Wednesday, February 29, 2012

பாகவத அம்மானை

 '....பெற்றதாய் தந்தைமுன்னாட் பேர் பெறசெய் மாதவமோ
குற்றமில்லா சந்திர குலமுன்செய் மாதவமோ
 உத்தமனட்பரீக  முன்னா    ளுத்தவன்செய்   மாதவமோ
சித்திரப்பொற் றேர்நடத்த தேர்விஜயன் செய்தவமோ
அன்பின் முலையூட்ட  யசோதை மாதவமோ 
நம்பியை  யனென்றழைக்க    நந்தகோன் செய்தவமோ...'



..........  சங்கரமூர்த்தி கோனார்
  
பாகவதஅம்மானையில் கண்ணன் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தசேதி
வருகிறது. அது போழ்து தாம் கொண்ட உணர்வை இங்கு இவ்வாறாக பிரதிபலிக்கிறார் ...'இவன் பிறந்தது இவனை பெற்றவர் முன்னால்    செய்த ,
பெருந்தவத்தின் பேறோ ,    இவன் பிறந்த சந்திரகுலம்  [ரோகிணிக்குரியவன் சந்திர பகவான் ] முன்னால் செய்த   பெருந்தவப் பயனோ , உத்தமர்கள் இவன் நட்பை ,
வேண்டியிருந்த தவவலிமையோ,   பின்னாளில் இவனை தனக்கு அழகிய தேர்பாகனாக்கிக் கொண்டு பாரதம் முடிக்க 
அர்ஜுனன் செய்த தவப்பயனோ,   தன் பாலை,   கண்ணனே   குழந்தையாகி  
குடித்து  வளருதல் வேண்டும் என்று யசோதை செய்த   தவப்பலனோ ,. நந்தகோபன் வாஞ்சையாய் மகனே என்றழைக்க செய்த  தவப்பேறோ இன்று கண்ணன் பிறந்திட்டான் என்று உவகை கொள்கிறார்.
   
 கோதைதனபாலன் ,    

Monday, February 27, 2012

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல்


ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவிஎன்று  நாமம் படையாதே - மேவியசீர் 
வித்தாரமுங்  கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி.


......பட்டினத்தார்


இந்த உடலிலிருந்து ஒருநாள் ஆவி பிரிவது தெரிந்தும்
உடலை சீராட்டி,பாராட்டி உறக்கம் கொண்டு புதுப்புது வாழ்வு
  காண யத்தனிப்பது போல் நம் உள்ளத்தூய்மையும்,   பாவிஎன்று    ஒருவரும் இகழாத வண்ணம் கொள்ளவேண்டும்.  எனவே பேதலிக்கும் என் நெஞ்சமே ! பாவங்களை கழுவிட ஒவ்வொரு பிறவி என்று போகும் முன்னம் ,இப்பொழுதே  
 ஒரு மாயந்தவன் போன்று   நீ இருந்து 
பாவியாக இராது   உள்ளத்தூய்மை கொண்டு ஞானவழி நில் ! அதுவே பரமனை அடையும் வழி.


கோதைதனபாலன் 

Sunday, February 26, 2012

அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்

அனுபவ முத்திரைகள்: திவ்யபிரபந்தம்: ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவரில்லை பாரில்நின் பாதம்அல்லால் பற்றிலேன் பரமமூர்த்தி காரொளி வண்ணனே யென்கண்ணனே கதறுகின்றேன் ஆ...

திவ்யபிரபந்தம்


ஊரிலேன் காணியில்லை  உறவுமற்  றொருவரில்லை
பாரில்நின்   பாதம்அல்லால்   பற்றிலேன்   பரமமூர்த்தி
காரொளி   வண்ணனே  யென்கண்ணனே  கதறுகின்றேன்
ஆருளார்  களைகண்  அம்மாஅரங்கமா நகருளானே !



...................தொண்டரடிப்பொடியாழ்வார்

ஊரில் எனக்கென்று காணி எதையும் விரும்பவில்லை;
எந்த உறவுகளையும்  நாடி உறவு கெள்ளும் எண்ணம் இல்லை;
இந்த உலகில் உன் திருமலரடியே தஞ்சம் அல்லாது வேறு எதையும்
நாடும் நெஞ்சம் எனக்கில்லை. ஆகவே, கார்மேகம்  போன்றவனே !
என் கண்ணனே !   அழகு கண்கள் உடையவனே ! திருவரங்கம் நகரில் உறைபவனே !  உன்னையன்றி  எனக்குயாருமில்லையம்மா,
நெஞ்சம்கதற  அழைக்கிறேன்...வந்தாட்கொள்ளும்.


..............என்று மெய்யுருகி பாடுகிறார்.


   



கோதைதனபாலன்.

Friday, February 24, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: மண்ணும் விண்ணுமாலிருஞ் சோலையமர் அழகனே மண்ணிய செல்வமொடு படியளக்கும் மண்டபபடியோனே சித்திரை முழுமதியாய் வைகைவடகரை எழுவோனே ...

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா

அனுபவ முத்திரைகள்: கண்ணனுக்கு ஒரு வெண்பா: மண்ணும் விண்ணுமாலிருஞ் சோலையமர் அழகனே மண்ணிய செல்வமொடு படியளக்கும் மண்டபபடியோனே சித்திரை முழுமதியாய் வைகைவடகரை எழுவோனே ...

கண்ணனுக்கு ஒரு வெண்பா

மண்ணும்    விண்ணுமாலிருஞ்    சோலையமர்  அழகனே
மண்ணிய  செல்வமொடு  படியளக்கும்  மண்டபபடியோனே  
சித்திரை  முழுமதியாய்   வைகைவடகரை  எழுவோனே   
எதிர்சேவைக்கே   உன்முன்னம்  உருகிநின்றேனே   !




 கள்ளழகர் பெருமாள்
 அழகர்கோயில் மதுரை
கோதைதனபாலன்