Monday, April 30, 2012

அனுபவ முத்திரைகள்: திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்

அனுபவ முத்திரைகள்: திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்: தலைக்கணம் துகள்குழம்பு சாதிசோதி தோற்றமாய் நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும்,நீடிரும் கலைக் கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக் கொண...

திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்



தலைக்கணம் துகள்குழம்பு சாதிசோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும்,நீடிரும்
கலைக் கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக் கொணா
மலைக்கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்றன் மாட்சியே!



... ....திருமழிசையாழ்வார் ..திருச்சந்த விருத்தம்




மேலான தேவர்கள், கீழான தாவரங்கள் ,பாவமும் புண்ணியமும் கலந்து
பிறக்கும் மனிதர்கள்,விலங்குகள் ஆகியவற்றிடையே பேரொளியாய் அவதரித்து ,
உன் மீது பட்ட காற்று தாவரங்கள் மீதும் பட்டு அவற்றின் பாபங்கள் நீங்கினாலும்,
அழிவற்றையாக விரிந்துள்ள வேத வேதாந்தகங்களை அதன் கருத்தைப் புரிந்து
கொண்டு சப்தமாகப் பாடி, துதிக்க இயலாதவை. மலைத் தொடர் போன்ற உன் சரித்திரங்கள்
உணர்த்தும் பெருமைக்கு நிகர் அப்பெருமையே ஆகும்.

Friday, April 27, 2012

அனுபவ முத்திரைகள்: திருமங்கையாழ்வார்

அனுபவ முத்திரைகள்: திருமங்கையாழ்வார்: பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினன் பெரும் ஆயிரம் பேச நின்ற  பிறப்பிலி பெருகுமிடம் காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமாம...

அனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று...

அனுபவ முத்திரைகள்: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று...
: புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா ! கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே! வள்ளால் ! உன்னை எங்ஙனம்...
புள்வாய் பிளந்த புனிதா! என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா !
கள்வா! கடல் மல்லைக் கிடந்த கரும்பே!
வள்ளால் ! உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே !
... .............. பெரிய திருமொழி .... திருமங்கையாழ்வார்
'கொக்கின் வடிவாக வந்த பகாசுரனுடைய வாயை
கிழித்த புனிதமானவனே! ' என்று நான் உன்னை அழைத்த போழ்தே
என் நெஞ்சத்துள் புகுந்து குடிகொண்டு எனக்கு உன் மீதிருந்த
ஏக்க உணர்வுகளைத் தவிர்த்தவனே, ஒப்பற்ற கள்வனே!
உப்புநீருடைய கடலில் இனிக்கும் கரும்பாய் சயனித்திருப்பவனே!
வள்ளல் போல் அடியாருக்கு அருளை வாரி வழங்குபவனே!
இப்படிப் பட்ட உன்னை நான் எந்நாளும் மறக்க மாட்டேன்

திருமங்கையாழ்வார்

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினன்
பெரும் ஆயிரம் பேச நின்ற  பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமாமுகில் தோய்தர 
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சே!
.......... திருமங்கையாழ்வார் ...பெரிய திருமொழி.
பூமி,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்கின்ற ஐம்பெரும் பூதங்களாய் இருப்பவனும் ,
சகஸ்ர நாமங்களால் ஆராதிக்கப் படுபவனும், கரும அடிப்படையில் பிரப்பற்றவனுமான எம்பெருமான்
 அருள் பெருகுமிடம் ,விண்ணிலிருந்து மழை நீரும் பணியும் சொறிவதற்கு ஏதுவாகக் கார் மேகங்கள்
 சூழ்ந்திருக்கும் எழிலான திருவேங்கடத்தை நெஞ்சமே நீ சென்று அடைவாயாக

Wednesday, April 25, 2012

அனுபவ முத்திரைகள்: திருவாசகம்.

அனுபவ முத்திரைகள்: திருவாசகம்.: கேட்டாரு மறியாதான் கேடோன் றில்லான் கிளையில்லான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே தாயினுக்குத் தவிசிட்டு நாய...