Monday, January 23, 2012

அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்

அனுபவ முத்திரைகள்: தாயுமானவர் பாடல்: கைவிளக்கின் பின்னே போய்க் காண்பார் போல் மெய்ஞ்ஞான மெய்விளக்கின் பின்னேபோய் மெய் காண்ப தெந்நாளோ .. ! இது தாயுமானவர் சிவனை நினைத்து பாட...

தாயுமானவர் பாடல்


கைவிளக்கின் பின்னே போய்க்
காண்பார் போல் மெய்ஞ்ஞான
மெய்விளக்கின் பின்னேபோய்
மெய் காண்ப தெந்நாளோ .. !

இது தாயுமானவர்
சிவனை நினைத்து பாடிய வரிகள்.


கைவிளக்கு கொண்டு இருள் நீக்கி அடியெடுத்து பாதை ஒன்று காண முயலுவது போல் மனசாட்சி என்னும் உண்மை விளக்கோடு, இருள் போன்ற பல சுக துக்கங்கள் நிறைந்த வாழ்வில், எல்லாவற்றிர்க்கும் உண்மை பொருளானவனே உன்னை தேடி வருகிறேன்.. நீ விரைந்து என்னை ஆட்கொள்ளும் நாள் எந்நாளோ..!





இன்று தை அமாவாசை.. சிவனை நினைந்து அடியார் பாடல் ஒன்றெடுத்தெழுதி மன நிறைவு பெறுகிறேன்.
கோதை தனபாலன்.

Saturday, January 14, 2012

அனுபவ முத்திரைகள்: உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்

அனுபவ முத்திரைகள்: உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்: உத்திரகோசமங்கை ஆ திசிதம்பரனார் அலங்காரத்தில் உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் காணும் நினைவு மனதில் பல வருடங்கள் புதைந்து க...

உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம்

 உத்திரகோசமங்கை 
  திசிதம்பரனார்  
 அலங்காரத்தில் 

உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனம் காணும் நினைவு மனதில் பல வருடங்கள் புதைந்து கிடந்தது கடந்த வாரம் இதே தினம் சனிக்கிழமை இரவு  நிறைவேறியது.எனது சக தோழியருடன் சிறப்பு ஏற்பாடு முன்னதாக செய்துவிட்டு காரைக்குடி சுற்றியுள்ள கோயில்கள் தரிசனம் முடித்து இரவு 12 மணிக்கு உத்திரகோச மங்கை அடைந்தோம்.இக்கோயில் ராமநாதபுரம் சமீபமாக வலதுபுறம் சுமார் 9 கிமீ தூரத்தில்  வரும் . இது ஒரு தனித்த சிறு கிராமம்,சுற்றிலும் பொட்டல் நிலங்களே அதிகம். இது ராமநாதபுர    சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழிபாடு திருவாவடு துறை ஆதீனம் கையில்.
இது ஆதி சிதம்பரனார் கோயில். ஆகாயம் மகிமை சொல்லும் சிவன் எழுந்தருளியுள்ளார் . இங்குள்ள நடராஜர் சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டது. வருடம் பூராவும் சந்தனக் காப்பில் இருக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரமன்று சுமார் இருபதுக்கும் மேலான அபிஷேகம் நடைபெறும். தயிர், மாவு அபிஷேகம் போது கயிலாயநாதனை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது. மற்றைய நாளிலோ ,மாதத்திலோ இவை கிடையாது. அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்வர். இதைக் காணவே பெருந்திரளான கூட்டம் அலைமோதுகிறது. நாங்கள் இடிபாட்டுடன் சிறப்பினராகவே உள நுழைந்த போதும்  அமர்ந்தநிலையில் அபிஷேகம் பல கண்டபிறகு, சற்று முன்னேறி உள்ளே சந்நிதியில் நின்றவாறே அலங்காரம் ,தீபாரதனை காணுமுன்....சிவ நாமங்கள் பல சொல்லியும் , பலர் சொல்லக்கேட்டும் இருந்த நிலையை எண்ணும்போது,கால்நரம்புகள்,சதைகள்  ரத்தம் சுண்டியதுபோன்ற உணர்வுடன் வலிமை குறைந்த நிலையில், 'தென்னாடுடைய சிவனே போற்றி'என்ற அந்த சிவன் நாமமே நாவில் வென்று நின்றது. எங்கும் எதிரொலித்தது. ஆமாம் பற்றறுத்து வந்து நிற்பவரைத்தானே சிவன் மகிழ்வுடன் ஏற்கிறான்...என்று நாயன்மார்கள் சொல்லி பாடுவது உணர்ந்தேன்..மனம் நெகிழ்ந்தேன்...
 இது சமயமே ராமநாதபுரம் ராணி, வீட்டார் உள்நுழைகின்றனர். இதற்குள் உற்சவருக்கு அபிஷேகமும் ,அலங்காரமும் முடிகிறது. தீபா
ர்த் தனைக்கு முன்னதாக முறையே பசுமாடு அழைத்து வரப்பட்டு அதற்கு வஸ்திரம் .பூமாலை சார்த்தப்பட்டு தீபம் காட்டி ,திரைசீலை சற்று பாதம் மட்டுமே தெரியும் படியாக விலக்கி அதற்கு காட் டப்படுகிறது.பின்னர் இதுபோன்றே வரிசையாக சிறுவன் ஒருவன்,சிறுமி ஒருத்தி,அர்ச்சகரில் ஒருவர் பின்னர் இறுதியாக ராணி அம்மையாருக்கு காட்டப்பட்ட பிறகே தீபாரதனை வெகு சிறப்பாக  காட்டப்பட ஆருத்ரா தரிசனம் முழுமை அடைகிறது.  மரகத நடராஜர் ,பொன்னிற உடலில் புலித்தோ லொத்த உடையை அரைக்கிசைத்து காட்சி தருதல் கண்கொள்ளா காட்சி. 
வெளி மண்டபத்தில் நடராஜர் வெண்மை கோலத்தில் பார்வதி சம்மேளராய்  காட்சியளிக்கிறார்.
மரகதநடராஜர் அலங்காரம் காலை சிலமணி நேரங்களே இருக்கும். பிறகு மறுபடியும் சந்தனக் காப்பிட்டு நடை மூடுவர், மறுபடியும் அடுத்த வருடமே இந்த வழிபாடு .

