மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ
.....பெரியாழ்வார்
பெரியாழ்வார் கண்ணனின் மீதுள்ள பக்தியை தான் பெற்ற குழந்தையாக கருதி அதை போற்றி ,சீராட்டி வளர்த்து தளிர் நடை பயின்று திருமாலை கண்ட முகமாய் தாலாட்டாக சில பாசுரங்கள் பாடியுள்ளார். இதில் அவர் , ' மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு ,இடையிடையே வைரங்கள் பதிக்கப்பட்ட பிரமன் அனுப்பிய அழகு தொட்டிலில் துயில் கொண்டு வளர்பவனே ,சிறுவனாய் வளர்ந்து ,வாமனனாய் மூவுலகம் அளக்கப் பிறந்தவனே ,இந்த வையம் அளந்தவனே கண்ணுறங்குதியோ தாலேலோ ...!'என்று விளிக்கிறார்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.
No comments:
Post a Comment