Thursday, February 9, 2012
அனுபவ முத்திரைகள்: குலசேகர ஆழ்வார்
அனுபவ முத்திரைகள்: குலசேகர ஆழ்வார்: ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன் தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறக்கும் வித...
குலசேகர ஆழ்வார்
வானாளும் செல்வமும் மண்ணரகம் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
அளப்பரிய செல்வங்கள் பெற்று , சேவகர்களும்,தேவகண்ணியர் பலரும் சுற்றி நின்று சேவிக்க விண்ணை ஆளும் யோகமானாலும் சரி, செல்வாக்கோடு பூமியாளும் யோகமானாளும் சரி அதை என் மனது வேண்டாது.மாறாக, தேன்
சொரிந்து நிற்கும் பூக்கள் பலவும் மலரும் சோலையுள்ள திருவேங்கட மலை மீதிருக்கும் சிறிய அளவினதாயினும் நீரூற்றுடைய சுனை எனும் நீர் நிலையில் சிறு மீனாய் பிறக்கும் பிறவியையே வேண்டி நிற்கிறேன்.
குலசேகர ஆழ்வார் தன் பக்தியில் எல்லோரையும் மிஞ்சி விட்டாரோ என்று நினைக்க வைக்கிறது இந்த பாசுரம். திருமால் உறையும் திருமலையில் பொய்கையில் மீனாய் பிறந்து அவன் திருவடி ஒன்றையே தான் போற்றும் பேராய் கருதி நிற்கிறார்.
கோதைதனபாலன்
Tuesday, February 7, 2012
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டி நன்குஉடுத்த பீதக ஆடை அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல்ஊதின போது மரங்கள் நின்ற...
பெரியாழ்வார்
கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து
கட்டி நன்குஉடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவன் ஒருவன் குழல்ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால்நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே.
.....பெரியாழ்வார்
மரங்கள் செழிக்க நீரோடுகின்ற பகுதியில் விளையும் நாணல் ஒத்த செடிகளின் மீது தடம் வைத்து நடக்கும் பொது அமுங்கி செத்தை என்ற பேர் பெறுகிறது.அதுவே வளர்ந்து ,மலர்களெல்லாம் உதிர்த்து நிற்கமுடியாது தாழ்ந்து , கருமையழகு கண்களுடன் தோகை விரித்தாடும் மயில் ஒத்த நிறத்தவனான இடையர் குலப்பெருமான்,பல அழகு அணிகலன்கள் பூண்டவனாய் கையில்பிடித்திருக்கும் கானம் இசைக்கும் குழலாக மாறும்போது அதன் பெருமையை என்னென்று சொல்வேன்? அது வளரும் இந்த உடல் மற்றையது போன்று செத்தையாக வேண்டாம்; மாறாக திருமாலே, உன் கையில் வைத்திருக்கும் குழல் போன்றே என் உயிர் பக்தியாய் அதில் வளர்ந்து மாறி நிற்க வேண்டும்.
அவர் தன பக்தியை சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.
மரங்கள் செழிக்க நீரோடுகின்ற பகுதியில் விளையும் நாணல் ஒத்த செடிகளின் மீது தடம் வைத்து நடக்கும் பொது அமுங்கி செத்தை என்ற பேர் பெறுகிறது.அதுவே வளர்ந்து ,மலர்களெல்லாம் உதிர்த்து நிற்கமுடியாது தாழ்ந்து , கருமையழகு கண்களுடன் தோகை விரித்தாடும் மயில் ஒத்த நிறத்தவனான இடையர் குலப்பெருமான்,பல அழகு அணிகலன்கள் பூண்டவனாய் கையில்பிடித்திருக்கும் கானம் இசைக்கும் குழலாக மாறும்போது அதன் பெருமையை என்னென்று சொல்வேன்? அது வளரும் இந்த உடல் மற்றையது போன்று செத்தையாக வேண்டாம்; மாறாக திருமாலே, உன் கையில் வைத்திருக்கும் குழல் போன்றே என் உயிர் பக்தியாய் அதில் வளர்ந்து மாறி நிற்க வேண்டும்.
அவர் தன பக்தியை சொல்லும் பாங்கு வியக்க வைக்கிறது.
கோதைதனபாலன்.
Saturday, February 4, 2012
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்
அனுபவ முத்திரைகள்: பெரியாழ்வார்: மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையமளந்தானே...
பெரியாழ்வார்
மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ண சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ
.....பெரியாழ்வார்
பெரியாழ்வார் கண்ணனின் மீதுள்ள பக்தியை தான் பெற்ற குழந்தையாக கருதி அதை போற்றி ,சீராட்டி வளர்த்து தளிர் நடை பயின்று திருமாலை கண்ட முகமாய் தாலாட்டாக சில பாசுரங்கள் பாடியுள்ளார். இதில் அவர் , ' மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு ,இடையிடையே வைரங்கள் பதிக்கப்பட்ட பிரமன் அனுப்பிய அழகு தொட்டிலில் துயில் கொண்டு வளர்பவனே ,சிறுவனாய் வளர்ந்து ,வாமனனாய் மூவுலகம் அளக்கப் பிறந்தவனே ,இந்த வையம் அளந்தவனே கண்ணுறங்குதியோ தாலேலோ ...!'என்று விளிக்கிறார்.
கோதைதனபாலன்.
கோதைதனபாலன்.
Friday, February 3, 2012
பெரியாழ்வார்
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா
என்னுயிர் காவலனே.
நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா
என்னுயிர் காவலனே.
...பெரியாழ்வார் பாசுரம் .
உரை கல் ஒன்றின் மீது தங்கத்தை உரசி அதன் சுடர் விடும் நிறம் பார்த்து அதன் மதிப்பை போற்றுவர். இது போலவே கார்மேக வண்ணனே ! உன் நாமங்களை என் நாவில் எஞ்ஞான்றும் சொல்லி சொல்லி நனி உயர்வாக்கி, உள்ளத்தே செலுத்தி எனது சித்தத்தை உனக்கே சீராக்கினேன். என் உயிர் காப்பவனே ! உன்னுள் என் சித்தம் கிடப்பது உண்மை போல் நீயும் என்னுள் கிடப்பதும் உண்மையே ,
கோதைதனபாலன்.
Subscribe to:
Posts (Atom)


