உடம்பினை முன்னம் இழுக் கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளேயுறு பொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.
... திருமூலர் திருமந்திரம்
பொதுவாக யாரும் இந்த உடலை ஒரு வெற்றுப் பொருளாகவே, தேவையற்ற பொருளாகவே, வர்ணிப்பர்.
ஆன்மிக நாட்டம் கொண்டோர் இந்த உடல் நீங்கி ஆத்மா என்று பரமாத்மாவை
அடையும் என்றே தவம் இருப்பர். இங்கு திருமூலர் தானும்
அவ்வாறே தன்னுடலை பூத உடலாகப் பாவித்து விட்டொழியும் நினைவில் இருந்ததாக சொல்லியும்,
மாறாக, தன்னுடலின் உள்ளேயே, இருந்துகொண்டு எஞ்ஞான்றும் தன்னை இயக்கிக் கொண்டே இருக்கும் 'பரமாத்மாவை' , 'சிவத்தை' அறிகிறேன் ; அவனை நான் பூஜிக்க வேண்டும். அன்பே தெய்வமாய் நின்று கோயிலாக என் உடலினை பாவிப்பவனை , அவன் கோயிலானா இந்த உடலை போற்றி பாதுகாப்பேன், என்று மனம் விழைகிறார்.
கோதைதனபாலன்.
No comments:
Post a Comment