூதும்நாதம் நின்நாமம்
கருந்திரள்மேக மின்னலமீட்டி தரும்மழையிசை நின்நாமம்
அருள்வளர் சங்கதியாம் என்றுமேஎன்றேனே  எம்பெருமானே !


 



கோதைதனபாலன்

Sunday, February 19, 2012

அனுபவ முத்திரைகள்: சிவராத்திரி

அனுபவ முத்திரைகள்: சிவராத்திரி: சிவராத்திரி காரணத்தை சில பெரியவர்கள் சொன்ன கதையை சிறு வயதில் கேட்டதுண்டு. சுருக்கமாக ஒருவன் காட்டில் புலிக்கு பயந்து மரத்தில் ஏறி உட்கார்ந்த...

சிவராத்திரி

சிவராத்திரி காரணத்தை சில பெரியவர்கள் சொன்ன கதையை சிறு வயதில் கேட்டதுண்டு. சுருக்கமாக ஒருவன் காட்டில் புலிக்கு பயந்து மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டானாம். அது ஒரு   இருட்டு நேரம்.  கீழே இறங்காது விடியலில் புலி போனது அறிந்து  கீழ்ரங்குவோம் என்று இருந்து  விட்டான் ,
எங்கு அசந்து தூங்கி விட்டால் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் தூங்காது இருக்கவும்,அவனது கை அவனையுமறியாமலே இலைகளை பிடுங்கி கிழே போட்டுக் கொண்டிருந்தது. ஆக அவனும் கண் துஞ்சாது இரவைப் போக்கினான். விடியலில் கீழ் இறங்க அவன் முன்னே சிவபெருமான் பிரசன்னம் ஆனார். அவனிடம் நீ மனதை ஒருமுகப் படுத்தியே விழித்திருந்து வில்வ இலையால் பூசித்ததன் பலனை பெறுவாய் என்றாராம்.அப்பொழுதுதான் அவனும் தான் ஏறியிருந்தது வில்வ மரம் என்று உணர்ந்து  மனம் நெகிழ்ந்து பயம் நீங்கி சிவா அருளை பெற்று இனிது வாழ்ந்தான்.

இதன் விளக்கம் யாதெனின் நாம் எப்படிப் பட்ட சஞ்சலத்தில் இருந்த போழ்தும்
இந்த சிவராத்திரி இரவு கண்விழித்து சிவனை பூஜித்து வந்தால் அவன் அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பதே
.

இன்னும் குறிப்பாக மதுரையம் பதியில் இந்த தினத்தன்று எல்லா இனத்தவரும் அவரவர் குலதெய்வங்களை இரவு பூஜித்து வழிபடும் பழக்கம் காலம் காலமாய் இன்றும் உள்ளது.


......சேக்கிழார் .... பெரிய புராணம்

இருவினைப் பாசமும் மலைகள் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டமோ


             மதுரை வடக்கு கோபுரம்

இங்கு சேக்கிழார் திருநாவுக்கரசரை பாடிவரும் பொழுது அவரை சமணர்கள் கல்லில் கட்டி கடலில் மிதக்க விட்டாலும் அமுங்கிவிடாது சிவநாமத்தை மனதிலே நிறுத்தி படகாக கடலில் மிதந்து கரையேறி சிவதலத்தை தரிசித்தார் என்பார். இதன் மறை பொருள்  நாம் அகங்காரம் என்ற கயிற்றில் கட்டப்பட்டு கல்லான மனத்தைக் கொண்டு உலகவாழ்க்கை எனும் கடலில் தத்தளித்த போதும்  நம்மை துணை நின்று காப்பது.,மனதை ரட்சிப்பது   'நம சிவாய' 'என்னும் ஐந்தெழுத்தை தவ வலிமையோடு அப்பழுக்கில்லாமல் சொல்லி வருதல் ஒன்றாலே மட்டும்தான்.
 

     கோதைதனபாலன் 

Saturday, February 18, 2012

அனுபவ முத்திரைகள்: திருமூலர்

அனுபவ முத்திரைகள்: திருமூலர்: உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன் உடம்பினுக் குள்ளேயுறு பொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என் உடம்பினை யானிருந...

