Thursday, January 26, 2012

அனுபவ முத்திரைகள்: வள்ளலார்

அனுபவ முத்திரைகள்: வள்ளலார்: அருளமு தெனக்கே யளித்தெரு ணெறிவாய்த் தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ் சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே ...

வள்ளலார்


அருளமு தெனக்கே யளித்தெரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

யாரே யென்னினு மிரங்கு கின்றாற்கு
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவரு நெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

உயிரெல்லாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெல்லாம் விடுகெனச் செப்பிய சிவமே..

.... ராமலிங்க அடிகளார்


நினது அமுதமான அருளை எனக்கீந்து என்னுள் நன்னெறி தன்னை வளர்க்கும் சிவமே !எனது உடலில் இயங்கும் சக்தியில் எல்லாமும்,எனது சித்தமெல்லாமும் நீயும் ஒரு அங்கத்தோடு அங்கமாயென்னை யாண்டு வருகிறாய். இயற்கையின் படைப்பில் ,எல்லா உயிரில் கருணை எங்கெல்லாம்,எப்படியெல்லாம் வெளிப்படுகிறதோ அங்கெல்லாமும் நீயே வியாபித்திருக்கிறாய். எத்தகையவர் ஆயினும் அவர்தம் மீது இரங்கும் மனதினருக்கு எல்லாச் சிறப்பும் ,செல்வமும் சிதம்பரத்தில் உறையும் சிவமே நீ அளிக்கிறாய்.
பொய்மையான , மாயம் நிறைந்த பாதையில் என் மனம் போகா வண்ணம் என்னுள் புகுந்து நன்னெறியில் என்னை செலுத்தும் சிற்சபை கொலுவிருக்கும் சிவமே...
உயிர் வதை செய்யாதிருப்பதே குரு போற்றும் அருள்நெறி என்று பலகாலும் உணர்த்தும் மெய்ப்பொருளே.. இதனால் எல்லா உயிர்களையும் மனதார ஒன்று போல் பார்க்கும் மனத் திண்மையை பெறவைத்து யாவருக்கும் அதை எடுத்துச் சொல்லுதல் முறையே எனக் கூறும் சிவமே... 

என்றெல்லாம் சொல்லி வருகிறார்.. இது 
‘அருட்பெருஞ்சோதி அகவல்’




 கோதைதனபாலன்

Tuesday, January 24, 2012

அனுபவ முத்திரைகள்: திருமூலர் திருமந்திரம்

அனுபவ முத்திரைகள்: திருமூலர் திருமந்திரம்: நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ....

திருமூலர் திருமந்திரம்

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை 
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை 
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் 
நடுவுநின் றார்வழி நானும் நின் றேனே ..... திருமந்திரம் 


உலகத்தில் மனிதனுக்கு சுக ,துக்கங்கள் மாறி மாறி வருவதுவே இயற்கையின் நியதி. ஒன்ற
ில்லாமல் ஒன்று வருவதில்லை. அவ்விதம் வந்தக்கால் நம் மனதை அது சுகமாயினும் சரி,துக்கமாயினும் சரி ஒரே நடுவு நிலைமையான உணர்வில் வைத்து எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்சி இருத்தல் வேண்டும்.அப்படி நின்றவர்க்கு அறிந்திட வேறு ஞானம்ஏதும் இல்லை. என்றும் அதைக் கடைப்பிடிப்பவர்க்கு நரகம் இல்லை.இன்பம் வந்தக்கால் அதுவே நிலை என்று இறுமாந்திராமல் துன்பத்தையும் மறவாது சமமாக பாவிக்கத் தெரிந்தவன் தேவருக்கு சமமாகிறான். அந்தப் புனிதமான நடுவு நிலைமை காட்டும் வழியிலே நானும் பரம்பொருளே உன்னை இறைஞ்சி நிற்கிறேன்.

 கோதை தனபாலன்




Monday, January 23, 2012

அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்

அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்: கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. ! இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...

தாயுமானவர் பாடல்


கைவிளக்கின் பின்னே போய்க்
காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய்
மெய் காண்ப தெந்நாளோ .. !

இது தாயுமானவர்
சிவனை நினைத்து பாடிய வரிகள்.


கைவிளக்கு கொண்டு இருள் நீக்கி அடியெடுத்து பாதை ஒன்று காண முயலுவது போல் மனசாட்சி என்னும் உண்மை விளக்கோடு, இருள் போன்ற பல சுக துக்கங்கள் நிறைந்த வாழ்வில், எல்லாவற்றிர்க்கும் உண்மை பொருளானவனே உன்னை தேடி வருகிறேன்.. நீ விரைந்து என்னை ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ..!





இன்று தை அமாவாசை.. சிவனை நினைந்து அடியார் பாடல் ஒன்றெடுத்தெழுதி மன நிறைவு பெறுகிறேன்.
கோதை தனபாலன்.