சிவராத்திரி காரணத்தை சில பெரியவர்கள் சொன்ன கதையை சிறு வயதில் கேட்டதுண்டு. சுருக்கமாக ஒருவன் காட்டில் புலிக்கு பயந்து மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டானாம். அது ஒரு இருட்டு நேரம். கீழே இறங்காது விடியலில் புலி போனது அறிந்து கீழ்ரங்குவோம் என்று இருந்து விட்டான் ,
எங்கு அசந்து தூங்கி விட்டால் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் தூங்காது இருக்கவும்,அவனது கை அவனையுமறியாமலே இலைகளை பிடுங்கி கிழே போட்டுக் கொண்டிருந்தது. ஆக அவனும் கண் துஞ்சாது இரவைப் போக்கினான். விடியலில் கீழ் இறங்க அவன் முன்னே சிவபெருமான் பிரசன்னம் ஆனார். அவனிடம் நீ மனதை ஒருமுகப் படுத்தியே விழித்திருந்து வில்வ இலையால் பூசித்ததன் பலனை பெறுவாய் என்றாராம்.அப்பொழுதுதான் அவனும் தான் ஏறியிருந்தது வில்வ மரம் என்று உணர்ந்து மனம் நெகிழ்ந்து பயம் நீங்கி சிவா அருளை பெற்று இனிது வாழ்ந்தான்.
இதன் விளக்கம் யாதெனின் நாம் எப்படிப் பட்ட சஞ்சலத்தில் இருந்த போழ்தும்
இந்த சிவராத்திரி இரவு கண்விழித்து சிவனை பூஜித்து வந்தால் அவன் அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பதே.
இன்னும் குறிப்பாக மதுரையம் பதியில் இந்த தினத்தன்று எல்லா இனத்தவரும் அவரவர் குலதெய்வங்களை இரவு பூஜித்து வழிபடும் பழக்கம் காலம் காலமாய் இன்றும் உள்ளது.
......சேக்கிழார் .... பெரிய புராணம்
இருவினைப் பாசமும் மலைகள் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டமோ
மதுரை வடக்கு கோபுரம்
இங்கு சேக்கிழார் திருநாவுக்கரசரை பாடிவரும் பொழுது அவரை சமணர்கள் கல்லில் கட்டி கடலில் மிதக்க விட்டாலும் அமுங்கிவிடாது சிவநாமத்தை மனதிலே நிறுத்தி படகாக கடலில் மிதந்து கரையேறி சிவதலத்தை தரிசித்தார் என்பார். இதன் மறை பொருள் நாம் அகங்காரம் என்ற கயிற்றில் கட்டப்பட்டு கல்லான மனத்தைக் கொண்டு உலகவாழ்க்கை எனும் கடலில் தத்தளித்த போதும் நம்மை துணை நின்று காப்பது.,மனதை ரட்சிப்பது 'நம சிவாய' 'என்னும் ஐந்தெழுத்தை தவ வலிமையோடு அப்பழுக்கில்லாமல் சொல்லி வருதல் ஒன்றாலே மட்டும்தான்.
கோதைதனபாலன்

No comments:
Post a Comment