திருமூலர்




உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளேயுறு  பொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன்  கோயில்  கொண்டான் என்
உடம்பினை  யானிருந் தோம்புகின்றேனே.
                                                              

...   திருமூலர் திருமந்திரம்

பொதுவாக யாரும் இந்த உடலை ஒரு வெற்றுப்  பொருளாகவே, தேவையற்ற    பொருளாகவே,  வர்ணிப்பர்.
ஆன்மிக நாட்டம் கொண்டோர்  இந்த உடல் நீங்கி ஆத்மா  என்று பரமாத்மாவை
அடையும் என்றே தவம்   இருப்பர்.  இங்கு திருமூலர் தானும் 
அவ்வாறே தன்னுடலை பூத உடலாகப் பாவித்து விட்டொழியும் நினைவில் இருந்ததாக  சொல்லியும்,
மாறாக,      தன்னுடலின் உள்ளேயே, இருந்துகொண்டு   எஞ்ஞான்றும்  தன்னை இயக்கிக் கொண்டே இருக்கும்  'பரமாத்மாவை' , 'சிவத்தை' அறிகிறேன் ; அவனை நான் பூஜிக்க வேண்டும். அன்பே தெய்வமாய் நின்று கோயிலாக என் உடலினை பாவிப்பவனை ,    அவன் கோயிலானா இந்த  உடலை போற்றி பாதுகாப்பேன்,  என்று மனம் விழைகிறார்.






கோதைதனபாலன்.










Friday, February 17, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: திருமால் ஆயர் குலமணி விளக்காநெடிதுயர் எம்மானே, ஆய கலைவிளம்பும் தகையேதன் பிரமமும்நீயே ஆய்ந்தருள் ஆவியில் உறைவளர் ...

கண்ணனுக்கு ஒரு வெண்பா




 திருமால்

 
 
ஆயர்   குலமணி  விளக்காநெடிதுயர்  எம்மானே, 
ஆய கலைவிளம்பும்  தகையேதன்    பிரமமும்நீயே   ஆய்ந்தருள் ஆவியில்  உறைவளர் மறையோனும்நீயே   
ஆய்ந்தசொல் நாராயணனே! நின்நாமம் என்றேனே !


கோதைதனபாலன்               

Wednesday, February 15, 2012

அனுபவ முத்திரைகள்: நம்மாழ்வார்

அனுபவ முத்திரைகள்: நம்மாழ்வார்:  நம்மாழ்வார்  நம்மாழ்வார் காலம் 9-ம நூற்றாண்டின் முற்பகுதி. இவர் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர். குழந்தை பருவம் முதலே ...

நம்மாழ்வார்



 நம்மாழ்வார்   


நம்மாழ்வார்  காலம்  9-ம நூற்றாண்டின் முற்பகுதி. இவர் ஆழ்வார் திருநகரியில்   அவதரித்தவர்.    குழந்தை பருவம் முதலே மௌனியாய் இருந்து புளியமரப் பொந்து ஒன்றில் வளர்ந்திருந்தவர்  என்றொரு வரலாறு இவருக்கு உண்டு. இது சமயம் மதுர கவியாழ்வார்  இவரைக் காண வந்தார். போனதும்   கண்திறவாது ,வாய் பேசாது இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியுற்றார் . அவரைக்காண ஒரு ஜோதி உள்ளுணர்வாய்  உணர்த்த அங்கு வந்தவர்,  என்ன முயற்சிசெய்தும்  சிறிதும் கண்பாராது அசைவு இல்லாது இருந்த கோலம் கண்டு ஒரு உந்துதலில் கேள்வி ஒன்றை சடகோபரை [நம்மாழ்வார் மற்றொரு பெயர்]  பார்த்து கேட்டார்.

'செத்ததின்   வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்.'


உடனேசடகோபர்  ' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' -
-





என்று உறுதிப் பாடான பதில் முதல்முதலாக திருவாய் மலர்ந்தருளினார். அன்றுமுதலே நம்மாழ்வாராய் பிரபந்தங்கள் பலவாக பாடி ஆழ்வார்களுக்குள்ளேயே தலையானவர்  என்று பேர் பெற்றார். சரி, கேள்வியும் பதிலும் என்ன வென்று பார்ப்போம்.
கேள்வியானது இந்த உயிர் உடலைவிட்டு வெளியேறி மறு பிறவி அல்லது
பிரிந்த ஆன்மாவின் மறுநிலை என்ன ? எப்படி அது வாழும்?
                                                                          
