Tuesday, January 31, 2012

சிவன் போற்றுதல்

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைபவர்கள் 
சென்னியில் வைத்த சிவனரு ளாலே 
.......திருமந்திரம்.




ஐம்புலன்களையும் வென்ற ஞானிகள் தங்கள் முன் வினையினால் வந்த பலன்களை களைந்து சிவனடி போற்றி விலகாது நிற்கும் நிலை எய்துவர். சராசரி மனிதன் சுபாவங்கள், மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நீரோடை போன்றது. அவரவர் திசைதிருப்பி பலனடைய ஏதுவான ஒன்றே. எனவே தாங்கள் தங்களிடம், தங்களை சுற்றி குவிந்திருக்கும் சிற்றியல்புகளில் நாட்டம் கொள்ளாது நீரோடை போன்ற தங்கள் மனவோட்டத்தை ஈசன் பால் திருப்பி அவன் சிந்தை அகலாது இருத்தலே தங்கள் வினை தீர்க்கும் மார்க்கம் என அறிதல் வேண்டும்.




கோதைதனபாலன்

No comments:

Post a Comment