Monday, June 25, 2012

கந்தரலங்காரம்.




தடக்கொற்ற வேண்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

............கந்தரலங்காரம். 

விசாலமான வெற்றியை உடைய முருகப் பெருமானின் மயிலே !உலகினில் துன்பங்கள் நீங்கும் பொருட்டு உன்னை முருகப் பெருமான் செல்ல விடுவாரானால் வாடா திசையில் உள்ள மேரு மலைக்கு அப்பாலும்,சூரியனுக்கு அப்பாலும்,பொன்மயமான சக்ரவாள மலைக்கு அப்பாலும் ,எட்டு திசைகளுக்கு அப்பாலும் நீ உலாவுவாய் 











Wednesday, June 20, 2012

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்

அனுபவ முத்திரைகள்: பரிபாடல்..செவ்வேள்: நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன் இருநிலத் தோரும் இயை கென ஈ...

பரிபாடல்..செவ்வேள்


நிலவரை அழுவத்தான் வானுறை புகல் தந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்சிமன்
இருநிலத் தோரும் இயை கென ஈத்தநின்
தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத்து அவளோடு
மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை ..

பரிபாடல்..செவ்வேள்
கடவுள் வாழ்த்து ..நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

'முருகவேளே! தேவலோகத்தில் நீ எழுந்தருளியிருப்பது
போலவே இவ்வுலகத்தும் எழுந்தருளியிருக்கும் விருப்பத்தைக்
கொண்டு அறிவு எல்லையால் அறியப்படாத கடம்பினை மேவித்
தேவர்கள் அடையும் இன்பத்தை மக்களும் அடைக , என்று திருவருள்
புரியும் திருப்பரங்குன்றத்தின் கண்ணே நீ வள்ளி நாச்சியாரை மனம் புரிந்து
அருளியது வானுலகத்தில் தேவ யானையை மணந்ததர்க்கு மாறாக
இவ்வுலகத்தில் புரிந்த செயல் போலும்.

Sunday, June 17, 2012

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....

அனுபவ முத்திரைகள்: திருநாவுக்கரசர்....: திருநாவுக்கரசர்.... எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது. 'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே அடக்குவி...

திருநாவுக்கரசர்....


திருநாவுக்கரசர்....

எல்லாம் கடவுள் செயலே என்று திருத்தாண்டகப் பாட்டில் அவர் பாடியது.

'ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால்ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே ...

திருநாவுக்கரசரை சமணம் தழுவிய மன்னன் , பலவகையிலும் ,குறிப்பாய் கல்லைக் கட்டி கடல் நீர் நடுவே மிதக்கவிட்டு ,சைவத்தை தூற்றிய காலை இவர் பாடும் பாடலிது.    'எகத்தாளமிடுவோரும்   ஆட்டம் போடுவார்; அவரை நீ அடக்கப் புகுந்தாலும் அடங்கி விடுவர்;பாடாதவரும் பாடுவார்; உன்னை விட்டு விரட்டி ஓட வைத்தாலும்  ஓடுவர்; உள்ளம் உருகியே உன்னை நினைந்து  இருக்கவும் வைத்தாலும் இருப்பார். ; 
 பாட வும்  செய்வர்; பணிந்து செய்யும் வேலைகளையும் செய்வர,   உன் நெற்றிக் கண்ணைத் திறக்காத போதும் நீ காட்டும் நெறிதனை கண்டு செல்பவர்.  இப்படியிருக்க நான் உன்னையே நினைந்திருக்க,உன் அருளாலே  என்னைச் சுற்றியுள்ள சுடுநீரும் தண்ணீராம்; கல்லும் நான் ஈடேறும்  தெப்பமாம். 



இதையே கவியரசு தன் திரைப் பாட ல் ஒன்றில் கண்ணனை நினைத்து பாடும் பாடலுக்கு  கையாண்டுள்ளார்என்பது நினைவு கூரத்தக்கது.

Wednesday, June 13, 2012

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி

அனுபவ முத்திரைகள்: .....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி: குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை இலங்குமரர் கோமான...

.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி


குன்றொன்றின் ஆய குறமகளிர் கோல்வளைக் கை
சென்று விளையாடும் தீங்கழை போய் - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இலங்குமரர் கோமான் இடம் .


.....பேய்யாழ்வார்....மூன்றாம் திருவந்தாதி 


திருவேங்கடமலை தவிர வேறொரு இடமும் அறியாத குறத்தியர் ,
அழகிய வளையல்கள் கைகளில் ஊஞ்சலாட மூங்கில் மரங்களை வளைப்பார்.
அந்த மூங்கில்களோ சந்திர மண்டலமளவு ஊடுருவி ,ராகுவைத் தவிர்த்து
சந்திரனை விடுவிக்கும்.அத்தகு திருவேங்கட மலையே மேலுலகிலுள்ள
சிரஞ்சீவிகளான புருஷோத்தமன் குடியிருக்கும் ஸ்தலமாகும்.