ஆன்மா சேருமிடம்  பரமாத்மா.அது  எங்கும்எதிலும்நிறைந்திருக்கக் கூடியது.  உயிரும் உடலும் சேர்ந்திருப்பினும் இரண்டுக்கும் நிரந்தரம் கிடையாது. உடல்  கெட்டு  உயிர் பிரிந்த பின்   அந்த ஆன்மாவானது எந்த,எப்படிப் பட்ட உடலில் சேர்கிறதோ அந்த உடலின் நியதிப்படி நடந்து கொள்ளும்.  என்ன ஒரு அற்புதமான விளக்கம். அத்வைதம் உணர்த்தாத பண்பு , ஆன்மாவின் தத்துவ விளக்கம் இது. வைணவம் போற்றும் இன்னும் பல வேதங்கள்  அழகுற தமிழில் அருளியவர். வர்ணாசிரமத்தை புறந்தள்ளி  நாராயன நாமம் ஒன்றையே எந்தநிலையிலும் அதுவாகி உணரவைத்து இறையுணர்வு காண வித்திட்டவர்.

கோதைதனபாலன்.






 







 






 


Saturday, February 11, 2012

அனுபவ முத்திரைகள்: அருட்பெரும் ஜோதி அகவல்

அனுபவ முத்திரைகள்: அருட்பெரும் ஜோதி அகவல்:  விண்ணுறு  விண்ணாய் விண்ணடு விண்ணாய்  அண்ணி நிறைந்த மருட்பெரும் ஜோதி.. காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலி னோங்கு மருட்பெரும் ஜ...

அருட்பெரும் ஜோதி அகவல்

 விண்ணுறு  விண்ணாய் விண்ணடு விண்ணாய் 
அண்ணி நிறைந்த மருட்பெரும் ஜோதி..
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெரும் ஜோதி..
அனலினு ளனலா யனனடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெரும் ஜோதி..  
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெரும் ஜோதி..
புவியுனுட் புவியாய்ப் புவினடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெரும் ஜோதி..  


 
 

....அருட்பெரும் ஜோதி அகவல்





அண்டசராசர வெளியில் பரந்து கிடக்கும் வானினும் விரிந்த விண்வெளியாய்
அதனிலுள் பரிபூரணமாய் கிடந்து அருள் புரியும் ஜோதிசிவமே!      எங்கும் சுற்றிவரும் காற்றினுள்ளும் காற்றாக நுழைந்து அதன் வலிமையோடு ஒரு வலிமையாய் நின்று  அருள் புரியும் ஜோதிசிவமே!    நெருப்போடு நெருப்பாக உள்தகித்து நின்று தீதானவற்றை பொசுக்கும் இயக்கமாய் இயங்கி அருள் புரியும் ஜோதிசிவமே!   நீர்பரப்பினுள் நீராக நீருக்குள்ளும் நீரூற்றாக பெருகி அணைபோல ஆகி வழி நடத்தி அருள் புரியும் ஜோதிசிவமே!  இந்த மண்ணெங்கும் நீக்கமற நிறைந்து ஒருஅவையின் பெரு உருவாய் விளங்கி 
அருள் புரியும் ஜோதிசிவமே!   


இவ்வாறாக பஞ்சபூதங்களின் இலக்கணங்களாக ஜோதி சிவத்தைபோற்றி துதிக்கிறார் இராமலிங்க வள்ளலார்.










கோதைதனபாலன்.





Thursday, February 9, 2012

அனுபவ முத்திரைகள்: குலசேகர ஆழ்வார்

அனுபவ முத்திரைகள்: குலசேகர ஆழ்வார்: ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் வித...

குலசேகர ஆழ்வார்

 
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் 
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே


அளப்பரிய செல்வங்கள் பெற்று , சேவகர்களும்,தேவகண்ணியர் பலரும் சுற்றி நின்று சேவிக்க விண்ணை ஆளும் யோகமானாலும் சரி, செல்வாக்கோடு பூமியாளும் யோகமானாளும் சரி அதை என் மனது வேண்டாது.மாறாக, தேன்
சொரிந்து நிற்கும் பூக்கள் பலவும் மலரும் சோலையுள்ள திருவேங்கட மலை மீதிருக்கும் சிறிய அளவினதாயினும் நீரூற்றுடைய சுனை எனும் நீர் நிலையில் சிறு மீனாய் பிறக்கும் பிறவியையே வேண்டி நிற்கிறேன்.





