Friday, April 13, 2012

அனுபவ முத்திரைகள்: .....பரிபாடல்

அனுபவ முத்திரைகள்: .....பரிபாடல்: புலவரை அறியாப் புகழோடு பொலிந்து நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத் தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும் புலவர் ஆய்வு உரைத்த புனைநெடுங் குன...

.....பரிபாடல்


புலவரை அறியாப் புகழோடு பொலிந்து
நிலவரைத் தாங்கிய நிலைமையிற் பெயராத்
தொலையா நேமிமுதல் தொல்லிசை அமையும்
புலவர் ஆய்வு உரைத்த புனைநெடுங் குன்றம்
பலவெனின் ஆங்கவே பலவே பலவினும்
...

நிலவரை யாற்றி நிறை பயன் ஒருங்குடன்
நின்றுபெற நிகழும் குன்றவை சிலவே
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும்
மலர் அகன் மார்பின் மைபடி குடுமிய
குலவரை சிலவே குலவரை சிலவினும்
சிறந்தது கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்த்
தாங்கு நீள்நிலை ஓங்கிரும் குன்றம்.....
.....பரிபாடல்


.......இளம்பெரும்வழுதியார் பாட்டு

மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்

அறிவு எல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்ரவாளம்
முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்து உரைத்தக் குன்றங்களைப் புது வகையால் உரைக்கப் புகுந்தால் பலவாம்.

அப்பலவற்றுள் நிலத்தில் உள்ளோர் பசித் துன்பத்தை நீக்கி நிறை பயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள்
சில. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய
தடாகங்களும், மேகம் படியும் சிகரங்களும் உடைய குலவரைகள் சில சிறந்தன.

அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும்,சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையும்
உடைய மாயோனும்,பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது.

அனுபவ முத்திரைகள்: ......கந்தரலங்காரம்

அனுபவ முத்திரைகள்: ......கந்தரலங்காரம்: காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன நேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித்...

......கந்தரலங்காரம்

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தென்னைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன நேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் துள்ளாடி வாடிப் பதைக்கின்றதே .
......கந்தரலங்காரம்


... தோகைகளுடன் கூடிய மேன்மை மிகுந்த மயிலை
வாகனமாகப் பெற்றவரே ! உதவி ஒரு சிறிதும் இல்லாமல்
தாவிப் படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல ,பாவியாகிய எனது துணையற்ற மனமானது
தளர்ந்து,வாட்டமடைந்து பதிக்கின்றது.எனவே தேவரீர்! உமது
உமது சிறந்த தாமரை போன்ற திருவடிகளுடன் சேர்த்து அடியேனைக் காத்தருள்வீராக.

Tuesday, April 10, 2012

பரிபாடல்......


கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே!
பிறந்த ஞான்றே நின்னை உட்கிக்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே!
இரு பிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து
...
ஒரு பெயர் அந்தணர் அமர்ந் தோயே!
அன்னை ஆகலின்அமர்ந்தியா நின்னைத்
துன்னி துன்னி வழிபடு வதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே.

......பரிபாடல்......கேசவனார் பாட்டு
பிரிந்த தலைவர் வந்து சேர்ந்த பின்பு நீங்காமல் இருக்கும் பொருட்டு
மகளிர் யாழை வாசித்து பாடும் பாட்டை விரும்புவனே! திரு அவதாரம் செய்தவுடனே
இந்திரன் முதலியோர் அஞ்சிய சிறப்புடையோய் ! இரண்டு பிறப்பையும் அப்பிறப்பால் வந்த
இரண்டுபெயரையும் , அன்பு பொருந்திய நெஞ்சத்தையும் உடைய அந்தணர்களின் அறத்தை
விரும்புவோய்!
அத்தன்மைகளை உடையாய் ஆதலின் நாங்கள் விரும்பி நின்பாற் பொருந்தி, பொருந்த வழிபாடு செய்கின்றோம் .
அவ்விதம் செய்வதன் பயனாக பின்னும், பின்னும் நின் புகழினும் மேலான பலவாக அவ்வழிபாடுகள்
ஆகும்படி அருள்புரிவாயே!

Sunday, April 8, 2012

அனுபவ முத்திரைகள்: உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொ...

அனுபவ முத்திரைகள்:
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொ...
: உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பர...

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுன் தீர்த்தெனை யுன்னி லொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே



... .........கந்தரலங்காரம்.


பாற்கடலில் மந்திர மலையை மத்தாக நட்டு ,பாம்பரசு புரியும் வாசுகியை
கயிறாக வளைத்து பார்கடலானது பம்பரம் போல் சுழலுமாறு கடைந்த நாராயண மூர்த்தியின்
மருகனே ! பிறந்த இடங்களில் உழல்வதையும்,இறப்பதையும் நீக்கி அடியேனை ,தேவரீர் நும்மோடு
யான் இரண்டறக் கலந்து உன்னால் ஆட்கொள்ளும் நிலைமை எந்நாளோ , அருள் புரிவீர்...