  

கோதைதனபாலன் 








 

Wednesday, November 30, 2011

சீரடி சாய் பாபா

பொதுவாக எனக்கு துறவிகள் செயல்பாடுகள் மீது அவ்வளவாக ஈடுபாடு இராது.சித்தர்கள் மீது ஒரு தனி அபிமானம் உண்டு. அந்த வரிசையில் ரமணர்,வள்ளலார் இந்த இருவர் மீதிலும் பக்தி கலந்த மரியாதை இருக்கும். இப்படி நான் பேசுவதால் இறைவன் என்ற ஒரு மாபெரும் சக்தியை நம்பாதவள் என்ற அர்த்தம் கிடையாது.தெய்வங்களை வணங்க பிரியப்படுபவள்.சன்னதியில் நின்றால் என்ன வேண்டலாம் என்று குழம்புவேன் .மொத்தத்தில் 'எல்லோரையும் நன்றாக வை.உன்னை அன்றி எதுவும் நிகழாது .எங்களுக்கு எது நல்லது என்று   நீயே மனம் கோணாது தெரிவு செய்...'....மனசுக்குள் சொல்லிவிட்டு வந்து விடுவேன்.  எப்படி பட்ட கஷ்டத்திலும் இதே வேண்டுதல் தான் அவன் முன் வைப்பேன்.
இப்படி இருக்கையில் சத்யா சாய்பாபா பற்றி கேள்விப்படும்போது அவர் புட்டபர்த்தியில்  ஏற்படுத்திய இலவச மருத்துவம் மனதை கவர்ந்தது.புத்தகங்களும் படித்து பார்த்தேன். பின் மெதுவாக சிலர் சீரடி சாய்பாபாவை பற்றி பேசுவது அடிக்கடி என் கவனத்தை ஈர்த்தது. மதுரையிலும் அவருக்கு கோயில் எழுப்பி உள்ளதை அறிய நேர்ந்தது.போனவாரமும் சென்றுவந்தேன் . அதற்கு  பின்னரே இதை எழுதுகிறேன்.
அவரை தரிசித்து ,அங்குள்ள வாசகங்களை படித்தேன்.முருக தெய்வம் சொல்வது போல் 'யாமிருக்க பயமேன்' என்றிருந்தது, பின்னர் இருபக்கத்திலும்
'நம்பிக்கை'....' பொறுமை' வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. உண்மைதானே..நம்பிக்கை மட்டும் நாம் வைத்தல் போதுமானதல்ல....
 கைகூடும் காலம் வரை பொறுமை கைப்பிடித்தல் அவசியம் அன்றோ? பொறுத்தார் பூமியாள்வாரன்றோ?
பிறகு சுற்று பிரகாரம் வருகையில் ஒரு அடுக்கில் தீமூட்டி எரிந்து கொண்டிருந்தது. அதன் விளக்கம் ‘இங்கே உன் பாவங்கள் பொசுக்கப்படுகின்றன, அந்த சாம்பலே உனக்கு பிரசாதமாய் திரு நீறாய் அளிக்கப்படுகிறது’...இந்த உண்மை புரிந்து கொள்ளக்கூடியதே. சைவசித் தாந்தம் இதைத்தானே சொல்கிறது. மேலும் தொடர்ந்து படித்த ஒரு வாசகம் என்னை சற்று நேரம் சிந்திக்க வைத்துவிட்டது.
‘  நீ எப்பொழுது அழைத்தாலும் உன்னை இறைவனிடம் சேர்க்க வழித்துணையாய் நான் வருவேன்,மறைந்தேன் என எண்ண வேண்டாம்’
இதுகா றும் இப்படி எந்த ஞானியும் சொன்னதாக நான் அறிந்ததில்லை. ஏதோ ஒன்று என் மனதில் ஆழமாய் புரியதலைப்பட்டது. மனிதனோடுமனிதனாகவே
  நம்மை இறைவனிடம் அழைத்து செல்லக்கூடிய உயரிய சக்தி அவருள் எந்தக்காலமும் உதயமான வண்ணமே இருக்கும் என்பதுதான் அது. மனம் நெகிழ்வுற்றது. வள்ளலார்,'அன்பேசிவம்’ என்று கூறி,தீ என்றும் அணையாது மூட்டப்பட்டு அனைவரது பசி தீர்க்கும்  வழிவகை செய்தார்.
 இவர் இறைவனை மறவாதிருக்கும் வழி காண்பிக்கிறார்..   நன்றி பெருக்குடன் இதை எழுதிவிட்டேன்....



 கோதைதனபாலன்