குலசேகர ஆழ்வார் தன் பக்தியில் எல்லோரையும் மிஞ்சி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது இந்த பாசுரம். திருமால் உறையும் திருமலையில் பொய்கையில் மீனாய் பிறந்து அவன் திருவடி ஒன்றையே தான் போற்றும் பேராய் கருதி நிற்கிறார்.




கோதைதனபாலன்



 

Tuesday, February 7, 2012

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டி நன்குஉடுத்த பீதக ஆடை அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல்ஊதின போது மரங்கள் நின்ற...

பெரியாழ்வார்

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து 
    கட்டி நன்குஉடுத்த பீதக ஆடை 
அருங்கல உருவின் ஆயர் பெருமான் 
    அவன் ஒருவன் குழல்ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும் 
   மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும் 
இரங்கும் கூம்பும் திருமால்நின்ற நின்ற
    பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே. 
       
.....பெரியாழ்வார் 


மரங்கள் செழிக்க நீரோடுகின்ற பகுதியில் விளையும் நாணல் ஒத்த செடிகளின் மீது தடம் வைத்து நடக்கும் பொது அமுங்கி செத்தை என்ற பேர் பெறுகிறது.அதுவே வளர்ந்து ,மலர்களெல்லாம் உதிர்த்து நிற்கமுடியாது தாழ்ந்து , கருமையழகு கண்களுடன் தோகை விரித்தாடும் மயில் ஒத்த நிறத்தவனான இடையர் குலப்பெருமான்,பல அழகு அணிகலன்கள் பூண்டவனாய் கையில்பிடித்திருக்கும்  கானம் இசைக்கும் குழலாக மாறும்போது அதன் பெருமையை என்னென்று சொல்வேன்? அது வளரும் இந்த உடல் மற்றையது போன்று செத்தையாக வேண்டாம்;  மாறாக திருமாலே, உன் கையில் வைத்திருக்கும் குழல் போன்றே என் உயிர் பக்தியாய் அதில் வளர்ந்து மாறி நிற்க வேண்டும்.


அவர் தன பக்தியை சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.

கோதைதனபாலன்.  














Saturday, February 4, 2012

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்

அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையமளந்தானே...

பெரியாழ்வார்

மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் 
மாணிக் குறளனே தாலேலோ 
வையமளந்தானே தாலேலோ 

.....பெரியாழ்வார்  


பெரியாழ்வார் கண்ணனின் மீதுள்ள பக்தியை தான் பெற்ற குழந்தையாக கருதி அதை போற்றி ,சீராட்டி வளர்த்து தளிர் நடை பயின்று திருமாலை கண்ட முகமாய் தாலாட்டாக சில பாசுரங்கள் பாடியுள்ளார். இதில் அவர் , '  மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு ,இடையிடையே வைரங்கள் பதிக்கப்பட்ட பிரமன் அனுப்பிய அழகு தொட்டிலில் துயில் கொண்டு வளர்பவனே ,சிறுவனாய் வளர்ந்து ,வாமனனாய் மூவுலகம் அளக்கப் பிறந்தவனே ,இந்த வையம் அளந்தவனே கண்ணுறங்குதியோ  தாலேலோ ...!'என்று விளிக்கிறார்.





கோதைதனபாலன்.










Friday, February 3, 2012

பெரியாழ்வார்

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
         நிறமெழ  உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
        மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
       என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா
     என்னுயிர்    காவலனே. 
    ...பெரியாழ்வார் பாசுரம்                                                     .



உரை  கல்  ஒன்றின் மீது தங்கத்தை உரசி அதன் சுடர் விடும் நிறம் பார்த்து அதன் மதிப்பை போற்றுவர். இது போலவே கார்மேக வண்ணனே ! உன் நாமங்களை என் நாவில்  எஞ்ஞான்றும் சொல்லி சொல்லி நனி உயர்வாக்கி, உள்ளத்தே செலுத்தி எனது சித்தத்தை உனக்கே சீராக்கினேன். என் உயிர் காப்பவனே ! உன்னுள் என் சித்தம் கிடப்பது உண்மை போல் நீயும் என்னுள் கிடப்பதும் உண்மையே ,


கோதைதனபாலன்.