Wednesday, February 15, 2012

நம்மாழ்வார்



 நம்மாழ்வார்   


நம்மாழ்வார்  காலம்  9-ம நூற்றாண்டின் முற்பகுதி. இவர் ஆழ்வார் திருநகரியில்   அவதரித்தவர்.    குழந்தை பருவம் முதலே மௌனியாய் இருந்து புளியமரப் பொந்து ஒன்றில் வளர்ந்திருந்தவர்  என்றொரு வரலாறு இவருக்கு உண்டு. இது சமயம் மதுர கவியாழ்வார்  இவரைக் காண வந்தார். போனதும்   கண்திறவாது ,வாய் பேசாது இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சியுற்றார் . அவரைக்காண ஒரு ஜோதி உள்ளுணர்வாய்  உணர்த்த அங்கு வந்தவர்,  என்ன முயற்சிசெய்தும்  சிறிதும் கண்பாராது அசைவு இல்லாது இருந்த கோலம் கண்டு ஒரு உந்துதலில் கேள்வி ஒன்றை சடகோபரை [நம்மாழ்வார் மற்றொரு பெயர்]  பார்த்து கேட்டார்.

'செத்ததின்   வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்.'


உடனேசடகோபர்  ' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' -
-





என்று உறுதிப் பாடான பதில் முதல்முதலாக திருவாய் மலர்ந்தருளினார். அன்றுமுதலே நம்மாழ்வாராய் பிரபந்தங்கள் பலவாக பாடி ஆழ்வார்களுக்குள்ளேயே தலையானவர்  என்று பேர் பெற்றார். சரி, கேள்வியும் பதிலும் என்ன வென்று பார்ப்போம்.
கேள்வியானது இந்த உயிர் உடலைவிட்டு வெளியேறி மறு பிறவி அல்லது
பிரிந்த ஆன்மாவின் மறுநிலை என்ன ? எப்படி அது வாழும்?
                                                                          
ஆன்மா சேருமிடம்  பரமாத்மா.அது  எங்கும்எதிலும்நிறைந்திருக்கக் கூடியது.  உயிரும் உடலும் சேர்ந்திருப்பினும் இரண்டுக்கும் நிரந்தரம் கிடையாது. உடல்  கெட்டு  உயிர் பிரிந்த பின்   அந்த ஆன்மாவானது எந்த,எப்படிப் பட்ட உடலில் சேர்கிறதோ அந்த உடலின் நியதிப்படி நடந்து கொள்ளும்.  என்ன ஒரு அற்புதமான விளக்கம். அத்வைதம் உணர்த்தாத பண்பு , ஆன்மாவின் தத்துவ விளக்கம் இது. வைணவம் போற்றும் இன்னும் பல வேதங்கள்  அழகுற தமிழில் அருளியவர். வர்ணாசிரமத்தை புறந்தள்ளி  நாராயன நாமம் ஒன்றையே எந்தநிலையிலும் அதுவாகி உணரவைத்து இறையுணர்வு காண வித்திட்டவர்.

கோதைதனபாலன்.






 







 






 


No comments:

Post a Comment